Tuesday, 1 September 2015

my new blog

இன்று முதல் எனது புதிய blog id
www.pathillai.blogspot.in

Saturday, 29 August 2015

மோதிரம்

சில காரணங்களால் மோதிரத்தை பற்றிய என்னுடைய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டேன். சில ஆய்வுகளுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். 

Sunday, 23 August 2015

கோவில்கள், நவ கிரகங்கள்

எல்லா குலதெய்வ கோவில்களும் பெரும்பாலும் நேர்கோட்டு வடிவம் அல்லது  ட வடிவத்திலேயே இருக்கின்றன. எந்த குலதெய்வ கோவில்களிலும் நவகிரக வழிபாடே கிடையாது.
மற்ற கோவில்கள் ஓ என்ற (ஓம் அல்ல) வடிவில் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற வடிவில் கட்டப்பட்ட கோவில்கள் எதுவுமே குலதெய்வ கோவில்கள் அல்ல. மேலும் இவற்றில் நவகிரக வழிபாடு இருக்கிறது.
குலதெய்வ கோவில்கள் தான் ஓ வடிவ கோவில்களுக்கும் முந்தைய காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
நவகிரக வழிபாடு என்பது சரியா? என்பதையும் யோசிக்கிறேன். என் வாழ்க்கையில் 18 வருடங்களுக்கு முன் நவகிரக கோவில்களுக்கு சென்று வழிபட ஆரம்பித்த பின்னர் தான் அதிகமான, சமாளிக்க முடியாத கஷ்டங்கள் உண்டானது.
முதன்முதலில் சூரியன் கோவிலுக்கு தான் சென்றேன். பிறகு எல்லா கிரக கோவில்களுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன்.

நான் பாடும் பாடல்

Sunday, 16 August 2015

ஜோதிட ஆராய்ச்சி

இன்றைய காலத்தில் பலர் ஜோதிட ஆராய்ச்சி என்ற பெயரில், ஜோசியம் போன்ற விசயங்களின் மீதுள்ள ஈர்ப்பால், இலவசமாக ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம், குறைந்த கட்டணத்தில் ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம் என்ற வாக்குறுதிகளை நம்பி, ஜாதகம் கணிக்கும் முயற்சியில், பயிற்சியில்  ஈடுபடுகிறார்கள்.
ஆனால் எனக்கு தெரிந்தவரை 99.99% ஜோசியர்கள், சராசரி மனிதர்களுக்கு கிடைக்ககூடிய சந்தோசங்களை பெறாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஜாதகம் கணிப்பவர்கள், பரிகாரம் செய்து கொடுப்பவர்கள், குறி சொல்பவர்கள் எல்லோருடைய நிலையும் இதுதான். 
இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
மீதம் இருக்கும் பணக்கார ஜோசியர்களும் எத்தனை நாட்கள் அந்த வசதியை அனுபவிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் எத்தனை நாட்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

Friday, 7 August 2015

விருந்தோம்பல்

தமிழனின் தற்போதைய விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிப்பவை டீ, காபி, வடை, பஜ்ஜி, சமோசா, மதுபானங்கள் (பல நண்பர்களுக்கும், பல அலுவலக ஊழியர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் மதுபானம் விருந்தோம்பலாக இருக்கிறது)
டீ, காபி சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று எல்லா இயற்கை மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
ஆனால் வெள்ளைக்காரன் காலத்திற்கு முன்பு வரை தமிழனின் விருந்தோம்பலில் முதல் இடத்தில் இருந்த மோர் தற்போது உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
மோர் விற்கும் வண்டிகளில் மோருக்கு பதிலாக பழைய சோறை கரைத்து மோர் என்ற பெயரில் விற்கிறார்கள்.
மேலும் மாட்டிற்கு தீவனமாக ரசாயனம் சேர்க்கப்படுவதாலும், ரசாயன ஊசி போட்டு பால் கறக்கப்படுவதாலும், பாலில் ரசாயன குணமே இருக்கிறது. மேலும் பல நிறுவனங்கள் பால் கெட்டுபோகாமல் இருக்கவும் (பாக்கெட்டுகளில் நீங்கள் வாங்கும் பால் என்று கறந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு கறந்ததாக கூட இருக்கலாம்.), கெட்டி தன்மைக்காகவும் ரசாயனம் சேர்க்கிறார்கள்.  இதனால் இதில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா பால் பொருட்களும் ரசாயன தன்மை கொண்டதாகவே இருக்கிறது. மோர் உட்பட.



Thursday, 6 August 2015

தங்கம், வெள்ளி

இடுப்பு, இடுப்புக்கு கீழ் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது எதிர்மறை சக்தி தரும்.

தங்கத்தில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது மிக விரைவாக எதிர்மறை சக்தி தரும்.(ஒட்டியாணம், கொலுசு, மெட்டி)

வெள்ளியில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது  எதிர்மறை சக்தி தரும். ஆனால் தங்கத்தோடு ஒப்பிடும் போது  இதன் வேகம் குறைவாக இருக்கும்.(அருணா கயிறு, கொலுசு, மெட்டி)

anatomic treatment

https://www.facebook.com/pages/Anatomic-Therapy/310438268995881?fref=ts

anatomic treatment பற்றிய தகவல்களை இந்த link இல் சென்று பாருங்கள் 

anatomic treatment 4

anatomic treatment 3


Monday, 3 August 2015

பூமி தாய்

ப்ரம்ஹ ஸ்ரீ அனந்தராம தீட்சிதர்  எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.
இதை பூமி தாய் சொல்வதாக உள்ளது.
சில விசயங்களை என்னால் தரிக்க இயலாது. அதை செய்தால் அவர்களுக்கு நான் அதிக துன்பங்களை கொடுப்பேன் என்று பூமி தாய் சொல்வதாக இருக்கிறது.
தங்கத்தை பூமியில் வைக்க கூடாது.
பெண்களின் ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.
யந்திரங்கள், சிலைகள், சாளகிராம கல் பூமியில் வைக்க கூடாது.
சிலைகளுக்கு, சாளகிராம கல்லுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமி  மீது படக்கூடாது.

இங்கே ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை.
சிலைகளுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமிக்கு தான் செல்கிறது. இது சரியா?
அல்லது அபிஷேகம் செய்வது தவறா?

Sunday, 2 August 2015

ஓம்

"ஓம்" என்பதை என்னால் மந்திரமாக பார்க்க முடியவில்லை.
"ஓம்" என்ற சொல்லுக்கும் கலியுகத்தின் அழிவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

காரணம் மந்திரங்களை "ஓம்' என்று சொல்லியபிறகு சொல்லும் போது நற்பலன்கள் கிடைக்காமல் கெடுபலன்களே கிடைப்பதாக கருதுகிறேன்.

"ஓம்" என்ற சொல்லை சொல்லாமல் மந்திரங்கள் சொல்லும் போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

உதாரணமாக,

"ஓம் நமசிவய"
என்று சொல்லும்போது கெடுபலன்களே  உண்டாவதாக கருதுகிறேன்.

ஆனால் ஓம் என்று சொல்லாமல் வெறுமனே

"நமசிவய"

என்று சொல்லும்போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

என்னுடைய பழைய பதிவொன்றில் பெண்கள் ஓம் சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தேன்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தவிர்க்க வேண்டிய சொல் "ஓம்" என்பது என் கருத்து.

Tuesday, 28 July 2015

சீவல் சுண்ணாம்பு

சீவல் சுண்ணாம்பு பதநீர் இறக்குவதற்காக பிரத்யேகமாக தூத்துக்குடியில் தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
இந்த சீவல் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால் அதை தான் கள்  என்று சொல்கிறார்கள்.
சீவல் சுண்ணாம்பை சேர்ப்பதால் தான் கள், பதநீராகிறது என்கிறார்கள்.

Saturday, 25 July 2015

சமையலறை

சமையலறை வீட்டின் அக்னி மூலையில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது என் கருத்து.
வீட்டின் கிழக்கு, வடக்கு பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது என் கருத்து.
காரணம் நேர்மறை சக்தியை கிழக்கு, வடக்கு திசையில் இருந்து தான் நாம் பெறுகிறோம். உணவையும் நாம் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து சமைத்து எடுத்து பயன்படுத்தும் போது  நேர்மறை சக்தி கிடைக்கும்.

வரலாறு முக்கியம் அமைச்சரே

எல்லா சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நான் படித்தது கிடையாது. ஆனால் திருமூலரை பற்றி படிக்கும் போது ஒரு தகவல் கிடைத்தது. அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து அவன் மனைவியோடு கில்மா மேட்டரில் ஈடுபடுகிறார்.

நவகிரகங்களில் சில கிரகங்கள் மற்ற கிரகங்களின் மனைவிகளோடு கில்மா மேட்டர்களில் ஈடுபடுகிறார்கள். நவகிரகங்கள் பற்றிய கதைகளை படித்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள்களும் கில்மா மேட்டர்களில்  விதி விலக்கல்ல.

ஆனால் பல சாமியார்கள் இதை மறைத்து கடவுள்கள், கிரகங்கள், சித்தர்கள் யோக்கியமானவர்கள், அவர்களை தான் வணங்க வேண்டும், காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று புரளியை பரப்பி வருகிறார்கள். 

நான் என்ன மசுருக்குடா கடவுளை அடையணும்??????

Sunday, 19 July 2015

பாகுபலி

பாகுபலி திரை விமர்சனம்
வடிவேலு:- மாமி அந்த பொண்ணு நிறை மாத கர்ப்பிணிணு சொல்றீங்க. அவ புருஷன் அவளை மாடியில் இருந்து தள்ளி விட்டுட்டான்னு சொல்றீங்க. அப்புறம் என்ன ஆச்சு?
மாமி:- யாருக்கு தெரியும்???அவன் தான் கட் பண்ணிட்டு தொடரும்னு போட்டானே!!!!!!

Thursday, 16 July 2015

shock absorber

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு முதுகு வலி அல்லது முதுகு சம்பந்தமான பிரச்சனைகள் வருகின்றன. இதற்க்கு காரணம் இரு சக்கர வாகனங்களில் இரண்டு சக்கரங்களின் நடு மைய புள்ளியில் இருந்து 90 டிகிரியில் செங்குத்தாக shock absorber பொருத்தப்படாததே.
அவ்வாறு பொருத்தப்பட்டிருந்தால் முதுகு சம்பந்தமான பிரச்சனைகள் வராது. 
இது பற்றிய தகவலை எல்லா இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும், facebook மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். 
என்னுடைய இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏற்கெனவே பிரமிட் பூமியை பாலைவனமாக மாற்றும் சக்தி படைத்தது என்பது பற்றிய தகவலை உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலக நாடுகளில் இருக்கும் பத்திரிகைகள் வரை, உள்ளூர் டிவி சேனல்கள் முதல் உலக அளவில் பிரசித்தி பெற்ற டிவி சேனல்கள் வரை அனுப்பினேன்.
ஆனால் ஒரு பரதேசியும் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

Tuesday, 7 July 2015

ராசி பலன்

ராசி பலன்களை நம்புபவர்கள் கவனத்திற்கு!
நான் சிம்ம ராசியில் பிறந்தவன். கடந்த 15 ஆண்டுகளாக என்னுடைய பொருளாதார நிலை இறங்குமுகமாகவே இருந்து வந்திருக்கிறது. கடன் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நான் கடந்த 15 ஆண்டுகளில் பல ஜோசியகாரர்களிடம் என்னுடைய ஜாதகத்தை காட்டி பலன் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன எந்த நல்ல பலனுமே 1% கூட நடந்ததே கிடையாது. ஆனால் அவர்களில் சிலர் சொன்ன சில கெடுபலன்கள் 100% எந்த தடங்கலும் இன்றி நடந்திருக்கிறது. மரணத்தின் எல்லையையும் தொட்டு இன்று தப்பி பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
30 வயதில் எனக்கு திருமணம் நடக்கும் என்று ஒருவர் மதுரையில் தெற்குவாசலில் குறி சொன்னார். ஆனால் எனக்கு இப்போது 38 வயதாகியும் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். காரணம் கடன் பிரச்சனை மற்றும் பொருளாதார நெருக்கடி.
கடந்த 15 ஆண்டுகளில் பல குருபெயர்ச்சிகளும், சில சனி பெயர்ச்சிகளும், பல ராகு, கேது பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன.
ஆனால் என் முயற்சிகள் எல்லாமே தோல்வியிலேயே முடிகின்றன.
கடந்த 15 ஆண்டுகளில் நான் ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே உணவு உண்ட நாட்களும் இருக்கிறது. நேற்று 6-7-15 உட்பட.
இந்த உலகத்தில் 12 பேர்களில் ஒருவர் ஒரே ராசியை சேர்ந்தவராக இருப்பார். இப்போது சொல்லுங்கள் உலகத்தில் உள்ள எல்லா சிம்ம ராசிகாரர்களும் கடந்த 15 ஆண்டுகளாக என்னை போல் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்களா??????
இல்லையே.
அவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்றால் ராசி பலனை நம்ப நான் தயாராக இருக்கிறேன்.
தமிழக முதல்வர் அம்மா கூட சிம்ம ராசி தானே.
என்னுடைய ஜாதகத்தை கடந்த டிசம்பர் 2014, என் அம்மா இறந்த ஒரு வாரத்தில் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.
நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்.

ஜோசியக்காரர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.
ஜோசியக்காரர்கள் கடவுள் அல்ல.

Sunday, 5 July 2015

கோவில் நகரம்

மதுரையை கோவில் நகரம் என்று சொல்வார்கள். காரணம் மதுரையில் ஒவ்வொரு தெருவிலும் எதாவது ஒரு சின்னஞ்சிறு கோவில் இருக்கும்.
ஆனால் இவை பக்தியின் காரணமாக உருவாக்கப்பட்டவை என்று தவறாக நினைத்துவிட கூடாது.
பொதுமக்கள் பலரும் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உருவாக்கப்பட்ட கோவில்களே அதிகம்.
நான் வசிக்கும் பகுதியில் நான் வழக்கமாக(நான் மட்டும் அல்ல. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும்) குப்பையை சென்று போடும் இடத்தில் இன்று செங்கல்லை அடுக்கி அதன் மேல் பிள்ளையாரை உக்கார வச்சிருக்கானுங்க.
பிள்ளையாருக்கு சற்று தள்ளி குப்பையை போட்டு விட்டு வந்துவிட்டேன்.
எனக்கு இப்போ என்ன சந்தேகம் என்றால் இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்களும் இப்படி தான் உருவாக்கி இருப்பார்களோ என்று.

Thursday, 2 July 2015

(+) x (-) = (-)

ஒரே நேரத்தில் நேர்மறை சக்தி,  எதிர்மறை சக்தி தூண்டப்படும் போது அல்லது செயல்படுத்தப்படும் போது அதன் முடிவு எதிர்மறையாகவே இருக்கும்.
கண்ணாடி, திருநீறு, குங்குமம், மஞ்சள், சாமி படம், யந்திரம், சாமி சிலை, தீபம் மற்றும் எல்லா ஈர்ப்பு சக்தி கொண்ட பொருட்களையும் எதிரெதிர் திசையில் வைத்தால் எதிர்மறை முடிவே ஏற்படும்.

உதாரணம் கண்ணாடியை நேர்மறை திசை நோக்கியும்,  இன்னொரு கண்ணாடியை எதிர்மறை திசை நோக்கியும் வைத்தால் முடிவு எதிர்மறையாக இருக்கும்.

ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றும் போது தீபம் நேர்மறை திசை நோக்கியும்,  எதிர்மறை திசை நோக்கியும் இருப்பதால் எதிர்மறை பலனே உண்டாகும்.

கோவில்களிலும் இதே நிலை தான். சில சிலைகள் நேர்மறை திசை நோக்கியும்,  சில சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
கோபுரங்களில் ஏராளமான சிலைகள் நேர்மறை திசை நோக்கியும், ஏராளமான சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
எனவே இவை கலியுகத்தின் அழிவை நமக்கு எளிதில் தருகின்றன.

Friday, 26 June 2015

அரிப்பு, நமைச்சல், ஊறல்

உடலில் எந்த பகுதியில் அரிப்பு, நமைச்சல், ஊறல் ஏற்பட்டாலும் (மர்ம உறுப்பு உட்பட) கசப்பு சுவையை தினமும் உணவில் சேர்த்து கொள்ள பிரச்சனை தீரும்.
வேப்பிலை, வேப்பிலை சாறு, வேப்பிலை பொடி சாப்பிடலாம்.

Thursday, 18 June 2015

எல்லா கோவில்களுக்கும் மதுரையில் கிளை (one stop temple)


திருப்பதி கோவிலுக்கு சென்னையில் கிளை இருப்பதை போல், எல்லா கோவில்களுக்கும் மதுரையில் கிளை(one stop temple) வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். (மக்களை ஏமாற்ற ஆன்மீகமே சிறந்த வழி என்பதால்)

பக்த கோடிகள் அனைவரும் உண்டியலில் காசு, பணம், நகை போடும் படி கேட்டு கொள்கிறேன்.
அந்த பணத்தை வைத்து மதுரை அழகர் கோவிலை சுற்றி 100 ஏக்கருக்கு ஆசிரமம் அமைத்து கொள்வேன். புட்டபர்த்தி சாய் பாபா போல் என் படுக்கை அறையில் தங்க கட்டிகளை அடுக்கி வைத்து கொள்வேன். 
பெண் சிஷ்யைகள் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.(கில்மா மேட்டருக்கு தான் பிளான்) பெண் சிஷ்யைகள் வரவேற்க்கப்படுகிறார்கள்.

கீழ் கண்ட கோவில்களுக்கு கிளைகளும், உண்டியலும் வைக்கப்படும்.
1) அறுபடை வீடு கோவில்கள்.
2) திருப்பதி.
3) ராமேஸ்வரம்.
4) காசி.
5) சோட்டானிக்கரை பகவதி.
6) குருவாயூர்.
7) நவகிரக கோவில்கள்.
etc, etc,................

Saturday, 30 May 2015

மதுரை

நான் திமுக வை எதிர்ப்பவன்.
ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் மதுரையில் ஒரு அடக்குமுறை நிகழ்ந்தது என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.
மதுரையில் இரவிலும் கூட எந்த பகுதிக்கு சென்றாலும் உணவகங்கள் செயல்படும், உணவு கிடைக்கும் என்பது மதுரையின் பெருமைகளில் ஒன்று. ஆனால் இந்த முறை அதிமுக ஆட்சி அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த அடக்கு முறையை காவல் துறை மூலம் செயல்படுத்தியது. 
மதுரையில் இரவு 11 மணிக்கு மேல் எங்குமே உணவகங்கள் செயல்பட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 
மதுரைக்காரனாக என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தீவிரவாதம்

ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டி விடுகிறார்கள். காரணம் தீவிரவாதத்தை தூண்டினால் மட்டுமே இவர்களின் ஆயுதங்களை விற்று அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடியும். ஆயுதங்கள் தயாரிப்பவர்களை அழிக்காமல் தீவிரவாதத்தையும் அழிக்க முடியாது.
தீவிரவாத்தை தூண்டினால் மட்டுமே தீவிரவாதிகளுக்கு கொலை செய்யும் எண்ணம் வரும். கொலை செய்ய ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்பவர்கள் அல்ல. ஒவ்வொரு விதமான ஆயுதங்களும் பல ஆயிரங்களும் பல லட்சங்களும் கொடுத்து தான் வாங்க வேண்டும். அதன் மூலம் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்.
சற்றே யோசித்து பாருங்கள் தீவிரவாதம் இல்லாமல் போய்விட்டால் இவர்களால் 1 பைசா கூட சம்பாதிக்க முடியாது. எனவே இவர்கள் தீவிரவாதத்தை தூண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்.

திருநீறு, குங்குமம், மஞ்சள் தூள்

திருநீறு, குங்குமம், மஞ்சள் தூள் இவற்றை வீட்டின்  கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருந்து எடுத்து பூசுவதே சரியானது என்பது என் கருத்து.

சாம்பிராணி, தசாங்கம்

சாம்பிராணி, தசாங்கம் இவற்றை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து தூபம் இடுவது சரியானதாக கருதுகிறேன். 
மேற்கு அல்லது தெற்கில் வைத்து  தூபம் இடுவதை தவறாக கருதுகிறேன்.
வாசனை திரவியங்களையும் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைத்திருப்பது சரியானது என்பது என் கருத்து.

Tuesday, 26 May 2015

படைத்தல்

மனிதன் என்ற விலங்கை படைத்த பிறகு கடவுள் தன் படைக்கும் தொழிலை நிறுத்திக் கொண்டான்.
இவனுங்களே நம்மை அழிச்சிடுவானுங்க! என்ற பயம் அவனுக்கு வந்து விட்டது. அடுத்து வேறோர் உயிரினத்தையும் படைத்தால் அதற்கு வேலைக்காரனாக மாற்றி விடுவார்களோ என்று பயம் வந்து விட்டது.

Monday, 25 May 2015

அரசமரம், ஆலமரம்

அரசமரம்,  ஆலமரம் வீட்டில் வளரக்கூடாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு துன்பமே நேரும்.

Tuesday, 19 May 2015

அசரீரீ என்பது உண்மையா?

எந்த ஒரு பொருளும் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்ப வேண்டும் என்றாலும் அந்த பொருள் மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளாக இருக்க வேண்டும் அல்லது மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளின் மூலமாகவே சப்தத்தை எழுப்ப முடியும். 
கண்ணால் காணமுடியாத காற்று, கண்ணுக்கு தெரியக்கூடிய பொருட்களை அசைய செய்து சப்தம் எழுப்புகிறது.
காற்று இசையை எழுப்ப வேண்டும் என்றாலும் அதற்கு கண்ணுக்கு தெரியக்கூடிய புல்லாங்குழல் மற்றும் பல விதமான பொருட்கள் தேவை. 
கண்ணுக்கு தெரியாத ஒரு பொருளால் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்பவே முடியாது.

அவர்கள் திரைப்படம் பார்த்து இருப்பீர்கள். அதில் கமல்ஹாசன் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு பொம்மை மூலமாக சுஜாதாவிடம் தன் காதலை வெளிப்படுத்துவார். 
பொம்மையை வைத்துக்கொண்டு வாயை அசைக்காமலேயே சப்தத்தை எழுப்பி நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த கலை தற்போது தான் மக்களை மகிழ்விப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கலை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவதற்காக தான் பயன்படுத்தப்பட்டது. 
ஆம். இந்த கலையை உருவாக்கி பயன்படுத்தியவர்கள் போலி சாமியார்களும், மதகுருமார்களும் தான்.
அவர்கள் தான் இது போல் பேசி கடவுளே சொல்கிறார் என்று தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு மன்னர்களையும், மக்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்தார்கள். 
அசரீரீயாக கடவுள் சொன்னார் என்று கட்டவிழ்க்கப்பட்ட தகவல்கள் அனைத்தும்  100% பொய்யே. அவை போலி சாமியார்களாலும், மதகுருமார்களாலும் எழுப்பப்பட்ட சப்தங்களே.

Sunday, 3 May 2015

சைவம் vs வைணவம்

சிவனை கும்பிடும் வகையறாக்கள், பெருமாளை கும்பிடும் வகையறாக்கள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள்.
சிவனே  பெருமாள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கும் போது, பெருமாளே சிவனுக்கு பெண்ணை கொடுக்கும் போது மனிதன் பெண்ணை கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டேன் என்று சொல்வது கடவுளையே அசிங்கப்படுத்துவதாக தானே அர்த்தம்?

Monday, 27 April 2015

சீக்கியர்கள் vs தமிழர்கள்

அபியும் நானும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் அதில் தலைவாசல் விஜய் சொல்லுவார். "வண்டி ஓட்டிய சீக்கிய taxi driver ஐ நான் கேலி செய்தேன். அப்போது அவர் என்னிடம் 1ரூபாய் நாணயத்தை கொடுத்து நீங்கள் முதலில் சந்திக்கும் சீக்கிய பிச்சைக்காரனிடம் இந்த நாணயத்தை போடுங்கள் என்றார். நான் சீக்கிய பிச்சைகாரனை தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் அந்த 1 ரூபாய் நாணயம் என்னிடமே இருக்கிறது" என்று.
தன் இனத்தில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்ற பெருமை சீக்கியர்களுக்கு இருக்கிறது.
தமிழனுக்கு இருக்கிறதா?

பிச்சைக்காரர்களை பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். 
இவர்கள் என்ன பாவம் செய்தார்களோ இப்படி பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.
கை,கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. பிறகு ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
இவர்களுக்கு பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். அது போதும் நாம் புண்ணியம் சேர்க்க.
இவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கூட்டம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறதோ?

2000 ஆண்டில் சில வாரங்கள் நண்பன் அசோக்கோடு விஜயவாடாவில் தங்கி இருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னது என் மனதில் முள்ளாக தைத்தது. 
"விஜயவாடாவில் பிச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். தெலுங்கர்கள் அல்ல" என்று.

இந்துத்துவா என்று பேசும் இந்து அமைப்புகள் யாராவது கோவில்களில் இந்துக்கள் பிச்சை எடுக்கிறார்களே. அவர்கள் நிலையை மாற்ற வேண்டாமா என்று யோசித்து இருக்கிறார்களா? கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றவேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இந்துக்கள் பிச்சை எடுத்தால் இவர்களுக்கென்ன? 
பெரும்பாலான இந்துக்களுக்கு ஒரே எண்ணம் தான். "பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்".

யாராவது பிரபல நடிகர் அல்லது நடிகை இஸ்லாம் மதத்திற்கு மாறினால் அதை பெருமையாக பேசும் இஸ்லாம் அமைப்புகளோ, இஸ்லாமியர்களோ தங்கள் தொழுகைக்கு செல்லும் பள்ளிவாசல், தர்காவில் இஸ்லாமியர்கள் சிலர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும். இஸ்லாமியர்களில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக கோடி கோடியாக பலர் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். மதத்தை பரப்புகிறேன் என்று கூறி அந்த பணத்தை ஆட்டைய போடும் கும்பல் தான் அதிகம் சுற்றுகிறதே தவிர, எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும், சர்ச்களில் பிச்சை எடுக்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும்.கிறிஸ்தவர்களில்  பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

ஓ இது தான் சேதியா?
அப்போ சீக்கிரமே சீக்கியர்களில் பிச்சை எடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கொடூர மனம் கொண்டவர் என்று அர்த்தம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் மணிமாறன் வீட்டு கிரகபிரவேசத்திற்க்கு சென்றிருந்தேன். அவன் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறான். அவனோடு வேலை பார்க்கும் சிலர் வந்திருந்தார்கள். அவனுடைய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் target achieve செய்பவர்களின் புகைப்படங்கள் அந்த அலுவலகத்தில் மாட்டி இருப்பார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது. 
"என்ன சார் அந்த போட்டோ மட்டும் ரொம்ப மாசமா இருக்கே. என்ன செய்யலாம்."
"கவலைய விடுங்க. சீக்கிரமே போட்டோவுக்கு மாலைய போட்ருவோம்".
"வாய கழுவுங்க சார்"
சற்று யோசித்து பாருங்கள். target பிரஷர் இவர்களை இப்படி கூட யோசிக்க வைக்கிறது. 

ஒருவன் முன்னேறுகிறான் என்றால் நாமும் முன்னேற நினைக்க வேண்டுமே தவிர அவனை அழிக்க நினைத்தாலோ, அல்லது அவனை நம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாலோ அது அழிவை மட்டுமே தரும்.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு உள்ளாக நம் தமிழ் இனத்தில் பிச்சைக்காரகள் இல்லாத இனமாக மாற்ற ஏதாவது செய்வோம். 
பிச்சைக்காரர்கள் இல்லாமல் போய் விட்டால் பிறகு நான் எப்படி புண்ணியம் சேர்ப்பது என்று மட்டும் யோசித்து விடாதீர்கள். 

சித்தர்கள், கிரகங்கள்

சித்தர்கள், நவ கிரகங்கள் எல்லோருமே யோக்கியமானவர்கள் என்று சொல்லவே முடியாது.
மாற்றான் மனைவியை புணர்ந்த சித்தர்களும், கிரகங்களும் இருந்திருக்கிறார்கள்.
மேலும் நான் ஏற்கெனவே சொன்னது போல் நம் ஆயுள் குறைவிற்கு சித்தர்களே காரணகர்த்தா.
சித்தர்கள் தாங்கள் கண்டுபிடித்த வசியம், மோகனம், மாராணம், ஸ்தம்பனம் மற்றும் பல மந்திர வித்தைகளை சோதித்து, பிறர் மீது பிரயோகித்து பார்த்த பிறகே வெளியில் சொல்லி இருந்திருக்கிறார்கள்.
சித்தர்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
பின் எதற்காக எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை கண்டுபிடித்தார்கள்?
பெண்களை வசியம் செய்யும் மந்திரங்களை இவர்கள் யார் மீதெல்லாம் பிரயோகித்து இருக்கிறார்கள்?
இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

Saturday, 25 April 2015

ஜாதகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே ஜகத்தை ஆண்டது கிடையாது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே தரணியை ஆண்டது கிடையாது.

Friday, 24 April 2015

ஆசிரியர் பத்மநாபன்

1993 வரை v.h.n.hr.sec.school இல் படித்தேன்.
11ஆம் வகுப்பில் வகுப்பு ஆசிரியராக திரு.பத்மநாபன் இருந்தார்.
எந்த ஒரு மாணவனையும் அடித்ததாக ஞாபகம் இல்லை.
எல்லா மாணவர்களிடமும் பொதுவாகவே எப்போதும் பேசுவார். தனித்து குறிப்பிட்டு யாரையும் சொல்லமாட்டார்.
அவர் அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று 
தம்பி நீங்க இப்ப சிரிக்கிற சிரிப்பு வேற, இனிமே நீங்க சிரிக்கப்போற சிரிப்பு வேற 
என்று. அப்போது எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை.
பள்ளிக்கூட வயதில் ஜாதி,மதம்,பணம்,அந்தஸ்து,போட்டி,பொறாமை,என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் சிரிக்கிறோம். கல்லூரி பருவத்தில் இளமைக்கால சிரிப்புகள் உண்டாகின்றன.
ஆனால் கல்லூரி முடிந்து ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது. அது முதல் சிரிப்பு இல்லாமல் போய்விடுகிறது. சினிமா நகைச்சுவை காட்சிகளுக்கும், நகைச்சுவையான பதிவுகளுக்கும் மட்டுமே சிரிக்கிறோம். 

ஆனால் வாழ்க்கையில் உண்மையில் சிரிப்பு வருகிறதா?

Thursday, 23 April 2015

திதி கொடுப்பது

இறந்த ஒருவருடைய ஆன்மா கடவுளை அடைந்து விட்டதாகவும், நம் உடனேயே சில காலம் இருப்பதாகவும், மறுபிறவி எடுத்து வாழ்வதாகவும் நம்புகிறோம்.

கடவுளை அடைந்து விட்ட ஆன்மாவிற்கு திதி கொடுப்பது கடவுளுக்கே திதி கொடுப்பதாகத்தானே அர்த்தமாகும்.

நம் உடன் இருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுப்பது சரியா?

மறுபிறவி எடுத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுக்கலாமா?
உயிரோடு இருப்பவர்களுக்கு திதி கொடுக்கலாமா?

நம்முடைய இந்த பிறவி நமது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சி என்று நம்புகிறோம். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நம்முடைய பூர்வ ஜென்ம வாரிசுகள் ஏதோ ஓர் இடத்தில் நமக்கு தற்போது திதி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றால், அது சரியா? உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு திதி கொடுக்கலாமா?

நான்

இந்த உலகத்தில் நிகழும் எல்லா நல்ல விசயங்களையும் நேர்மறை சக்தியின் விளைவாக நான் பார்க்கிறேன்.
எல்லா கெட்ட விசயங்களையும் எதிர்மறை சக்தியின் விளைவாக பார்க்கிறேன்.

Monday, 20 April 2015

ஜம்பலக்கடிபம்பா

ஒரு காலத்தில் நான் சைட் அடிச்ச புள்ளைங்க எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல அதுக பெத்த புள்ளைகளை காலேஜ்ல சேர்க்க போகுதுங்க.
டேய் ஜம்பலக்கடி பம்பா சொக்கா மவனே நீ மட்டும் வருசா வருசம் உன் பொண்டாட்டியையே திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு திரியிற.
மவனே நீ சும்மா இருந்தாலும் எவனோ ஒருத்தன் உன் பொண்டாட்டிக்கு தாலிய கட்டிடுறான்.

கோவில் கருவறை

கோவில் கருவறையின் உள்ளே ஏதாவது உயிரினம் 24 மணிநேரமும் இருந்தால் அந்த உயிரினம் விரைவில் மரணமடையும். காரணம் கருவறையின் மேலே இருக்கும் கோபுரமானது கீழே இருக்கும் சக்தியை 24 மணிநேரமும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக ஒரு மீன் தொட்டியை கருவறையின் உள்ளே வைத்தால் அது விரைவில் மரணமடையும்.

Sunday, 19 April 2015

பாசக்கார பயலுக

என்னுடைய சில சொந்தகாரனுங்களின் பேச்சுக்கு என்னோட மைன்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கிறது.

உடம்புக்கே முடியல.
(நான் மட்டும் ஆரோக்கியமாவா இருக்கேன்)

வருமானமே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.
(அப்புறம் எப்படிடா புதுசு புதுசா நிலம் வாங்குறீங்க? வீட்ட கட்டுறீங்க? இல்லிட்டி வீடாவே வாங்குறீங்க?)

இருக்கிற கடனை அடைக்கவே கஷ்டமா இருக்கு.
(ஓ அந்த கவலை தீர தான் அப்பப்ப பாரீன் டூர் போயிட்டு வாரீங்களா?)

யார் கூடயும் பேசுறது இல்ல. நாத்தனார் கூட சண்ட. கொழுந்தன் கூட சண்ட. மச்சினன் கூட சண்ட.
(போன வாரம் தானடா குலதெய்வம் கோவில்ல உங்க எல்லாரையும் பார்த்தேன். ஒண்ணா உக்காந்து கூடி கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தீங்களேடா)

உன் வீடு என்ன பக்கத்துலயா இருக்கு. உன்ன வந்து பாக்க. கிருஷ்ணாபுரம் காலனில அவுட்டர் ஏரியாவுல இருக்க. எம்புட்டு தூரம் தெரியுமா?
(ஏண்டா வெளியூர்ல இருக்குற பணக்கார சொந்தக்காரனுங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வாரீங்க. அது என்ன அடுத்த தெருலயாடா இருக்கு? நீங்க வரவே வேண்டாம்டா)


Saturday, 18 April 2015

I love you

பொண்ணுங்க என்னை கூப்பிடணும்னு என் பேரை ஐ லவ் யூ என்று மாற்றி வைத்துக் கொண்டேன்.
இப்ப "ஐ லவ் யூ அண்ணா" "ஐ லவ் யூ அண்ணா"னு கூப்பிடுதுங்க.
என்ன கொடுமை சார் இது?

Friday, 17 April 2015

சூன்யத்தை வணங்குகிறோம்

பிரமிட் எப்படி அதன் கீழே இருக்கும் நிலத்தை சூன்யமாக மாற்றுகிறதோ அதேபோல் கடவுள் சிலைகளின் மேலே இருக்கும் கோபுரங்கள் சிலைகளை சூன்யமாக மாற்றுகின்றன.
சூன்யமான சிலைகளை தான் எல்லோரும் வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
பிரமிடின் கீழே ஒரு மீன் தொட்டியை வைத்தால் அந்த மீன் சில நாட்களில் கொடூரமான முறையில் இறக்கும்.
அதே போல் கோவில் கருவறையில் ஒரு மீன் தொட்டியை வைத்தால் அதுவும் மரணமடையும்.

Thursday, 16 April 2015

ஆறு

ஆறானது எந்த திசையில் இருந்து எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு ஆற்றிலும் குளிப்பதற்கான பலன்கள் மாறும்.

மன்மத வருடம்

Tuesday, 14 April 2015

மார்கழி

குளுமையான மார்கழி மாதத்தை தமிழ் புத்தாண்டாக வைக்காமல் அக்னி வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் பண்டைய தமிழன்?

Sunday, 12 April 2015

mts wifi

mts wifi என்னமோ ஓவர் ஸ்பீடுல வரும்ன்னு விளம்பரம் பண்ணுறானுங்கன்னு நம்பி வாங்கினேன்.
ஆனா பல சமயம் 1kbps ஸ்பீடுல தான் வருது.
போஸ்டரை காட்டி எமாத்திட்டானுங்க.

தேர்தல்

இந்திய அரசாங்கம் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடி அமைக்கவும், அதற்க்கு பாதுகாப்பு கொடுக்கவும், வோட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டியை பாதுகாக்கவும், வோட்டு எண்ணவும் பல கோடி பணத்தை செலவு செய்கிறது.
தேர்தலுக்கு தனியாக ஒரு website create செய்து அதன் மூலம் ஓட்டு போடும் வசதியை செய்தால் மக்கள் தங்கள் வீட்டில், அலுவலகத்தில், தங்கள் மொபைல் போனில் இருந்தே ஓட்டு போட முடியும். இதனால் பல கோடி ரூபாய் மிச்சமாகும். 
voter idயை user name ஆக வைத்துக் கொள்ளலாம். password ஐ அவரவர் create செய்யும்படி செய்து கொள்ளலாம்.
மேலும் இந்திய மக்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் அங்கிருந்தபடியே ஓட்டு போட முடியும்.
மேலும் தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே வெற்றிபெற்றவரை தெரிந்துகொள்ள முடியும்.
இங்கே இன்னொரு கேள்வி எழும்.
கிராம மக்கள் எல்லோருமே இணையத்தை பயன்படுத்த தெரிந்தவர்களா? அவர்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்?என்பது.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அது சாத்தியமே. 
10 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் செல் போன் வைத்திருந்தார்களா? இல்லையே. ஆனால் இப்போது அவர்களும் செல் போன் பயன்படுத்துகிறார்களே. அது போல் தான் இதுவும். 
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?

என்னுடைய இந்த கருத்து உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக share செய்யுங்கள். நன்றி.

பண்டைய தமிழன்

வீரம், போர்பயிற்சி, தற்காப்பு இவற்றை பண்டைய தமிழன் பிறருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டான்.
வந்தாரை வாழ வைத்த தமிழன் தன் இனத்தை வாழவைக்க தவறிவிட்டான்.

Friday, 10 April 2015

வெங்கடாஜலபதி

வெங்கடாஜலபதி படத்தை தொட்டு கும்பிட்டு reshare செய்தால் 7 நாட்களில் கடன் பிரச்சனை தீரும் என்று ஒருவர் மூஞ்சி புக்கில் வெளியிட்டிருந்தார். நானும் சென்ற வாரம் தொட்டு கும்பிட்டு reshare செய்தேன்.
நேற்று வரை கடன் பிரச்சனையில் சிக்கி தவித்த நான் இன்று என் கடனையும் அடைத்துவிட்டு 1000கோடி ரூபாய் சொத்துக்கும் அதிபதி ஆகிவிட்டேன்.
எல்லாம் அந்த வெங்கடாசலபதியின் அருள்.
ஐயோ இப்ப நான் எதையாவது வாங்கணுமே!
இந்த தெரு என்ன விலைன்னு கேளு!
அட இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!

Tuesday, 7 April 2015

இமயமலையும் வட துருவமும்


இமயமலை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சென்டிமீட்டர் உயர்கிறது என்று சொல்கிறார்கள். இதற்க்கு காரணம் வடதுருவத்தின் ஈர்ப்புவிசை என்று சொல்கிறார்கள்.
ஆனால் இது தவறு என்பது என் கருத்து.
வடதுருவத்தின் ஈர்ப்பு விசையினால் தான் இமயமலை உயர்கிறது என்றால், இமயமலை இந்தியாவின் வடபகுதியில் தோன்றி இருக்காது.  ரஷ்யாவிற்கும் வடக்கில் வடதுருவ பகுதியில் தான் இமயமலை  தோன்றி இருக்கும்.
இமயமலை வேறு ஏதாவது காரணத்தினால் தான் உயர்கிறது. 
நிலப்பரப்பின் அடித்தட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்க்கு காரணமாக இருக்கும்.

வடதுருவம்,தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை காந்தசக்தி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் கட்டுப்பாட்டில் தான் பூமியின் சுழற்ச்சி செயல்படுகிறது.இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் போராட்டங்களை எளிதில் அறியமுடியும்.

சூரியனின் வெயில் சில மாதங்கள் வடக்கு நோக்கிய வாசலில் விழும். சில மாதங்கள் தெற்கு நோக்கிய வாசலில் விழும். இதற்க்கு காரணம் இந்த இரண்டு துருவங்களின் காந்த ஈர்ப்பு சக்தியில் ஏற்படும் பூமியின் சுழற்ச்சி மாற்றமே. 

வடதுருவம், தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை தான் செயல்படுகிறது. 

வடதுருவத்தில் மட்டுமே அதிகமான ஈர்ப்புவிசை இருக்குமானால் பூமியின் சுழற்ச்சியே மாறிவிடும். 
வடதுருவத்தில் மட்டுமே ஈர்ப்புவிசை காந்தசக்தி இருக்கிறது என்பது பொய்யே.



Friday, 3 April 2015

சோமாலியா

இவர்களை வாழ வைக்க வக்கில்லை. செவ்வாய்கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று பல கோடி பணத்தை செலவு பண்ணி ஆராய்ச்சி பண்றாணுங்க. தூ.....

Sunday, 29 March 2015

Idea network

Idea network சரியில்லை என்ற காரணத்தால் வேறு நெட்வொர்க்குக்கு மாறிட்டேன். காரைக்குடி, தேனி போன்ற ஊர்களில் ரோமிங்ல வருது.
2 வருடங்களுக்கு முன்பு ஐடியா சிம் புதிதாக வாங்கிய போது மதுரையை தாண்டி எந்த ஊருக்கு சென்றாலும் ரோமிங் தான்.
வெளியூர் செல்லும் போது பயணகாலத்திலும் நெட்வொர்க் சரியில்லை.
கஸ்டமர் கேருக்கு எப்ப போன் பண்ணாலும் புதுசா 600 டவர் வச்சிக்கிட்டே இருக்கோம்ன்றானுங்க. 2 வருசமா இதே தான் சொல்றானுங்க.

Saturday, 28 March 2015

தண்ணீர் பிரச்சனை

குளம், ஏரி, கண்மாய் மற்றும் எல்லா நீர் சேமிப்பு வசதிகளையும் மூடி பிளாட் போட்டு வித்துட்டு பக்கத்து மாநிலத்தான் தண்ணீர் விட மாட்டேன்கிறான் என்று கத்துவது வீண் செயல்.

Friday, 27 March 2015

சின்ன விசயம்

சாதாரண சிறிய விசயத்தை செய்வதற்கு கூட அதிகமாக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.
எனக்கு மட்டும் ஏண்டா ஆண்டவா இப்படி?

Tuesday, 24 March 2015

கீழ மாசி வீதி

மதுரை கீழமாசி வீதியில் 2 தேர்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தேருக்கு அருகில் தான் மறைவான  இருண்ட பகுதியில் பாலியல் தொழில் வெகு விமரிசையாக நடந்ததாக பலர் சொல்கிறார்கள்.
அந்த தேரை தான் எல்லோரும் இப்போது கும்பிடுறாய்ங்கே!

Wednesday, 18 March 2015

கண்ணாடி

கண்ணாடிக்கு ஈர்ப்பு சக்தியும்,  பிரதிபலிக்கும் சக்தியும் உண்டு.
எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி வைக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறும்.

Monday, 16 March 2015

கோவில் யானை

காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்த யானையை பிடித்து கோவில்களில் கட்டிப் போட்டு அதன் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விடாமல் செய்து இறந்த பிறகு அதன் புகைப்படத்தை பத்திரிகையில் போடுவதுடன் அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது. கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதன் குடும்பத்தை பிரிந்து அது அழுது கொண்டே தான் இருக்கும்.

Friday, 6 March 2015

எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts)

பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் தவறான இடத்தில் அல்லது தவறான திசை நோக்கி   வைத்திருந்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். குறிப்பாக ராசி கற்கள், கண்திருஷ்டியை நீக்கும் என்று நம்பி வீட்டில் வைக்கப்படும் பொருட்கள், வாஸ்து காரணங்களுக்காக வைக்கப்படும் பொருட்கள்  மற்றும் பல.

இந்த எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை செயல்களுக்கும், எதிர்மறை நிகழ்வுகளுக்கும் வித்திடும்.

குறிப்பாக, வியாதி, மரணம், உறவில் பிரிவு, விரிசல், தோல்வி, நஷ்டம், இழப்பு, பயம்  மற்றும் இது போன்ற எண்ணங்கள் தோன்றும்.

இது போன்ற பொருட்களை தூக்கி எறிந்துவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வராது.
அல்லது இந்த பொருட்களை எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக தெரிந்துகொண்டு வைக்கவேண்டும்.

Monday, 2 March 2015

டைரடக்கர்கள் கவனத்திற்கு

ஆத்தா நான் பாஸாகிட்டேன்

வெற்றி வெற்றி வெற்றி

உங்க பையன் ஜாதகம் அமோகமா இருக்கு.  இனிமே எல்லா காரியத்திலும் அவனுக்கு வெற்றி தான்

இது போன்ற வசனங்களை படத்தின் முதல் வசனமாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?

கோவில் கோபுரம், சாமி படம், சாமி சிலை இவற்றை படத்தின் முதல் காட்சியாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?

கோவில் மணி ஒலிக்கும் சப்தத்தை முதல் சப்தமாக படத்தில் வைத்தால் படம் வசூலை வாரி குவிக்குமா?

இதை எதையுமே செய்யாத ஹாலிவுட் படங்கள் உலக அளவில் வெற்றி பெறுகின்றன.

இதை எல்லாம் செய்யும் பல தமிழ் படங்கள் 30 நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன.

டைரடக்கர்கள் யோசிப்பார்களா?

Friday, 27 February 2015

ஜாதகம்

ஒரு கட்டத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றவனான என்னுடைய ஜாதகத்தை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.

Wednesday, 25 February 2015

Broiler chicken & egg

Broiler கோழி மற்றும் அதன் முட்டை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று whatsapp இல் தகவல் பரவி வருவது எல்லோருக்கும் தெரியும்.

கூடுதல் தகவல் என்னவென்றால்,  எல்லா உணவகங்களிலும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது சுவைக்காக முட்டையையும் சேர்த்து பிசைகிறார்கள்.

பந்து

கடவுள்களும் சாத்தான்களும் எட்டி உதைக்கும் பந்தாக நான்.

Tuesday, 24 February 2015

இரத்த தானமும் செவ்வாய் தோஷமும்

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இரத்த தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்று சில ஜோசியகாரர்கள் சொன்னதை நம்பி பலர் ரத்த தானம் செய்கிறார்கள்.
ரத்த தானம் நல்ல விசயம் தான். ஆனால் செவ்வாய் தோஷத்துக்கும் இதற்கும் என்னங்கடா சம்பந்தம்?
ஜாதகம் கணிக்கும் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் செவ்வாய் தோஷம்.
ஒருவர் உடலில் இருந்து ரத்தம் எடுத்து இன்னொருவருக்கு செலுத்தும் அலோபதி மருத்துவ முறை ஒரு நூற்றாண்டு  முன்னால் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சித்தர்கள் அவிழ்த்த தவறான மர்ம முடிச்சுகள்

சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
1.
பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2.
அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3.
கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4.
திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5.
குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6.
கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7.
தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8.
சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9.
கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10.
சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11.
வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12.
ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13.
நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14.
இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15.
மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16.
கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17.
போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18.
பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

இந்த தகவலை நான் மூஞ்சிபுக்கில் இருந்து எடுத்தேன்.

சித்தர்களை பற்றி நாம் பெருமைபடவே நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். பேசி இருக்கிறோம்.

ஆனால் இவர்கள் சில தவறான பாதைகளை நமக்கு தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். 

அதில் முக்கியமான ஒன்றே ஒன்று நம்முடைய ஆயுள் குறைவு.

நம்முடைய ஆயுள் குறைவுக்கு இவர்களே காரணகர்த்தாவாக நான் கருதுகிறேன்.

இங்கே இருக்கும் தகவலை வருசைக்கிரமமாக படியுங்கள். ஒவ்வொருவரை விட அடுத்தவரின் ஆயுள் குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

இதற்க்கு என்ன காரணம்?

இவர்கள் உருவாக்கி நமக்கு தந்துவிட்டுப் போன மந்திரங்களும், வழிபாட்டு முறைகளுமே காரணம் என்பது என்  கருத்து.

மனிதன் அதிக ஆயுளோடு வாழ்வதர்க்கென்றே பிறந்தவன். அதை குறைக்கும் செயலையே இவர்கள் செய்திருக்கிறார்கள். மனிதனின் ஆயுளின் மர்ம முடிச்சுகளை இவர்கள் தவறாக தெரிந்தோ அல்லது தெரியாமலோ இவர்கள் உருவாக்கிய மந்திரங்களாலும், வழிபாட்டு முறைகளாலும், மற்றும் பல செயல்களாலும்  அவிழ்த்திருக்கிறார்கள். இவர்களின் வழியை பின்பற்றிக்கொண்டு இருக்கும் நாமும் ஆயுள் குறைவோடு இருக்கிறோம்.