Friday 27 February 2015

ஜாதகம்

ஒரு கட்டத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றவனான என்னுடைய ஜாதகத்தை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.

Wednesday 25 February 2015

Broiler chicken & egg

Broiler கோழி மற்றும் அதன் முட்டை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று whatsapp இல் தகவல் பரவி வருவது எல்லோருக்கும் தெரியும்.

கூடுதல் தகவல் என்னவென்றால்,  எல்லா உணவகங்களிலும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது சுவைக்காக முட்டையையும் சேர்த்து பிசைகிறார்கள்.

பந்து

கடவுள்களும் சாத்தான்களும் எட்டி உதைக்கும் பந்தாக நான்.

Tuesday 24 February 2015

இரத்த தானமும் செவ்வாய் தோஷமும்

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இரத்த தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்று சில ஜோசியகாரர்கள் சொன்னதை நம்பி பலர் ரத்த தானம் செய்கிறார்கள்.
ரத்த தானம் நல்ல விசயம் தான். ஆனால் செவ்வாய் தோஷத்துக்கும் இதற்கும் என்னங்கடா சம்பந்தம்?
ஜாதகம் கணிக்கும் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் செவ்வாய் தோஷம்.
ஒருவர் உடலில் இருந்து ரத்தம் எடுத்து இன்னொருவருக்கு செலுத்தும் அலோபதி மருத்துவ முறை ஒரு நூற்றாண்டு  முன்னால் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சித்தர்கள் அவிழ்த்த தவறான மர்ம முடிச்சுகள்

சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
1.
பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2.
அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3.
கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4.
திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5.
குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6.
கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7.
தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8.
சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9.
கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10.
சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11.
வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12.
ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13.
நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14.
இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15.
மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16.
கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17.
போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18.
பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

இந்த தகவலை நான் மூஞ்சிபுக்கில் இருந்து எடுத்தேன்.

சித்தர்களை பற்றி நாம் பெருமைபடவே நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். பேசி இருக்கிறோம்.

ஆனால் இவர்கள் சில தவறான பாதைகளை நமக்கு தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். 

அதில் முக்கியமான ஒன்றே ஒன்று நம்முடைய ஆயுள் குறைவு.

நம்முடைய ஆயுள் குறைவுக்கு இவர்களே காரணகர்த்தாவாக நான் கருதுகிறேன்.

இங்கே இருக்கும் தகவலை வருசைக்கிரமமாக படியுங்கள். ஒவ்வொருவரை விட அடுத்தவரின் ஆயுள் குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

இதற்க்கு என்ன காரணம்?

இவர்கள் உருவாக்கி நமக்கு தந்துவிட்டுப் போன மந்திரங்களும், வழிபாட்டு முறைகளுமே காரணம் என்பது என்  கருத்து.

மனிதன் அதிக ஆயுளோடு வாழ்வதர்க்கென்றே பிறந்தவன். அதை குறைக்கும் செயலையே இவர்கள் செய்திருக்கிறார்கள். மனிதனின் ஆயுளின் மர்ம முடிச்சுகளை இவர்கள் தவறாக தெரிந்தோ அல்லது தெரியாமலோ இவர்கள் உருவாக்கிய மந்திரங்களாலும், வழிபாட்டு முறைகளாலும், மற்றும் பல செயல்களாலும்  அவிழ்த்திருக்கிறார்கள். இவர்களின் வழியை பின்பற்றிக்கொண்டு இருக்கும் நாமும் ஆயுள் குறைவோடு இருக்கிறோம்.

Friday 20 February 2015

கழிவறை, குளியலறை

கழிவறை, குளியலறை  வீட்டிற்குள் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.
வாஸ்து பார்த்து கழிவறை, குளியலறை  கட்டினாலும், அது வீட்டிற்குள் இருந்தால் கண்டிப்பாக அது எதிர்மறை சக்தியையே 24 மணி நேரமும் தந்துகொண்டே இருக்கும்.
கழிவறை, குளியலறை  வீட்டிற்கு வெளியே இருந்தால் மட்டுமே நமக்கு நன்மை உண்டாகும்.
கழிவறை, குளியலறை  வீட்டிற்குள் இருந்தால் கணவன் மனைவி இடையேயான பிரச்சனை மட்டும் அல்ல, குடும்ப உறவுகள் ரீதியான பிரச்சனைகளும், மற்றும் பல சமூக ரீதியான  பிரச்சனைகளையும் அது தந்து கொண்டே இருக்கும்.
இன்றைய apartment வாழ்க்கையில் இது சாத்தியமா என்று கேட்க தோன்றலாம்.
நம் முன்னோர்கள் போல் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் இதை பின்பற்றினால் மட்டுமே சாத்தியம்.

Tuesday 17 February 2015

Initial

தந்தையின் பெயரின் முதல் எழுத்து, அல்லது கணவரின் பெயரின் முதல் எழுத்து இனிசியலாக எழுதும் பழக்கம் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
மன்னர்கள், புலவர்கள் யாருடைய பெயரிலும் இனிசியல் பயன்படுத்தியதாக தெரியவில்லை.
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
பாரி
சிபி சக்கரவர்த்தி
கரிகாலன்
பொற்கை பாண்டியன்
சேரன் செங்குட்டுவன்
திருவள்ளுவர்
ஔவையார்
இளங்கோவடிகள்
கோவலன்
கண்ணகி
மாதவி
கிருஷ்ண தேவராயர்
தெனாலி ராமன்
அக்பர்
பீர்பால்
....
........
.................

Monday 16 February 2015

முதல் தமிழன்

ஆங்கில மொழியை முதலில் கற்ற தமிழன் யார்?
அவனை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.

பாதுகாப்பு எங்கே?

இது போல் குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோவில் அனுப்புவது பெற்றோர்களின் தவறா? அல்லது அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுனரின் தவறா? ஏதாவது விபத்து ஏற்பட்ட பிறகு தான் இது போன்ற விசயங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு நாம் இருக்கிறோமா?

இந்த படம் என் நண்பன் பழனிக்குமார் எடுத்தது.

Saturday 14 February 2015

கோவில்

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த தமிழர்கள் வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே குலதெய்வம் கோவிலுக்கு சென்று 3 அல்லது 5 நாட்கள் தங்கி கடவுளை வணங்கினார்கள்.
மற்ற 360 நாட்கள் அவர்கள் கோவிலுக்கு சென்றதாக எனக்கு தெரியவில்லை.
தங்கள் ஆயுள் காலத்தில் 1 முறை அல்லது 2 முறை காசி, ராமேசுவரம், சென்று தங்கள் முன்னோர்களின் அஸ்தியை கரைத்து வந்திருக்கலாம்.
அதனால் அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் போக்குவரத்து வசதி பெருகியதால் அடிக்கடி பல கோவில்களுக்கு செல்கிறோம்.
கஷ்டப்படுகிறோம்.
மேலும் அவர்கள் யாருமே கண்திருஷ்டியை நீக்குவதற்காக என்று எந்த பொருளையும் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டதாக எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பழைய புகைப்படங்களை கூகுளில் தேடி பாருங்கள்.

காதலர் தின வாழ்த்து

எப்படி ஸ்வப்னா? எப்படி?
எனக்குன்னு ஒரு காதலி இல்லாததுனால மத்த எல்லார்க்கும் காதலர் தின வாழ்த்துக்கள்ன்னு சொல்லி என்னால நடிக்க கூட முடியல ஸ்வப்னா!!  நடிக்க கூட முடியல.
ஓ போடு. லப் தப்.
ஓ போடு. லப் தப்.


Thursday 12 February 2015

தங்க படிக்கட்டுகள்

சபரி மலை ஐயப்பன் கோவிலில் 18 படிக்கட்டுகள் தங்கத்தில் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்கிறார்கள். நான் சபரி மலைக்கு சென்றதும் இல்லை, ஐயப்பனை கும்பிடுவதும் இல்லை.

தங்கத்தை காலில் அணிந்தாலே அவர்கள் வாழ்க்கை அழிவை நோக்கி செல்லும். உதாரணம்: கண்ணகி.

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த படிக்கட்டுகளை மிதித்தால் ஐயப்ப பக்தர்களுக்கு  நன்மை கிடைக்குமா?????????

சினிமா

கடவுள் மீதான அடிமைதனத்தை வளர்த்ததில் சினிமாவிற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

Wednesday 11 February 2015

குறி கேட்டல்

தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்கவோ அல்லது அவர்கள் கொடுக்கும் வேர் அல்லது வேறு பொருட்களையோ வாங்க கூடாது என்று பழைய பதிவில் சொல்லி இருந்தேன்.
1998 என்று நினைக்கிறேன். மதுரை பை பாஸ் ரோட்டில் ஒரு கடையில் விற்பனை காரணமாக automobile spare parts கடைக்கு சென்றிருந்தேன். அங்கே குறி சொல்பவர்கள் வந்தார்கள். என்னுடன் இருந்தவர்கள் எனக்கு சொல்லும்படி கேட்டார்கள். அப்போது அவர்கள் தம்பிக்கு சட்டையில் பாக்கெட் தான் பெருசா இருக்கு ஆனால் அதில் பணம் இருக்காது என்று கூறினார்கள். அதற்கு முன்பு வரை எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால் அதற்க்கு பிறகு இன்று வரை கடன் சிக்கலில் மாட்டி தவிக்கிறேன். பிறகு ஆர்வகோளாறில் அவர்கள் கொடுத்த ஒரு பொருளை எலுமிச்சம்பழத்தில் வைத்து வைகை ஆற்றில் போட்டேன். என்னுடைய கஷ்ட காலம் ஆரம்பித்தது அன்று தான்.

பிறகு 2005 என்று நினைக்கிறேன். அப்போது நண்பன் சிங்காரவேலின்  கடையில் அமர்ந்து இருந்தேன். அங்கே குறி சொல்பவர்கள் வந்தார்கள். அவனும் சும்மா இருக்காமல் என்னை கோர்த்து விட்டான். இவனுக்கு சொல்லுங்க என்று. (என்னை ஏதாவது சிக்கலில் கோர்த்து விடுவது என்றால் என்னை சுற்றி இருக்கும் பலருக்கும் அல்வா சாப்பிடுவது போல இருக்கும் போல)
தம்பிக்கு கல்யாணம் late ஆக தான் நடக்கும். அப்படி நடந்தாலும் நிம்மதி, சந்தோசம் இருக்காது என்று சொன்னார்கள். (டேய் ங்கொய்யால ஆண்டவா எனக்கு மட்டும் ஏண்டா இப்படி???) 37 வயதாகியும் திருமணம் செய்ய முடியாமல் இருக்கிறேன்.
அடுத்த ஒரு வாரத்தில் வாழ்க்கை மாறும் என்றார்கள். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பெரிய விபத்தில் சிக்கினேன். அன்றிலிருந்து வாழ்க்கை பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.
அவர்கள் கொடுத்த வேர் ஒன்றை முச்சந்தியில் போய் வைத்தேன்.
அவர்கள் கையில் வைத்திருந்த ஓலை சுவடியில் நூல் போட்டு பார்க்க சொன்னார்கள். (இது விதியா? இல்லை சதியா? எனக்கே தெரியல?????!!!!)
அப்போது அதில் இரண்டாவதாக வந்த படம் கீழே இருப்பது தான்.


சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இருந்த இயேசு.
அன்றிலிருந்து இன்று வரை பல வீண் பழிகளையும், அளவுக்கு அதிகமான அவமானங்களையும் சுமந்து கொண்டிருக்கிறேன்.
தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்கவோ, அல்லது அவர்கள் கொடுக்கும்  எந்த ஒரு பொருளையுமோ வாங்காதீர்கள். 

Monday 9 February 2015

ஒழிப்பு வாரியம்

ஆறு,  அருவி மற்றும் எல்லா நீர் நிலைகளிலும் ரசாயனம் கலந்து நீர் மாசுபடுவதை தடுக்க சோப்பு&ஷாம்பூ ஒழிப்பு வாரியம் அமைக்கணும் போல.
சோப்பு & ஷாம்பூ பயன்படுத்துவதால் உலகம் முழுவதும் பல கோடி லிட்டர் நீர் மாசுபடுகிறது.
சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தாமல் மனிதர்களால் குளிக்கவே முடியாதா?

Forward message

Whatsapp உள்பட சமூக வலை தளங்களில் பல forward message வருகின்றன.
சாமி படத்தை அல்லது மந்திரத்தை இத்தனை பேருக்கு forward செய்தால் 24 மணி நேரத்தில் நல்ல விசயம் உங்களுக்கு நடக்கும் என்று அனுப்புகிறார்கள்.
சாமியையும் மந்திரங்களையும் இப்படித்தான் நட்டமாக தூக்கி நிப்பாட்ட வேண்டுமா? நட்டமாக தூக்கி நிப்பாட்டிட்டா மட்டும் நல்லது நடந்து விடுமா?
ஒரு படத்தில் விவேக் சாமியாராக நடிப்பார். அதில் ஒரு காட்சி
சாமி புள்ள வேணும். அதுக்கு வழி சொல்லுங்க.
அந்த கிணத்துல இருக்குற தண்ணிய மோந்து குடி. 24 மணிநேரத்துல பிள்ளை பிறக்கலேன்னா என்னை அடி என்பார். அப்படித்தான் இருக்கிறது இவர்கள் செயலும்.
அனாதையாக இருப்பவர்களின் புகைப்படங்களை எத்தனை பேருக்கு forward செய்கிறோமோ அத்தனை டாலர் பணத்தை மூஞ்சிபுக்காரன் அனாதைகளுக்கு கொடுப்பான் என்று படம் அனுப்புகிறார்கள். நான் forward செய்வதை மூஞ்சிபுக்காரன் வெத்தலைல மை தடவியா பார்ப்பான்?
யாருமே forward செய்யலேன்னா மூஞ்சிபுக்காரன் பணம் கொடுக்க மாட்டானா?
எத்தனை பேர் forward செய்திருக்கிறார்களோ அத்தனை டாலர் பணத்தை அவன் அனாதைகளுக்கு கொடுத்திருக்கிறான் என்பதற்கு என்ன சாட்சி இருக்கு?

Tuesday 3 February 2015

தீபாவளி

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல. அது வட இந்திய பண்டிகை. வட இந்தியர்களிடம் இருந்து நாம் பின்பற்றிய பண்டிகை.
ஹோலி பண்டிகை போல.