Tuesday 28 July 2015

சீவல் சுண்ணாம்பு

சீவல் சுண்ணாம்பு பதநீர் இறக்குவதற்காக பிரத்யேகமாக தூத்துக்குடியில் தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
இந்த சீவல் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால் அதை தான் கள்  என்று சொல்கிறார்கள்.
சீவல் சுண்ணாம்பை சேர்ப்பதால் தான் கள், பதநீராகிறது என்கிறார்கள்.

Saturday 25 July 2015

சமையலறை

சமையலறை வீட்டின் அக்னி மூலையில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது என் கருத்து.
வீட்டின் கிழக்கு, வடக்கு பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது என் கருத்து.
காரணம் நேர்மறை சக்தியை கிழக்கு, வடக்கு திசையில் இருந்து தான் நாம் பெறுகிறோம். உணவையும் நாம் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து சமைத்து எடுத்து பயன்படுத்தும் போது  நேர்மறை சக்தி கிடைக்கும்.

வரலாறு முக்கியம் அமைச்சரே

எல்லா சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நான் படித்தது கிடையாது. ஆனால் திருமூலரை பற்றி படிக்கும் போது ஒரு தகவல் கிடைத்தது. அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து அவன் மனைவியோடு கில்மா மேட்டரில் ஈடுபடுகிறார்.

நவகிரகங்களில் சில கிரகங்கள் மற்ற கிரகங்களின் மனைவிகளோடு கில்மா மேட்டர்களில் ஈடுபடுகிறார்கள். நவகிரகங்கள் பற்றிய கதைகளை படித்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள்களும் கில்மா மேட்டர்களில்  விதி விலக்கல்ல.

ஆனால் பல சாமியார்கள் இதை மறைத்து கடவுள்கள், கிரகங்கள், சித்தர்கள் யோக்கியமானவர்கள், அவர்களை தான் வணங்க வேண்டும், காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று புரளியை பரப்பி வருகிறார்கள். 

நான் என்ன மசுருக்குடா கடவுளை அடையணும்??????

Sunday 19 July 2015

பாகுபலி

பாகுபலி திரை விமர்சனம்
வடிவேலு:- மாமி அந்த பொண்ணு நிறை மாத கர்ப்பிணிணு சொல்றீங்க. அவ புருஷன் அவளை மாடியில் இருந்து தள்ளி விட்டுட்டான்னு சொல்றீங்க. அப்புறம் என்ன ஆச்சு?
மாமி:- யாருக்கு தெரியும்???அவன் தான் கட் பண்ணிட்டு தொடரும்னு போட்டானே!!!!!!

Thursday 16 July 2015

shock absorber

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு முதுகு வலி அல்லது முதுகு சம்பந்தமான பிரச்சனைகள் வருகின்றன. இதற்க்கு காரணம் இரு சக்கர வாகனங்களில் இரண்டு சக்கரங்களின் நடு மைய புள்ளியில் இருந்து 90 டிகிரியில் செங்குத்தாக shock absorber பொருத்தப்படாததே.
அவ்வாறு பொருத்தப்பட்டிருந்தால் முதுகு சம்பந்தமான பிரச்சனைகள் வராது. 
இது பற்றிய தகவலை எல்லா இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும், facebook மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். 
என்னுடைய இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏற்கெனவே பிரமிட் பூமியை பாலைவனமாக மாற்றும் சக்தி படைத்தது என்பது பற்றிய தகவலை உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலக நாடுகளில் இருக்கும் பத்திரிகைகள் வரை, உள்ளூர் டிவி சேனல்கள் முதல் உலக அளவில் பிரசித்தி பெற்ற டிவி சேனல்கள் வரை அனுப்பினேன்.
ஆனால் ஒரு பரதேசியும் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

Tuesday 7 July 2015

ராசி பலன்

ராசி பலன்களை நம்புபவர்கள் கவனத்திற்கு!
நான் சிம்ம ராசியில் பிறந்தவன். கடந்த 15 ஆண்டுகளாக என்னுடைய பொருளாதார நிலை இறங்குமுகமாகவே இருந்து வந்திருக்கிறது. கடன் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நான் கடந்த 15 ஆண்டுகளில் பல ஜோசியகாரர்களிடம் என்னுடைய ஜாதகத்தை காட்டி பலன் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன எந்த நல்ல பலனுமே 1% கூட நடந்ததே கிடையாது. ஆனால் அவர்களில் சிலர் சொன்ன சில கெடுபலன்கள் 100% எந்த தடங்கலும் இன்றி நடந்திருக்கிறது. மரணத்தின் எல்லையையும் தொட்டு இன்று தப்பி பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
30 வயதில் எனக்கு திருமணம் நடக்கும் என்று ஒருவர் மதுரையில் தெற்குவாசலில் குறி சொன்னார். ஆனால் எனக்கு இப்போது 38 வயதாகியும் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். காரணம் கடன் பிரச்சனை மற்றும் பொருளாதார நெருக்கடி.
கடந்த 15 ஆண்டுகளில் பல குருபெயர்ச்சிகளும், சில சனி பெயர்ச்சிகளும், பல ராகு, கேது பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன.
ஆனால் என் முயற்சிகள் எல்லாமே தோல்வியிலேயே முடிகின்றன.
கடந்த 15 ஆண்டுகளில் நான் ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே உணவு உண்ட நாட்களும் இருக்கிறது. நேற்று 6-7-15 உட்பட.
இந்த உலகத்தில் 12 பேர்களில் ஒருவர் ஒரே ராசியை சேர்ந்தவராக இருப்பார். இப்போது சொல்லுங்கள் உலகத்தில் உள்ள எல்லா சிம்ம ராசிகாரர்களும் கடந்த 15 ஆண்டுகளாக என்னை போல் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்களா??????
இல்லையே.
அவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்றால் ராசி பலனை நம்ப நான் தயாராக இருக்கிறேன்.
தமிழக முதல்வர் அம்மா கூட சிம்ம ராசி தானே.
என்னுடைய ஜாதகத்தை கடந்த டிசம்பர் 2014, என் அம்மா இறந்த ஒரு வாரத்தில் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.
நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்.

ஜோசியக்காரர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.
ஜோசியக்காரர்கள் கடவுள் அல்ல.

Sunday 5 July 2015

கோவில் நகரம்

மதுரையை கோவில் நகரம் என்று சொல்வார்கள். காரணம் மதுரையில் ஒவ்வொரு தெருவிலும் எதாவது ஒரு சின்னஞ்சிறு கோவில் இருக்கும்.
ஆனால் இவை பக்தியின் காரணமாக உருவாக்கப்பட்டவை என்று தவறாக நினைத்துவிட கூடாது.
பொதுமக்கள் பலரும் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உருவாக்கப்பட்ட கோவில்களே அதிகம்.
நான் வசிக்கும் பகுதியில் நான் வழக்கமாக(நான் மட்டும் அல்ல. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும்) குப்பையை சென்று போடும் இடத்தில் இன்று செங்கல்லை அடுக்கி அதன் மேல் பிள்ளையாரை உக்கார வச்சிருக்கானுங்க.
பிள்ளையாருக்கு சற்று தள்ளி குப்பையை போட்டு விட்டு வந்துவிட்டேன்.
எனக்கு இப்போ என்ன சந்தேகம் என்றால் இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்களும் இப்படி தான் உருவாக்கி இருப்பார்களோ என்று.

Thursday 2 July 2015

(+) x (-) = (-)

ஒரே நேரத்தில் நேர்மறை சக்தி,  எதிர்மறை சக்தி தூண்டப்படும் போது அல்லது செயல்படுத்தப்படும் போது அதன் முடிவு எதிர்மறையாகவே இருக்கும்.
கண்ணாடி, திருநீறு, குங்குமம், மஞ்சள், சாமி படம், யந்திரம், சாமி சிலை, தீபம் மற்றும் எல்லா ஈர்ப்பு சக்தி கொண்ட பொருட்களையும் எதிரெதிர் திசையில் வைத்தால் எதிர்மறை முடிவே ஏற்படும்.

உதாரணம் கண்ணாடியை நேர்மறை திசை நோக்கியும்,  இன்னொரு கண்ணாடியை எதிர்மறை திசை நோக்கியும் வைத்தால் முடிவு எதிர்மறையாக இருக்கும்.

ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றும் போது தீபம் நேர்மறை திசை நோக்கியும்,  எதிர்மறை திசை நோக்கியும் இருப்பதால் எதிர்மறை பலனே உண்டாகும்.

கோவில்களிலும் இதே நிலை தான். சில சிலைகள் நேர்மறை திசை நோக்கியும்,  சில சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
கோபுரங்களில் ஏராளமான சிலைகள் நேர்மறை திசை நோக்கியும், ஏராளமான சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
எனவே இவை கலியுகத்தின் அழிவை நமக்கு எளிதில் தருகின்றன.