Saturday 29 August 2015

மோதிரம்

சில காரணங்களால் மோதிரத்தை பற்றிய என்னுடைய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டேன். சில ஆய்வுகளுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். 

Sunday 23 August 2015

கோவில்கள், நவ கிரகங்கள்

எல்லா குலதெய்வ கோவில்களும் பெரும்பாலும் நேர்கோட்டு வடிவம் அல்லது  ட வடிவத்திலேயே இருக்கின்றன. எந்த குலதெய்வ கோவில்களிலும் நவகிரக வழிபாடே கிடையாது.
மற்ற கோவில்கள் ஓ என்ற (ஓம் அல்ல) வடிவில் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற வடிவில் கட்டப்பட்ட கோவில்கள் எதுவுமே குலதெய்வ கோவில்கள் அல்ல. மேலும் இவற்றில் நவகிரக வழிபாடு இருக்கிறது.
குலதெய்வ கோவில்கள் தான் ஓ வடிவ கோவில்களுக்கும் முந்தைய காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
நவகிரக வழிபாடு என்பது சரியா? என்பதையும் யோசிக்கிறேன். என் வாழ்க்கையில் 18 வருடங்களுக்கு முன் நவகிரக கோவில்களுக்கு சென்று வழிபட ஆரம்பித்த பின்னர் தான் அதிகமான, சமாளிக்க முடியாத கஷ்டங்கள் உண்டானது.
முதன்முதலில் சூரியன் கோவிலுக்கு தான் சென்றேன். பிறகு எல்லா கிரக கோவில்களுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன்.

நான் பாடும் பாடல்

Sunday 16 August 2015

ஜோதிட ஆராய்ச்சி

இன்றைய காலத்தில் பலர் ஜோதிட ஆராய்ச்சி என்ற பெயரில், ஜோசியம் போன்ற விசயங்களின் மீதுள்ள ஈர்ப்பால், இலவசமாக ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம், குறைந்த கட்டணத்தில் ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம் என்ற வாக்குறுதிகளை நம்பி, ஜாதகம் கணிக்கும் முயற்சியில், பயிற்சியில்  ஈடுபடுகிறார்கள்.
ஆனால் எனக்கு தெரிந்தவரை 99.99% ஜோசியர்கள், சராசரி மனிதர்களுக்கு கிடைக்ககூடிய சந்தோசங்களை பெறாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஜாதகம் கணிப்பவர்கள், பரிகாரம் செய்து கொடுப்பவர்கள், குறி சொல்பவர்கள் எல்லோருடைய நிலையும் இதுதான். 
இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
மீதம் இருக்கும் பணக்கார ஜோசியர்களும் எத்தனை நாட்கள் அந்த வசதியை அனுபவிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் எத்தனை நாட்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

Friday 7 August 2015

விருந்தோம்பல்

தமிழனின் தற்போதைய விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிப்பவை டீ, காபி, வடை, பஜ்ஜி, சமோசா, மதுபானங்கள் (பல நண்பர்களுக்கும், பல அலுவலக ஊழியர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் மதுபானம் விருந்தோம்பலாக இருக்கிறது)
டீ, காபி சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று எல்லா இயற்கை மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
ஆனால் வெள்ளைக்காரன் காலத்திற்கு முன்பு வரை தமிழனின் விருந்தோம்பலில் முதல் இடத்தில் இருந்த மோர் தற்போது உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
மோர் விற்கும் வண்டிகளில் மோருக்கு பதிலாக பழைய சோறை கரைத்து மோர் என்ற பெயரில் விற்கிறார்கள்.
மேலும் மாட்டிற்கு தீவனமாக ரசாயனம் சேர்க்கப்படுவதாலும், ரசாயன ஊசி போட்டு பால் கறக்கப்படுவதாலும், பாலில் ரசாயன குணமே இருக்கிறது. மேலும் பல நிறுவனங்கள் பால் கெட்டுபோகாமல் இருக்கவும் (பாக்கெட்டுகளில் நீங்கள் வாங்கும் பால் என்று கறந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு கறந்ததாக கூட இருக்கலாம்.), கெட்டி தன்மைக்காகவும் ரசாயனம் சேர்க்கிறார்கள்.  இதனால் இதில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா பால் பொருட்களும் ரசாயன தன்மை கொண்டதாகவே இருக்கிறது. மோர் உட்பட.



Thursday 6 August 2015

தங்கம், வெள்ளி

இடுப்பு, இடுப்புக்கு கீழ் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது எதிர்மறை சக்தி தரும்.

தங்கத்தில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது மிக விரைவாக எதிர்மறை சக்தி தரும்.(ஒட்டியாணம், கொலுசு, மெட்டி)

வெள்ளியில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது  எதிர்மறை சக்தி தரும். ஆனால் தங்கத்தோடு ஒப்பிடும் போது  இதன் வேகம் குறைவாக இருக்கும்.(அருணா கயிறு, கொலுசு, மெட்டி)

anatomic treatment

https://www.facebook.com/pages/Anatomic-Therapy/310438268995881?fref=ts

anatomic treatment பற்றிய தகவல்களை இந்த link இல் சென்று பாருங்கள் 

anatomic treatment 4

anatomic treatment 3


Monday 3 August 2015

பூமி தாய்

ப்ரம்ஹ ஸ்ரீ அனந்தராம தீட்சிதர்  எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.
இதை பூமி தாய் சொல்வதாக உள்ளது.
சில விசயங்களை என்னால் தரிக்க இயலாது. அதை செய்தால் அவர்களுக்கு நான் அதிக துன்பங்களை கொடுப்பேன் என்று பூமி தாய் சொல்வதாக இருக்கிறது.
தங்கத்தை பூமியில் வைக்க கூடாது.
பெண்களின் ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.
யந்திரங்கள், சிலைகள், சாளகிராம கல் பூமியில் வைக்க கூடாது.
சிலைகளுக்கு, சாளகிராம கல்லுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமி  மீது படக்கூடாது.

இங்கே ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை.
சிலைகளுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமிக்கு தான் செல்கிறது. இது சரியா?
அல்லது அபிஷேகம் செய்வது தவறா?

Sunday 2 August 2015

ஓம்

"ஓம்" என்பதை என்னால் மந்திரமாக பார்க்க முடியவில்லை.
"ஓம்" என்ற சொல்லுக்கும் கலியுகத்தின் அழிவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

காரணம் மந்திரங்களை "ஓம்' என்று சொல்லியபிறகு சொல்லும் போது நற்பலன்கள் கிடைக்காமல் கெடுபலன்களே கிடைப்பதாக கருதுகிறேன்.

"ஓம்" என்ற சொல்லை சொல்லாமல் மந்திரங்கள் சொல்லும் போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

உதாரணமாக,

"ஓம் நமசிவய"
என்று சொல்லும்போது கெடுபலன்களே  உண்டாவதாக கருதுகிறேன்.

ஆனால் ஓம் என்று சொல்லாமல் வெறுமனே

"நமசிவய"

என்று சொல்லும்போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

என்னுடைய பழைய பதிவொன்றில் பெண்கள் ஓம் சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தேன்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தவிர்க்க வேண்டிய சொல் "ஓம்" என்பது என் கருத்து.