Monday 27 April 2015

சீக்கியர்கள் vs தமிழர்கள்

அபியும் நானும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் அதில் தலைவாசல் விஜய் சொல்லுவார். "வண்டி ஓட்டிய சீக்கிய taxi driver ஐ நான் கேலி செய்தேன். அப்போது அவர் என்னிடம் 1ரூபாய் நாணயத்தை கொடுத்து நீங்கள் முதலில் சந்திக்கும் சீக்கிய பிச்சைக்காரனிடம் இந்த நாணயத்தை போடுங்கள் என்றார். நான் சீக்கிய பிச்சைகாரனை தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் அந்த 1 ரூபாய் நாணயம் என்னிடமே இருக்கிறது" என்று.
தன் இனத்தில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்ற பெருமை சீக்கியர்களுக்கு இருக்கிறது.
தமிழனுக்கு இருக்கிறதா?

பிச்சைக்காரர்களை பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். 
இவர்கள் என்ன பாவம் செய்தார்களோ இப்படி பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.
கை,கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. பிறகு ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
இவர்களுக்கு பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். அது போதும் நாம் புண்ணியம் சேர்க்க.
இவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கூட்டம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறதோ?

2000 ஆண்டில் சில வாரங்கள் நண்பன் அசோக்கோடு விஜயவாடாவில் தங்கி இருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னது என் மனதில் முள்ளாக தைத்தது. 
"விஜயவாடாவில் பிச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். தெலுங்கர்கள் அல்ல" என்று.

இந்துத்துவா என்று பேசும் இந்து அமைப்புகள் யாராவது கோவில்களில் இந்துக்கள் பிச்சை எடுக்கிறார்களே. அவர்கள் நிலையை மாற்ற வேண்டாமா என்று யோசித்து இருக்கிறார்களா? கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றவேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இந்துக்கள் பிச்சை எடுத்தால் இவர்களுக்கென்ன? 
பெரும்பாலான இந்துக்களுக்கு ஒரே எண்ணம் தான். "பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்".

யாராவது பிரபல நடிகர் அல்லது நடிகை இஸ்லாம் மதத்திற்கு மாறினால் அதை பெருமையாக பேசும் இஸ்லாம் அமைப்புகளோ, இஸ்லாமியர்களோ தங்கள் தொழுகைக்கு செல்லும் பள்ளிவாசல், தர்காவில் இஸ்லாமியர்கள் சிலர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும். இஸ்லாமியர்களில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக கோடி கோடியாக பலர் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். மதத்தை பரப்புகிறேன் என்று கூறி அந்த பணத்தை ஆட்டைய போடும் கும்பல் தான் அதிகம் சுற்றுகிறதே தவிர, எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும், சர்ச்களில் பிச்சை எடுக்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும்.கிறிஸ்தவர்களில்  பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

ஓ இது தான் சேதியா?
அப்போ சீக்கிரமே சீக்கியர்களில் பிச்சை எடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கொடூர மனம் கொண்டவர் என்று அர்த்தம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் மணிமாறன் வீட்டு கிரகபிரவேசத்திற்க்கு சென்றிருந்தேன். அவன் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறான். அவனோடு வேலை பார்க்கும் சிலர் வந்திருந்தார்கள். அவனுடைய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் target achieve செய்பவர்களின் புகைப்படங்கள் அந்த அலுவலகத்தில் மாட்டி இருப்பார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது. 
"என்ன சார் அந்த போட்டோ மட்டும் ரொம்ப மாசமா இருக்கே. என்ன செய்யலாம்."
"கவலைய விடுங்க. சீக்கிரமே போட்டோவுக்கு மாலைய போட்ருவோம்".
"வாய கழுவுங்க சார்"
சற்று யோசித்து பாருங்கள். target பிரஷர் இவர்களை இப்படி கூட யோசிக்க வைக்கிறது. 

ஒருவன் முன்னேறுகிறான் என்றால் நாமும் முன்னேற நினைக்க வேண்டுமே தவிர அவனை அழிக்க நினைத்தாலோ, அல்லது அவனை நம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாலோ அது அழிவை மட்டுமே தரும்.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு உள்ளாக நம் தமிழ் இனத்தில் பிச்சைக்காரகள் இல்லாத இனமாக மாற்ற ஏதாவது செய்வோம். 
பிச்சைக்காரர்கள் இல்லாமல் போய் விட்டால் பிறகு நான் எப்படி புண்ணியம் சேர்ப்பது என்று மட்டும் யோசித்து விடாதீர்கள். 

சித்தர்கள், கிரகங்கள்

சித்தர்கள், நவ கிரகங்கள் எல்லோருமே யோக்கியமானவர்கள் என்று சொல்லவே முடியாது.
மாற்றான் மனைவியை புணர்ந்த சித்தர்களும், கிரகங்களும் இருந்திருக்கிறார்கள்.
மேலும் நான் ஏற்கெனவே சொன்னது போல் நம் ஆயுள் குறைவிற்கு சித்தர்களே காரணகர்த்தா.
சித்தர்கள் தாங்கள் கண்டுபிடித்த வசியம், மோகனம், மாராணம், ஸ்தம்பனம் மற்றும் பல மந்திர வித்தைகளை சோதித்து, பிறர் மீது பிரயோகித்து பார்த்த பிறகே வெளியில் சொல்லி இருந்திருக்கிறார்கள்.
சித்தர்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
பின் எதற்காக எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை கண்டுபிடித்தார்கள்?
பெண்களை வசியம் செய்யும் மந்திரங்களை இவர்கள் யார் மீதெல்லாம் பிரயோகித்து இருக்கிறார்கள்?
இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

Saturday 25 April 2015

ஜாதகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே ஜகத்தை ஆண்டது கிடையாது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே தரணியை ஆண்டது கிடையாது.

Friday 24 April 2015

ஆசிரியர் பத்மநாபன்

1993 வரை v.h.n.hr.sec.school இல் படித்தேன்.
11ஆம் வகுப்பில் வகுப்பு ஆசிரியராக திரு.பத்மநாபன் இருந்தார்.
எந்த ஒரு மாணவனையும் அடித்ததாக ஞாபகம் இல்லை.
எல்லா மாணவர்களிடமும் பொதுவாகவே எப்போதும் பேசுவார். தனித்து குறிப்பிட்டு யாரையும் சொல்லமாட்டார்.
அவர் அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று 
தம்பி நீங்க இப்ப சிரிக்கிற சிரிப்பு வேற, இனிமே நீங்க சிரிக்கப்போற சிரிப்பு வேற 
என்று. அப்போது எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை.
பள்ளிக்கூட வயதில் ஜாதி,மதம்,பணம்,அந்தஸ்து,போட்டி,பொறாமை,என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் சிரிக்கிறோம். கல்லூரி பருவத்தில் இளமைக்கால சிரிப்புகள் உண்டாகின்றன.
ஆனால் கல்லூரி முடிந்து ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது. அது முதல் சிரிப்பு இல்லாமல் போய்விடுகிறது. சினிமா நகைச்சுவை காட்சிகளுக்கும், நகைச்சுவையான பதிவுகளுக்கும் மட்டுமே சிரிக்கிறோம். 

ஆனால் வாழ்க்கையில் உண்மையில் சிரிப்பு வருகிறதா?

Thursday 23 April 2015

திதி கொடுப்பது

இறந்த ஒருவருடைய ஆன்மா கடவுளை அடைந்து விட்டதாகவும், நம் உடனேயே சில காலம் இருப்பதாகவும், மறுபிறவி எடுத்து வாழ்வதாகவும் நம்புகிறோம்.

கடவுளை அடைந்து விட்ட ஆன்மாவிற்கு திதி கொடுப்பது கடவுளுக்கே திதி கொடுப்பதாகத்தானே அர்த்தமாகும்.

நம் உடன் இருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுப்பது சரியா?

மறுபிறவி எடுத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுக்கலாமா?
உயிரோடு இருப்பவர்களுக்கு திதி கொடுக்கலாமா?

நம்முடைய இந்த பிறவி நமது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சி என்று நம்புகிறோம். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நம்முடைய பூர்வ ஜென்ம வாரிசுகள் ஏதோ ஓர் இடத்தில் நமக்கு தற்போது திதி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றால், அது சரியா? உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு திதி கொடுக்கலாமா?

நான்

இந்த உலகத்தில் நிகழும் எல்லா நல்ல விசயங்களையும் நேர்மறை சக்தியின் விளைவாக நான் பார்க்கிறேன்.
எல்லா கெட்ட விசயங்களையும் எதிர்மறை சக்தியின் விளைவாக பார்க்கிறேன்.

Monday 20 April 2015

ஜம்பலக்கடிபம்பா

ஒரு காலத்தில் நான் சைட் அடிச்ச புள்ளைங்க எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல அதுக பெத்த புள்ளைகளை காலேஜ்ல சேர்க்க போகுதுங்க.
டேய் ஜம்பலக்கடி பம்பா சொக்கா மவனே நீ மட்டும் வருசா வருசம் உன் பொண்டாட்டியையே திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு திரியிற.
மவனே நீ சும்மா இருந்தாலும் எவனோ ஒருத்தன் உன் பொண்டாட்டிக்கு தாலிய கட்டிடுறான்.

கோவில் கருவறை

கோவில் கருவறையின் உள்ளே ஏதாவது உயிரினம் 24 மணிநேரமும் இருந்தால் அந்த உயிரினம் விரைவில் மரணமடையும். காரணம் கருவறையின் மேலே இருக்கும் கோபுரமானது கீழே இருக்கும் சக்தியை 24 மணிநேரமும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக ஒரு மீன் தொட்டியை கருவறையின் உள்ளே வைத்தால் அது விரைவில் மரணமடையும்.

Sunday 19 April 2015

பாசக்கார பயலுக

என்னுடைய சில சொந்தகாரனுங்களின் பேச்சுக்கு என்னோட மைன்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கிறது.

உடம்புக்கே முடியல.
(நான் மட்டும் ஆரோக்கியமாவா இருக்கேன்)

வருமானமே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.
(அப்புறம் எப்படிடா புதுசு புதுசா நிலம் வாங்குறீங்க? வீட்ட கட்டுறீங்க? இல்லிட்டி வீடாவே வாங்குறீங்க?)

இருக்கிற கடனை அடைக்கவே கஷ்டமா இருக்கு.
(ஓ அந்த கவலை தீர தான் அப்பப்ப பாரீன் டூர் போயிட்டு வாரீங்களா?)

யார் கூடயும் பேசுறது இல்ல. நாத்தனார் கூட சண்ட. கொழுந்தன் கூட சண்ட. மச்சினன் கூட சண்ட.
(போன வாரம் தானடா குலதெய்வம் கோவில்ல உங்க எல்லாரையும் பார்த்தேன். ஒண்ணா உக்காந்து கூடி கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தீங்களேடா)

உன் வீடு என்ன பக்கத்துலயா இருக்கு. உன்ன வந்து பாக்க. கிருஷ்ணாபுரம் காலனில அவுட்டர் ஏரியாவுல இருக்க. எம்புட்டு தூரம் தெரியுமா?
(ஏண்டா வெளியூர்ல இருக்குற பணக்கார சொந்தக்காரனுங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வாரீங்க. அது என்ன அடுத்த தெருலயாடா இருக்கு? நீங்க வரவே வேண்டாம்டா)


Saturday 18 April 2015

I love you

பொண்ணுங்க என்னை கூப்பிடணும்னு என் பேரை ஐ லவ் யூ என்று மாற்றி வைத்துக் கொண்டேன்.
இப்ப "ஐ லவ் யூ அண்ணா" "ஐ லவ் யூ அண்ணா"னு கூப்பிடுதுங்க.
என்ன கொடுமை சார் இது?

Friday 17 April 2015

சூன்யத்தை வணங்குகிறோம்

பிரமிட் எப்படி அதன் கீழே இருக்கும் நிலத்தை சூன்யமாக மாற்றுகிறதோ அதேபோல் கடவுள் சிலைகளின் மேலே இருக்கும் கோபுரங்கள் சிலைகளை சூன்யமாக மாற்றுகின்றன.
சூன்யமான சிலைகளை தான் எல்லோரும் வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
பிரமிடின் கீழே ஒரு மீன் தொட்டியை வைத்தால் அந்த மீன் சில நாட்களில் கொடூரமான முறையில் இறக்கும்.
அதே போல் கோவில் கருவறையில் ஒரு மீன் தொட்டியை வைத்தால் அதுவும் மரணமடையும்.

Thursday 16 April 2015

ஆறு

ஆறானது எந்த திசையில் இருந்து எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு ஆற்றிலும் குளிப்பதற்கான பலன்கள் மாறும்.

மன்மத வருடம்

Tuesday 14 April 2015

மார்கழி

குளுமையான மார்கழி மாதத்தை தமிழ் புத்தாண்டாக வைக்காமல் அக்னி வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் பண்டைய தமிழன்?

Sunday 12 April 2015

mts wifi

mts wifi என்னமோ ஓவர் ஸ்பீடுல வரும்ன்னு விளம்பரம் பண்ணுறானுங்கன்னு நம்பி வாங்கினேன்.
ஆனா பல சமயம் 1kbps ஸ்பீடுல தான் வருது.
போஸ்டரை காட்டி எமாத்திட்டானுங்க.

தேர்தல்

இந்திய அரசாங்கம் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடி அமைக்கவும், அதற்க்கு பாதுகாப்பு கொடுக்கவும், வோட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டியை பாதுகாக்கவும், வோட்டு எண்ணவும் பல கோடி பணத்தை செலவு செய்கிறது.
தேர்தலுக்கு தனியாக ஒரு website create செய்து அதன் மூலம் ஓட்டு போடும் வசதியை செய்தால் மக்கள் தங்கள் வீட்டில், அலுவலகத்தில், தங்கள் மொபைல் போனில் இருந்தே ஓட்டு போட முடியும். இதனால் பல கோடி ரூபாய் மிச்சமாகும். 
voter idயை user name ஆக வைத்துக் கொள்ளலாம். password ஐ அவரவர் create செய்யும்படி செய்து கொள்ளலாம்.
மேலும் இந்திய மக்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் அங்கிருந்தபடியே ஓட்டு போட முடியும்.
மேலும் தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே வெற்றிபெற்றவரை தெரிந்துகொள்ள முடியும்.
இங்கே இன்னொரு கேள்வி எழும்.
கிராம மக்கள் எல்லோருமே இணையத்தை பயன்படுத்த தெரிந்தவர்களா? அவர்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்?என்பது.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அது சாத்தியமே. 
10 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் செல் போன் வைத்திருந்தார்களா? இல்லையே. ஆனால் இப்போது அவர்களும் செல் போன் பயன்படுத்துகிறார்களே. அது போல் தான் இதுவும். 
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?

என்னுடைய இந்த கருத்து உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக share செய்யுங்கள். நன்றி.

பண்டைய தமிழன்

வீரம், போர்பயிற்சி, தற்காப்பு இவற்றை பண்டைய தமிழன் பிறருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டான்.
வந்தாரை வாழ வைத்த தமிழன் தன் இனத்தை வாழவைக்க தவறிவிட்டான்.

Friday 10 April 2015

வெங்கடாஜலபதி

வெங்கடாஜலபதி படத்தை தொட்டு கும்பிட்டு reshare செய்தால் 7 நாட்களில் கடன் பிரச்சனை தீரும் என்று ஒருவர் மூஞ்சி புக்கில் வெளியிட்டிருந்தார். நானும் சென்ற வாரம் தொட்டு கும்பிட்டு reshare செய்தேன்.
நேற்று வரை கடன் பிரச்சனையில் சிக்கி தவித்த நான் இன்று என் கடனையும் அடைத்துவிட்டு 1000கோடி ரூபாய் சொத்துக்கும் அதிபதி ஆகிவிட்டேன்.
எல்லாம் அந்த வெங்கடாசலபதியின் அருள்.
ஐயோ இப்ப நான் எதையாவது வாங்கணுமே!
இந்த தெரு என்ன விலைன்னு கேளு!
அட இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!

Tuesday 7 April 2015

இமயமலையும் வட துருவமும்


இமயமலை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சென்டிமீட்டர் உயர்கிறது என்று சொல்கிறார்கள். இதற்க்கு காரணம் வடதுருவத்தின் ஈர்ப்புவிசை என்று சொல்கிறார்கள்.
ஆனால் இது தவறு என்பது என் கருத்து.
வடதுருவத்தின் ஈர்ப்பு விசையினால் தான் இமயமலை உயர்கிறது என்றால், இமயமலை இந்தியாவின் வடபகுதியில் தோன்றி இருக்காது.  ரஷ்யாவிற்கும் வடக்கில் வடதுருவ பகுதியில் தான் இமயமலை  தோன்றி இருக்கும்.
இமயமலை வேறு ஏதாவது காரணத்தினால் தான் உயர்கிறது. 
நிலப்பரப்பின் அடித்தட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்க்கு காரணமாக இருக்கும்.

வடதுருவம்,தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை காந்தசக்தி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் கட்டுப்பாட்டில் தான் பூமியின் சுழற்ச்சி செயல்படுகிறது.இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் போராட்டங்களை எளிதில் அறியமுடியும்.

சூரியனின் வெயில் சில மாதங்கள் வடக்கு நோக்கிய வாசலில் விழும். சில மாதங்கள் தெற்கு நோக்கிய வாசலில் விழும். இதற்க்கு காரணம் இந்த இரண்டு துருவங்களின் காந்த ஈர்ப்பு சக்தியில் ஏற்படும் பூமியின் சுழற்ச்சி மாற்றமே. 

வடதுருவம், தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை தான் செயல்படுகிறது. 

வடதுருவத்தில் மட்டுமே அதிகமான ஈர்ப்புவிசை இருக்குமானால் பூமியின் சுழற்ச்சியே மாறிவிடும். 
வடதுருவத்தில் மட்டுமே ஈர்ப்புவிசை காந்தசக்தி இருக்கிறது என்பது பொய்யே.



Friday 3 April 2015

சோமாலியா

இவர்களை வாழ வைக்க வக்கில்லை. செவ்வாய்கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று பல கோடி பணத்தை செலவு பண்ணி ஆராய்ச்சி பண்றாணுங்க. தூ.....