Friday 24 April 2015

ஆசிரியர் பத்மநாபன்

1993 வரை v.h.n.hr.sec.school இல் படித்தேன்.
11ஆம் வகுப்பில் வகுப்பு ஆசிரியராக திரு.பத்மநாபன் இருந்தார்.
எந்த ஒரு மாணவனையும் அடித்ததாக ஞாபகம் இல்லை.
எல்லா மாணவர்களிடமும் பொதுவாகவே எப்போதும் பேசுவார். தனித்து குறிப்பிட்டு யாரையும் சொல்லமாட்டார்.
அவர் அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று 
தம்பி நீங்க இப்ப சிரிக்கிற சிரிப்பு வேற, இனிமே நீங்க சிரிக்கப்போற சிரிப்பு வேற 
என்று. அப்போது எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை.
பள்ளிக்கூட வயதில் ஜாதி,மதம்,பணம்,அந்தஸ்து,போட்டி,பொறாமை,என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் சிரிக்கிறோம். கல்லூரி பருவத்தில் இளமைக்கால சிரிப்புகள் உண்டாகின்றன.
ஆனால் கல்லூரி முடிந்து ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது. அது முதல் சிரிப்பு இல்லாமல் போய்விடுகிறது. சினிமா நகைச்சுவை காட்சிகளுக்கும், நகைச்சுவையான பதிவுகளுக்கும் மட்டுமே சிரிக்கிறோம். 

ஆனால் வாழ்க்கையில் உண்மையில் சிரிப்பு வருகிறதா?

No comments:

Post a Comment