Saturday 30 May 2015

மதுரை

நான் திமுக வை எதிர்ப்பவன்.
ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் மதுரையில் ஒரு அடக்குமுறை நிகழ்ந்தது என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.
மதுரையில் இரவிலும் கூட எந்த பகுதிக்கு சென்றாலும் உணவகங்கள் செயல்படும், உணவு கிடைக்கும் என்பது மதுரையின் பெருமைகளில் ஒன்று. ஆனால் இந்த முறை அதிமுக ஆட்சி அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த அடக்கு முறையை காவல் துறை மூலம் செயல்படுத்தியது. 
மதுரையில் இரவு 11 மணிக்கு மேல் எங்குமே உணவகங்கள் செயல்பட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 
மதுரைக்காரனாக என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தீவிரவாதம்

ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டி விடுகிறார்கள். காரணம் தீவிரவாதத்தை தூண்டினால் மட்டுமே இவர்களின் ஆயுதங்களை விற்று அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடியும். ஆயுதங்கள் தயாரிப்பவர்களை அழிக்காமல் தீவிரவாதத்தையும் அழிக்க முடியாது.
தீவிரவாத்தை தூண்டினால் மட்டுமே தீவிரவாதிகளுக்கு கொலை செய்யும் எண்ணம் வரும். கொலை செய்ய ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்பவர்கள் அல்ல. ஒவ்வொரு விதமான ஆயுதங்களும் பல ஆயிரங்களும் பல லட்சங்களும் கொடுத்து தான் வாங்க வேண்டும். அதன் மூலம் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்.
சற்றே யோசித்து பாருங்கள் தீவிரவாதம் இல்லாமல் போய்விட்டால் இவர்களால் 1 பைசா கூட சம்பாதிக்க முடியாது. எனவே இவர்கள் தீவிரவாதத்தை தூண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்.

திருநீறு, குங்குமம், மஞ்சள் தூள்

திருநீறு, குங்குமம், மஞ்சள் தூள் இவற்றை வீட்டின்  கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருந்து எடுத்து பூசுவதே சரியானது என்பது என் கருத்து.

சாம்பிராணி, தசாங்கம்

சாம்பிராணி, தசாங்கம் இவற்றை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து தூபம் இடுவது சரியானதாக கருதுகிறேன். 
மேற்கு அல்லது தெற்கில் வைத்து  தூபம் இடுவதை தவறாக கருதுகிறேன்.
வாசனை திரவியங்களையும் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைத்திருப்பது சரியானது என்பது என் கருத்து.

Tuesday 26 May 2015

படைத்தல்

மனிதன் என்ற விலங்கை படைத்த பிறகு கடவுள் தன் படைக்கும் தொழிலை நிறுத்திக் கொண்டான்.
இவனுங்களே நம்மை அழிச்சிடுவானுங்க! என்ற பயம் அவனுக்கு வந்து விட்டது. அடுத்து வேறோர் உயிரினத்தையும் படைத்தால் அதற்கு வேலைக்காரனாக மாற்றி விடுவார்களோ என்று பயம் வந்து விட்டது.

Monday 25 May 2015

அரசமரம், ஆலமரம்

அரசமரம்,  ஆலமரம் வீட்டில் வளரக்கூடாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு துன்பமே நேரும்.

Tuesday 19 May 2015

அசரீரீ என்பது உண்மையா?

எந்த ஒரு பொருளும் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்ப வேண்டும் என்றாலும் அந்த பொருள் மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளாக இருக்க வேண்டும் அல்லது மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளின் மூலமாகவே சப்தத்தை எழுப்ப முடியும். 
கண்ணால் காணமுடியாத காற்று, கண்ணுக்கு தெரியக்கூடிய பொருட்களை அசைய செய்து சப்தம் எழுப்புகிறது.
காற்று இசையை எழுப்ப வேண்டும் என்றாலும் அதற்கு கண்ணுக்கு தெரியக்கூடிய புல்லாங்குழல் மற்றும் பல விதமான பொருட்கள் தேவை. 
கண்ணுக்கு தெரியாத ஒரு பொருளால் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்பவே முடியாது.

அவர்கள் திரைப்படம் பார்த்து இருப்பீர்கள். அதில் கமல்ஹாசன் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு பொம்மை மூலமாக சுஜாதாவிடம் தன் காதலை வெளிப்படுத்துவார். 
பொம்மையை வைத்துக்கொண்டு வாயை அசைக்காமலேயே சப்தத்தை எழுப்பி நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த கலை தற்போது தான் மக்களை மகிழ்விப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கலை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவதற்காக தான் பயன்படுத்தப்பட்டது. 
ஆம். இந்த கலையை உருவாக்கி பயன்படுத்தியவர்கள் போலி சாமியார்களும், மதகுருமார்களும் தான்.
அவர்கள் தான் இது போல் பேசி கடவுளே சொல்கிறார் என்று தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு மன்னர்களையும், மக்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்தார்கள். 
அசரீரீயாக கடவுள் சொன்னார் என்று கட்டவிழ்க்கப்பட்ட தகவல்கள் அனைத்தும்  100% பொய்யே. அவை போலி சாமியார்களாலும், மதகுருமார்களாலும் எழுப்பப்பட்ட சப்தங்களே.

Sunday 3 May 2015

சைவம் vs வைணவம்

சிவனை கும்பிடும் வகையறாக்கள், பெருமாளை கும்பிடும் வகையறாக்கள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள்.
சிவனே  பெருமாள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கும் போது, பெருமாளே சிவனுக்கு பெண்ணை கொடுக்கும் போது மனிதன் பெண்ணை கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டேன் என்று சொல்வது கடவுளையே அசிங்கப்படுத்துவதாக தானே அர்த்தம்?