Tuesday 19 May 2015

அசரீரீ என்பது உண்மையா?

எந்த ஒரு பொருளும் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்ப வேண்டும் என்றாலும் அந்த பொருள் மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளாக இருக்க வேண்டும் அல்லது மனிதனின் கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளின் மூலமாகவே சப்தத்தை எழுப்ப முடியும். 
கண்ணால் காணமுடியாத காற்று, கண்ணுக்கு தெரியக்கூடிய பொருட்களை அசைய செய்து சப்தம் எழுப்புகிறது.
காற்று இசையை எழுப்ப வேண்டும் என்றாலும் அதற்கு கண்ணுக்கு தெரியக்கூடிய புல்லாங்குழல் மற்றும் பல விதமான பொருட்கள் தேவை. 
கண்ணுக்கு தெரியாத ஒரு பொருளால் மனிதனின் காதுகளுக்கு கேட்கக்கூடிய சப்தத்தை எழுப்பவே முடியாது.

அவர்கள் திரைப்படம் பார்த்து இருப்பீர்கள். அதில் கமல்ஹாசன் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு பொம்மை மூலமாக சுஜாதாவிடம் தன் காதலை வெளிப்படுத்துவார். 
பொம்மையை வைத்துக்கொண்டு வாயை அசைக்காமலேயே சப்தத்தை எழுப்பி நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த கலை தற்போது தான் மக்களை மகிழ்விப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கலை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவதற்காக தான் பயன்படுத்தப்பட்டது. 
ஆம். இந்த கலையை உருவாக்கி பயன்படுத்தியவர்கள் போலி சாமியார்களும், மதகுருமார்களும் தான்.
அவர்கள் தான் இது போல் பேசி கடவுளே சொல்கிறார் என்று தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு மன்னர்களையும், மக்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்தார்கள். 
அசரீரீயாக கடவுள் சொன்னார் என்று கட்டவிழ்க்கப்பட்ட தகவல்கள் அனைத்தும்  100% பொய்யே. அவை போலி சாமியார்களாலும், மதகுருமார்களாலும் எழுப்பப்பட்ட சப்தங்களே.

No comments:

Post a Comment