Wednesday 11 February 2015

குறி கேட்டல்

தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்கவோ அல்லது அவர்கள் கொடுக்கும் வேர் அல்லது வேறு பொருட்களையோ வாங்க கூடாது என்று பழைய பதிவில் சொல்லி இருந்தேன்.
1998 என்று நினைக்கிறேன். மதுரை பை பாஸ் ரோட்டில் ஒரு கடையில் விற்பனை காரணமாக automobile spare parts கடைக்கு சென்றிருந்தேன். அங்கே குறி சொல்பவர்கள் வந்தார்கள். என்னுடன் இருந்தவர்கள் எனக்கு சொல்லும்படி கேட்டார்கள். அப்போது அவர்கள் தம்பிக்கு சட்டையில் பாக்கெட் தான் பெருசா இருக்கு ஆனால் அதில் பணம் இருக்காது என்று கூறினார்கள். அதற்கு முன்பு வரை எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால் அதற்க்கு பிறகு இன்று வரை கடன் சிக்கலில் மாட்டி தவிக்கிறேன். பிறகு ஆர்வகோளாறில் அவர்கள் கொடுத்த ஒரு பொருளை எலுமிச்சம்பழத்தில் வைத்து வைகை ஆற்றில் போட்டேன். என்னுடைய கஷ்ட காலம் ஆரம்பித்தது அன்று தான்.

பிறகு 2005 என்று நினைக்கிறேன். அப்போது நண்பன் சிங்காரவேலின்  கடையில் அமர்ந்து இருந்தேன். அங்கே குறி சொல்பவர்கள் வந்தார்கள். அவனும் சும்மா இருக்காமல் என்னை கோர்த்து விட்டான். இவனுக்கு சொல்லுங்க என்று. (என்னை ஏதாவது சிக்கலில் கோர்த்து விடுவது என்றால் என்னை சுற்றி இருக்கும் பலருக்கும் அல்வா சாப்பிடுவது போல இருக்கும் போல)
தம்பிக்கு கல்யாணம் late ஆக தான் நடக்கும். அப்படி நடந்தாலும் நிம்மதி, சந்தோசம் இருக்காது என்று சொன்னார்கள். (டேய் ங்கொய்யால ஆண்டவா எனக்கு மட்டும் ஏண்டா இப்படி???) 37 வயதாகியும் திருமணம் செய்ய முடியாமல் இருக்கிறேன்.
அடுத்த ஒரு வாரத்தில் வாழ்க்கை மாறும் என்றார்கள். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பெரிய விபத்தில் சிக்கினேன். அன்றிலிருந்து வாழ்க்கை பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.
அவர்கள் கொடுத்த வேர் ஒன்றை முச்சந்தியில் போய் வைத்தேன்.
அவர்கள் கையில் வைத்திருந்த ஓலை சுவடியில் நூல் போட்டு பார்க்க சொன்னார்கள். (இது விதியா? இல்லை சதியா? எனக்கே தெரியல?????!!!!)
அப்போது அதில் இரண்டாவதாக வந்த படம் கீழே இருப்பது தான்.


சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இருந்த இயேசு.
அன்றிலிருந்து இன்று வரை பல வீண் பழிகளையும், அளவுக்கு அதிகமான அவமானங்களையும் சுமந்து கொண்டிருக்கிறேன்.
தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்கவோ, அல்லது அவர்கள் கொடுக்கும்  எந்த ஒரு பொருளையுமோ வாங்காதீர்கள். 

No comments:

Post a Comment