Sunday 10 August 2014

பட்டாசுகள்

பட்டாசுகள் என்பது யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளின் சிறிய வடிவம் தான்.

பலர் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிப்பது வீரம் என்றும், தங்கள் அந்தஸ்தின் வெளிப்பாடு என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். loud speaker may become a curse என்று முன்பு ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதே போல் தான் இந்த பட்டாசுகளும்.

அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிப்பது பச்சிளம் குழந்தைகளுக்கும், இதய நோயாளிகளுக்கும், உடல் நலம் குன்றிய முதியவர்களுக்கும் துன்பத்தையே தரும்.

நாகர்கோவில் சுற்று பகுதியிலும், கேரளாவிலும் ஐயப்பன் கோவில்களில் வெடி காணிக்கை என்று செலுத்துகிறார்கள். ஐயப்பனுக்கும் வெடிக்கும் என்னாங்கடா சம்பந்தம்? அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்கிறார்கள். பட்டாசுகள் 7ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள். ஐயப்பன் எப்படா பிறந்தார்? நரகாசூரன் எப்படா கொல்லப்பட்டான்?

பட்டாசுகளில் இருக்கும் எல்லாமே இயற்கையை அழிக்கும் சக்தி கொண்ட ரசாயன பொருட்கள்.

No comments:

Post a Comment