Sunday, 31 August 2014

காவடி

மயிலை கொன்றோ அல்லது துன்புறுத்தியோ புடுங்கிய அதன் இறகை காவடியில் சொருகிக் கொண்டு காவடி தூக்குவதை மயிலை வாகனமாக கொண்ட முருகன் ஏற்றுக் கொள்வாரா?

இப்போது நீயா? நானா?

Sentiment என்பது தேவை இல்லாதது, Individuality தான் முக்கியம் என்றால் பெற்ற தாயையும், தந்தையையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாம்.
உடன் பிறந்த சகோதரிகள் யாரோடு சுற்றினால் நமக்கென்ன என்று விட்டு விடலாம். கட்டிய மனைவி வேறு யாரோடு படுத்தால் நமக்கென்ன என்று விட்டு விடலாம். பெற்ற பிள்ளையை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று விடலாம்.

அப்புறம் என்ன மசுருக்கு உயிர் வாழணும்.

புத்தன், ராகவேந்திரர்

புத்தனும், ராகவேந்திரனும் கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளையையும் விட்டு வந்தவர்கள் தான். தன் குடும்பத்தின் மீது அன்பு காட்ட தெரியாத இவர்கள்,  இந்த உலகத்திற்கு ஆன்மீகம் என்ற பெயரில் அன்பு காட்டி என்ன புடுங்க போகிறார்கள்?

புத்தன், ராகவேந்திரர் இருவரின் சந்ததிகள் பூமியில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து பார்க்கிறேன். உங்களில் யாருக்காவது பதில் தெரியுமா?

Saturday, 30 August 2014

எதிர்மறை சக்தி, தீய சக்தி

எதிர்மறை சக்தி, தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அளவை பொருத்து சூழ்நிலையை புரிந்து கொண்டு பேசும் திறன் மற்றும் செயல்படும் திறன் குறைவாக இருக்கும். அல்லது முழுவதும் இல்லாமல் இருக்கும்.

சிவனின் மனைவிகள்

சிவனுக்கு பெருமாளையும் சேர்த்து 3 மனைவிகள்.

Friday, 29 August 2014

தோஷம் கழிக்க

தலையை சுற்றி போட்டு தோஷம் கழிக்கும் பொருட்களான உப்பு, மிளகாய் வத்தல் போன்றவற்றை பலர் தங்கள் வீட்டு வாசலிலேயே வைத்து எரிக்கிறார்கள். இது தவறானது என்பது என் கருத்து.

புருவ திருத்தம்

பெண்கள் தங்களை அழகுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு புருவத்தில் இருக்கும் முக்கால்வாசி முடியை புடுங்கி விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது சற்று வயதான தோற்றத்தையும், சற்று விகாரமான தோற்றத்தையுமே தருகிறது.
அதை சரி செய்ய எஞ்சி இருக்கும் கால்வாசி முடியையும் சேர்த்து புருவத்தில் இருக்கும் எல்லா முடியையும் புடுங்கி விட்டால் தேவலோகத்து பெண்களைப் போல அழகாக இருப்பார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி

சுடு தண்ணீர் வாய்க்கால் ரோடு வழியாக வந்து கொண்டிருந்த போது பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிய இடத்தில் இந்த பாடலை ஒலி பரப்பி கொண்டிருந்தார்கள்.

ஆளான நாள் முதலா
யாரையும் நினைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே
வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணாணு சொல்லுறீகளே

இது என்ன பிள்ளையார் உங்க கிட்ட விரும்பிக் கேட்ட பாடலா?
இல்லாட்டி இந்த பாடலை நீங்க அவருக்கு டெடிகேட் பண்றீங்களா?

லோ ஹிப்

பண்டிகை நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் பட்டு சேலைகளில் ஏராளமான லோ ஹிப்களை பார்க்க முடிகிறது.
கலி முத்திடுத்து!

ஆய கலைகள் 64

2 நாட்களுக்கு முன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கீதோபதேசம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
"உன் பிள்ளைய அந்த டியூசன் சென்டருக்கு அனுப்பு. அங்க தான் ஞாயிற்று கிழமை கூட டியூசன் எடுக்குறாங்க".
ஆய கலைகள் 64ம் கற்ற தமிழன் எந்த ஒரு matriculation பள்ளிக்கோ, கல்லுரிக்கோ, பல்கலை கழகத்திற்கோ, டியூசன் சென்டருக்கோ சென்று படிக்காதவன்.
ஆனால் இவற்றில் படிக்கும் ஒரு டமிலனுக்கு கூட ஆய கலைகள் 64ம் தெரியாது.
Including me.

பிள்ளையார்

பிள்ளையார் தன் தம்பி முருகனின் காதலை சேர்த்து வைத்திருக்கலாம்.
ஆனால் இந்த உலகத்தில் உண்மையாக காதலிக்கும் எல்லோரும் பிள்ளையாரை வணங்கினால் அவர்கள் எல்லோரையும் சேர்த்து வைக்க பிள்ளையாரால் முடியாது.

குளியல்

தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன்பு ஒரு முறை குளிப்பது நல்லது.

Wednesday, 27 August 2014

சினிமா நட்சத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்களில் பார்த்திபன் அவர்கள் மட்டுமே ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் பதிலளிக்கிறார்.
மல்லிகா செராவத் மட்டுமே லட்சக்கணக்கான ரசிகர்களை டுவிட்டர் மூலம் பின்தொடர்கிறார்.

Fair&lovely

Fair&lovely தடவினா சிகப்பாகிடலாம்னு சொல்லி ஊரை ஏமாற்றி கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்குறானுங்க.

எதிர்மறை சக்தி

காகம், புறா இவற்றிற்கு உணவளிப்பது எதிர்மறை சக்தியையே தரும்.

மதுரை ரயில் நிலையம்

தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் சரக்கு அனுப்பும் அலுவலகத்தில் இன்னும் கையால் எழுதி பில் போடுகிறார்கள்.  அதிக நேரம் காத்திருக்கும் நிலையில் இருக்கிறது.

Sunday, 24 August 2014

லெட்சுமி

உலகத்திலேயே லெட்சுமியின் கையிலிருந்து மட்டும் தான் தங்க காசுகள் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.
ஒருவேளை இந்த ஆத்தா கள்ள கடத்தல் வியாபாரம் ஏதும் பண்ணுதோ?

வாஸ்து பகவான்

வாஸ்து பகவான் குத்த வச்சி உக்காந்தா எனக்கென்ன? கோவணம் கூட இல்லாம குப்புற படுத்தா எனக்கென்ன?

ஜாதகம்

ராகு சனியை பார்த்தால் எனக்கென்ன? சனியின் பொண்டாட்டியை பார்த்தால் எனக்கென்ன?

Friday, 22 August 2014

மகாபாரதம்

ஒரு பெண்ணை ஒரே ஒரு முறை துகிலுரித்த துச்சாதனனும், துகிலுரிக்க சொன்ன துரியோதனனும் கெட்டவர்களாம்.
பல பெண்களை தினம் தினம் குளிக்கும் போது நிர்வாணமாக்கி பார்த்து ரசித்த கிருஷ்ணன் கடவுளாம். அந்த பெண்களை பெற்றவர்கள் கிருஷ்ணன் செய்த கொடுமைகளை பார்த்து எந்த அளவு மனம் புழுங்கி இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்.
இன்னாங்கடா உங்க லாஜிக்கு?

Thursday, 21 August 2014

மகாபாரதம்

தர்மன் உண்மையிலேயே யோக்கியமானவனாக இருந்தால் ஒரு பெண்ணை ஐந்து ஆண்கள் திருமணம் செய்வது தவறு என்று சொல்லியிருக்க வேண்டும்.
பாஞ்சாலி உண்மையிலேயே கற்புடையவளாக இருந்தால் ஐந்து ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும். பாஞ்சாலியும் ஒரு வகையில் வேசி தான்.
தர்மன் கெட்டவன். அதனால் தான் அவன் நகர்வலம் சென்ற போது எல்லோரும் அவனை விட நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் நல்லவன். அதனால் தான் அவன் நகர்வலம் சென்றபோது எல்லோரும் அவனை விட கெட்டவர்களாக தெரிந்தார்கள்.

மகாபாரதம்

எனக்கு, மகாபாரதத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாண்டவர்கள்(1:5) கெட்டவர்களாக தெரிகிறார்கள். பல பெண்களோடு கூடி திரிந்த கிருஷ்ணன் கெட்டவனாக தெரிகிறான்.


Wednesday, 20 August 2014

பொதிகை (doordarshan)

பொதிகை தொலைக்காட்சியை தனியார் தொலைக்காட்சியின் தரத்திற்கு உயர்த்தினால் அரசாங்கத்திற்கு விளம்பரங்களின் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். tasmac மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம் கிடைக்கும்.
மதுரையில் யாரும் பொதிகை தொலைக்காட்சியை பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை.

அம்மா அவர்கள் இதைப்பற்றி யோசிப்பார்களா?

Tuesday, 19 August 2014

பணக்காரர்கள்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பலர் லட்சுமியையோ, குபேரனையோ வணங்குவதே இல்லை.

ஆனால் லட்சுமியையும்,  குபேரனையும் வணங்கும் பல கோடி பேர் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சுவரொட்டி

பிரசவ காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு ஆரோக்கிய குறைவாக இருப்பவர்கள் தினமும்  சுவரொட்டி சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.
சுவரொட்டி எல்லா ஆட்டிறைச்சி கடைகளிலும் கிடைக்கும்.

Monday, 18 August 2014

அரசு பேருந்து

அரசு பேருந்துகளில் மட்டுமே பேருந்தினுல் மழைநீர் ஒழுகுகிறது.
தனியார் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதே இல்லை.

மழை

பெண்ணுக்கு மழையில்
நனைவது பிடிக்கும்.
ஆணுக்கு அதை
பார்த்து ரசிப்பது பிடிக்கும்.

நீ

சலனமற்ற
என் மனக் குளத்தில்
கல் எறிந்து விட்டு
போனவள் நீ!
இன்னும்
அல்லாடிக் கொண்டு இருக்கிறது
பரிதாபத்துக்குரிய
என் பிம்பம்.
(அப்துல் ரகுமான் கவிதை)

இறைவனின் ஆசீர்வாதம்

இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
பக்கத்து சீட்
குழந்தையின் கால்
என்மீது.
(பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை.)

பயணம்

வெளியூர் பயணத்தின் போது பேருந்தில் யாராவது குழந்தைகளோடு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாலே அந்த பயணமே இனிதாகிறது.

என்ன உறவுமுறை?

பிள்ளையார், முருகன் இவனுங்க ரெண்டு பேருக்கும் ஐயப்பன் என்ன உறவு முறை?
இவனுங்க அப்பனுக்கு பிறந்ததால் சகோதரன் முறையா? இவனுங்க தாய்மாமனுக்கு பிறந்ததால் மச்சினன் முறையா? அப்பனுக்கும் தாய் மாமனுக்கும் பிறந்ததால் வேறு ஏதாவது புது உறவுமுறையா?

God vs Man

கடவள் செய்வது சரி என்றால் அதை மனிதன் செய்வதும் சரி தான்.
மனிதன் செய்வது தவறென்றால் அதை கடவுள் செய்வதும் தவறு தான்.
(கில்மா மேட்டர் உட்பட)

உணவு

2 தலைமுறைக்கு முன்பு வரை நம் முன்னோர்கள் வீட்டில் வளர்த்த ஆடு, கோழியை உணவாக்கி உண்டார்கள்.
ஆனால் நாம் 250 கிராம் அல்லது 500 கிராம் என்று வாங்கி உணவு சமைக்கிறோம்.
உணவகங்களில் ஒரே ஒரு துண்டு கறியை உண்கிறோம்.

சுத்தமான தேன் கண்டுபிடிக்க

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நீங்கள் வாங்கிய தேனை கொஞ்சம் ஊற்றுங்கள். தேனானது நீருக்குள் இறங்கும் சமயத்தில் நீரில் கரைந்து கொண்டே சென்றால் எந்த அளவிற்கு நீரில் கரைகிறதோ அந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்று அர்த்தம்.
சுத்தமான தேன் நீரின் அடிமட்டத்தில் பொன்னிறமாக தங்கும். எந்த அளவு தங்குகிறதோ அது மட்டுமே சுத்தமான தேன்.
அந்த தேனை நீரில் கலக்கினால் மட்டுமே நீரோடு கலக்கும்.

Saturday, 16 August 2014

அனுபவம்

வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், இழப்புக்களையும் ஓர் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் பல சூழ்நிலைகளில் பலருக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

தந்தையின் மரணத்தை அனுபவமாக எடுத்துக் கொள்ள முடியுமா?

வேண்டுதல்

சில கோவில்களில் நம் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நூலில் கட்டி கோவிலில் அதற்கென்று ஓர் இடத்தில் கட்ட சொல்கிறார்கள்.

நம் மனதில் இருக்கும் வேண்டுதலை புரிந்து கொண்டு நிறைவேற்றாத கடவுள் நாம் எழுதியதை படித்துவிட்டா நிறைவேற்ற போகிறான்.

Friday, 15 August 2014

லெட்சுமி

தினமும் சாயங்காலம் 6 மணிக்கு டியூப் லைட்டை ஆன் செய்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால் அப்போது தான் லெட்சுமி வீட்டிற்குள் நுழைந்து 1000 ரூபாய் நோட்டை கட்டுக்கட்டாக தருகிறார் என்கிறார்கள்.

விளக்கு கண்டுபிடிக்கப்படாத கால கட்டத்தில் லெட்சுமி யார் வீட்டுக்குள்ளும் நுழையவே இல்லையா?

கருட புராணம்

கருட புராணத்தின் படி மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கேற்ப நரகத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற பரப்பி விடப்பட்ட புரளிகள்.
என்னுடைய முந்தைய பதிவில் கூறியதைப் போல மனிதன் இறந்த பிறகு அவன் உடல் பூமியிலேயே எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது அல்லது பிற உயிரினங்களுக்கு இரையாகிறது.
இவ்வாறு இருக்கும் போது நரகத்தில் எந்த உடலுக்கு தண்டனை கொடுப்பார்கள்?
ஆன்மாவை எண்ணை சட்டியில் போட முடியாது.

Thursday, 14 August 2014

நரகாசுரன்

நரகாசுரன் கொல்லப்பட்டதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?
நான் சாப்பிடும் சாப்பாட்டில் நரகாசுரன் மண் அள்ளி போட்டானா?
என் சொத்துக்களை நரகாசுரன் ஆட்டைய போட்டானா?
அல்லது நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய முறைப் பெண்ணுக்கு அவள் அனுமதியின்றி  நரகாசுரன் வலுக்கட்டாயமாக தாலி கட்டினானா?
எனக்கும் நரகாசுரனுக்கும் என்னடா சம்பந்தம்?

எதற்கு?

பிள்ளையார் சதுர்த்தி,  ராம நவமி, கோகுலாஷ்டமி போன்றவற்றை நான் எதற்கு கொண்டாட வேண்டும்?

என்னுடைய பிறந்த நாளை பிள்ளையார், ராமன், கிருஷ்ணன் எல்லோரும் கொண்டாட போறானுங்களா?

என் பிறந்த நாளை கொண்டாடாத இவனுங்க பிறந்ததை நான் எதற்கு கொண்டாட வேண்டும்?

பிள்ளையாருக்கு பிறந்த நாள்னா அவன் அப்பன் சிவன், அம்மா பார்வதி, தம்பி முருகன், கொழுந்தியாள்கள் வள்ளி, தெய்வானை, தாய் மாமன் பெருமாள்,  அத்தை லட்சுமி இவனுங்க தான் கொண்டாடுவானுங்க.

Wednesday, 13 August 2014

Nighty

மின்சார கட்டணம் செலுத்த சென்றிருந்தேன். ஒரு பெண் நைட்டியோடு வந்து மின்சார கட்டணம் செலுத்துகிறார்.
இன்னும் கொஞ்ச நாள்ல டூ பீஸ்ல வந்து மின்சார கட்டணம் செலுத்துவாய்ங்க போல.

என்னாங்கடா உங்க சட்டம்

1) வெள்ளைக்காரன் காலத்தில் போட்ட சட்டத்தை தான் இன்னமும் follow பண்றானுங்க. ஆம்பள முட்டி தெரியிற மாதிரி கைலி கட்டினா ரெளடின்னு லத்தியால அடிக்குறானுங்க.
பொம்பள முட்டி தெரியிற மாதிரி ஆடை அணிந்தால் அதை மேல் நாட்டு நாகரீகம்முன்னு சொல்றானுங்க.
2) ஆண்களிடம் license  கேட்கும் டிராபிக் போலிஸ் scootyல போற எந்த பொண்ணையும் நிப்பாட்டி லைசென்ஸ் கேட்டு நான் பார்த்ததே இல்லை.
3) பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்றானுங்க. அதை நான் மறுக்கவே இல்லை.
ஆனால் ஆண்களின் உணர்ச்சியை துண்டும் வகையில் ஆபாசமாக உடை அணியும் பெண்கள் மீது உங்கள் சட்டம் பாயுமா?
சமூக வலை தளங்களில் selfie என்ற பெயரில் தங்களை தாங்களே அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் படமெடுத்து வெளியிடும் பெண்கள் மீது உங்கள் சட்டம் பாயுமா?
பொட்டச்சி காட்டுனா ஆம்பளைக்கு கை வைக்கணும்னு தான்டா தோணும் வெண்ணைகளா!
இதுவாடா உங்க டக்கு!
இன்னாங்கடா உங்க சட்டம்?

Monday, 11 August 2014

அமெரிக்கா

உலகத்தில் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அமெரிக்க அதிபர் என்ன சொல்றாருன்னு தான் கேக்குறானுங்க. அமெரிக்க அதிபர் என்ன கடவுளா?

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போட்ட அமெரிக்காவிற்கு உலக அமைதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?

Sunday, 10 August 2014

கொசுவை ஒழிக்கும் இயற்கையான முறை.(to destroy mosquito)


நம்மாழ்வார் அவர்கள் இறந்துவிட்டாலும் அவர் ஈரோடு புத்தக கண்காட்சியில் சொற்பொழிவாற்றியதை சென்ற வாரம் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அவர் சொன்ன தகவல்களை இங்கே தருகிறேன்.


தேங்கி இருக்கும் நீரில் தட்டான் பூச்சி  முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளிவந்த புழுக்கள் கொசுவின் முட்டைகளை உணவாக உண்ணும். அதனால் முன்பு கொசுத்தொல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ரசாயன பூச்சி மருந்து தெளிப்பதால் அந்த தட்டானின்  புழுக்கள் இறந்து விடுகின்றன. அந்த ரசாயன மருந்து கொசுவையோ அல்லது கொசுவின் புழுக்களையோ கொல்வதில்லை. அதனால் தான் கொசுக்கள் அதிகமாக இருக்கின்றன.

பட்டாசுகள்

பட்டாசுகள் என்பது யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளின் சிறிய வடிவம் தான்.

பலர் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிப்பது வீரம் என்றும், தங்கள் அந்தஸ்தின் வெளிப்பாடு என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். loud speaker may become a curse என்று முன்பு ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதே போல் தான் இந்த பட்டாசுகளும்.

அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிப்பது பச்சிளம் குழந்தைகளுக்கும், இதய நோயாளிகளுக்கும், உடல் நலம் குன்றிய முதியவர்களுக்கும் துன்பத்தையே தரும்.

நாகர்கோவில் சுற்று பகுதியிலும், கேரளாவிலும் ஐயப்பன் கோவில்களில் வெடி காணிக்கை என்று செலுத்துகிறார்கள். ஐயப்பனுக்கும் வெடிக்கும் என்னாங்கடா சம்பந்தம்? அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்கிறார்கள். பட்டாசுகள் 7ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள். ஐயப்பன் எப்படா பிறந்தார்? நரகாசூரன் எப்படா கொல்லப்பட்டான்?

பட்டாசுகளில் இருக்கும் எல்லாமே இயற்கையை அழிக்கும் சக்தி கொண்ட ரசாயன பொருட்கள்.

Saturday, 9 August 2014

திருநீறு, குங்குமம்

கை தவறி கீழே விழுந்த திருநீறு அல்லது குங்குமத்தை மீண்டும் எடுக்கவோ, சேகரிக்கவோ, நெற்றியில் பூசவோ கூடாது. அவ்வாறு செய்தால் ஆயுள் குறையும்.

Friday, 8 August 2014

Dominnos pizza விளம்பரம்

மாமியார் மருமகளிடம் சொல்றா *நீ ரொம்ப hotஆ இருக்க*. குடும்பம் வெளங்கும்டா!

மத்திய அரசு

மத்திய அரசு இதுபோல் சட்டங்கள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1) மத்திய அரசு வேலைக்கான இன்டர்வியூவில் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
2) பூணூல், ருத்ராட்சம், ஸ்படிகம் அணிந்தவர்களுக்கு மத்திய அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
3) மத்திய அரசு பணியில் இருப்பவர்கள் தினமும் நெற்றியில் பட்டை அல்லது நாமம் இட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
4) சிவன், பெருமாள் மற்றும் இவர்கள் குடும்பத்தாரோடும், தேவர்களோடும் நேரடியாக பேசும் சக்தி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
5) மத்திய அரசு ஊழியர்களுக்கு காவி உடை யூனிபார்ம் வழங்கப்படும்.

கேரளத்து குட்டி

மலபார் பெண்ணை பார்க்கும் போது மனதில் ஏற்படும் கிளுகிளுப்பு என்னவென்று ஒரு தமிழனுக்கு மட்டுமே தெரியும்.

ஒரு ஆம்ப்ளே மனசு இன்னொரு ஆம்ப்ளேக்கு தான் தெரியும்.

Thursday, 7 August 2014

கேரளா> ஆப்பிரிக்கா> தமிழ்

அழகில் சிறந்தவர்கள் கேரள பெண்களா? ஆப்பிரிக்க பெண்களா? தமிழ் பெண்களா?

நிச்சயமாக கேரளத்து தேவதைகள் தான்.

இரண்டாமிடம் ஆப்பிரிக்க அழகிகள்.

மூன்றாமிடம் டமில்.
டமிலெல்லாம் மண்டகனம் பிடிச்சதுக.

சிலுவை

ஆங்கில பேய் படங்களில் பேய்கள் சிலுவையை பார்த்த உடன் பயந்து ஓடுவதைப் போல் காட்டுகிறார்கள். பேய்கள் சிலுவை என்ற வடிவத்திற்கு பயப்படவோ, கட்டுப்படவோ செய்யாது. நேர்மறை சக்திக்கும்,  தெய்வ சக்திக்கும் மட்டுமே அது பயப்படும், கட்டுப்படும்.

ஏழ்மை தெரியாத பணக்கார வர்கம்

2008 ஆண்டுவாக்கில் ஒரு பணக்கார பெண்ணின் blog இல் இருந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.
அவள் பணக்கார வர்கத்தை சேர்ந்தவள். சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிபவள்.
மதுரைக்கார பெண். வெளிநாடுகளில் பணிபுரிந்ததால் அவ்வப்போது இந்தியாவிற்கு வருவாள். சென்னையில் நட்சத்திர உணவகத்தில் கல் தோசை சாப்பிட்டு அவள் எழுதிய விமர்சனத்தை இங்கே அப்படியே தருகிறேன். (2008ல் எழுதியது.)
*சென்னையில் கல்தோசை 500 ரூபாயாம். அம்மாடியோவ்! சென்னைல விலைவாசி ரொம்ப அதிகமாயிடுச்சு*
மதுரையில் நடைபாதை கடைகளில் 10 ரூபாய்க்கு தோசை சாப்பிட்டு விட்டு அதையே கொடுக்காமல் கடன் சொல்லிவிட்டு செல்லும் ஏழைகள் ஏராளம்.

உலகம் முழுக்க இருக்கும் ஏழைகளின் நிலை என்னவென்றே தெரியாத பணக்காரர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்களை போன்ற பலர் தான் அரசியலிலும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஏழ்மையை ஒழிப்பார்கள்?

இவர்கள் ஏழ்மையை ஒழிப்பார்கள் என்று நம்புவது முட்டாள்தனமானது.

Tuesday, 5 August 2014

ஒரு குழந்தை போதுமா?

தற்போது பலர் தங்களுக்கு ஒரு குழந்தை மட்டும் போதும் என்று நிறுத்திக் கொள்கிறார்கள்.

இது சரியல்ல என்பது என் கருத்து.

நான் என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. எனக்கு உடன் பிறந்தோர் யாரும் கிடையாது. ஒரே ஒரு பிள்ளையாக இருப்பது எப்பேற்பட்ட நரக வாழ்க்கை என்பதை முழுவதும் அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான். எனக்கு சகோதர பாசம் என்றால் என்னவென்று தெரியாது. சகோதரி பாசம் என்றால் என்னவென்றும் தெரியாது.

என் போன்ற நரக வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது என்று நினைப்பவன் நான்.

இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்தால் இன்றே அடுத்த குழந்தைக்கான முயற்சி எடுங்கள்.

கி.பி.2255

கி.பி.2255.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் மீட்கப்படும். இந்தியாவில் ஏழ்மையை ஒழித்தே தீருவோம்.
-மத்திய அமைச்சர் ஆவேச அறிவிப்பு.

பொறுக்கி

பொம்பளை பொறுக்கியையும் கடவுளாக வணங்கும் நாடு நம் நாடு.
மகாபாரத கண்ணன். (முக்கியமான இடத்தில் இவனுக்கு மச்சம் இருந்திருக்கும் போல)

Sunday, 3 August 2014

facebook

facebook ல fake id வச்சிருக்குறவன் எல்லாம் பல வருசமா இருக்கானுக. நான் ஒரிஜினல் id  வச்சிருந்தும் 2 முறை என் idயை block பண்ணிட்டானுங்க.

இனிமேல் நான் போற பாதை சிங்க பாதை.

நானும் மூஞ்சி புக்குல பிட்டு படம் பார்க்க போறேன்.

மியாவ்....

வாரணம் ஆயிரம்.

வாரணம் ஆயிரம் புடை சூழ லட்சுமிக்கு மங்கல நாணை நான் சூட்ட கனா கண்டேன் தோழா!

சாமி திருக்கல்யாணத்தில் மீனாட்சியானாலும்,  தயாரானாலும் தாலி கட்டுவது என்னவோ கோவில் பூசாரி தான். இன்னாங்கடா உங்க கல்யாணம்.

கல்யாணம் சாமிக்கு தான் ஆனா தாலி கட்டுறது பூசாரி தான்.

மாப்பிள்ளை இவர் தான் ஆனா அவர் போட்டுருக்கிற dress  என்னுது.

எந்த ஒரு குலதெய்வம் கோவிலிலும் சாமிக்கு கல்யாணம் என்ற சடங்கு பின்பற்றப்படுவதே இல்லை. காரணம் அப்படி ஒரு சடங்கு இந்து மதத்தில் இல்லவே இல்லை.

மக்களை கோவிலுக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காவும் கோவில்களில் இருப்பவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காகவும் பரப்பி விடப்பட்ட புரளிகள் தான் இந்த சாமிக்கு கல்யாணம் போன்ற சடங்குகள் மற்றும் பல.

Friday, 1 August 2014

pyramid.

facebook மூலமாகவும் தொடர்புகொண்டு பிரமிட் பற்றிய தகவல்களை உலகில் முக்கியமான tv சேனல்கள், scientific பத்திரிகைகள், archeology department, இந்தியாவில் இருக்கும் tv சேனல்கள், பத்திரிக்கைகளுக்கு அனுப்பி விட்டேன்.

ஒரு பரதேசியும் கண்டுக்க மாட்றான்.

அவர்களுக்கு புரிந்து கொள்ளும் அறிவு இல்லையா? அல்லது அவர்களுக்கு புரியும் படி சொல்லும் அறிவு எனக்கு இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.

பிரமிட் பற்றிய தகவல்களை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கும் வழி இருந்தால் நண்பர்கள் சொல்லவும்.

பிரமிட் எதிர்கால சந்ததிகளுக்கு பூமியில் தண்ணீரே இல்லாமல் செய்துவிடும்.

ஆண்மை குறைவு

அஜினோமோட்டோ 99% அசைவ உணவகங்களில் தினமும் கால் கிலோ முதல் பயன்படுத்தப்படுகிறது.
இது உடலின் ஒட்டு மொத்த நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். 100% ஆண்மை குறைவை ஏற்படுத்தும்.