Wednesday 21 August 2013

தமிழ் tv சேனல்கள்.

ஆங்கில டிவி சேனல்களில் குண்டூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் முதல், உலகின் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டும் நவீன தொழில்நுட்பங்கள் வரை காட்டுகிறார்கள்.

தமிழர்களுக்கும், தமிழ் டிவி சேனல்களுக்கும்  இது போன்ற எந்த ஒரு திறமையும் இல்லையா? யாராவது ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால், அதை ஒரு செய்தியாக மட்டுமே காட்டுகிறார்கள்.

தமிழ் டிவி சேனல்களில் தமிழ் சினிமா பாட்டு பாடும் போட்டி நடத்துகிறார்கள். தமிழ் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் போட்டி வைக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சாதனையா? 

கொலைவெறி பிடித்த மெகா சீரியல்கள் ஒளிபரப்புகிறார்கள்.

நிலத்தை விற்பதற்கு டிவி சீரியல் நடிகர்களும், நடிகைகளும் வந்து பேசுகிறார்கள்.

குண்டானவர்கள் மூலிகை டீ  குடித்து ஒல்லியான கதையை சொல்கிறார்கள்.
"சஹாரா பாலைவனத்திலும், சீனாவிலும் கிடைக்கும் 18 வகை அரிய மூலிகை கொண்டு இந்த டீ தயாரிக்கிறோம்"என்கிறார்கள். (சஹாரா பாலைவனத்தில் எப்படிடா மூலிகை கிடைக்கும்? சீனாவில் மட்டும் தான் மூலிகை இருக்கிறதா? இந்தியாவில் மூலிகை இல்லையா?)
"ஆமா! நான் முன்பு குண்டாக இருந்தபோது என் ஆபிசில் எல்லோரும் என்னை கேலி செய்தார்கள். இந்த மூலிகை டீ குடித்து இப்போது நான் ஒல்லியான பிறகு எங்கள் கம்பெனி MD பொண்ணையே  நான் pick up பண்ணி விட்டேன்." என்கிறான் ஒருவன்.

ஆங்கில படத்தை இந்தியாவில் ஒளிபரப்பினால், இந்தியாவின் கலாச்சாரம் கெட்டுவிடும் என்று முத்த காட்சிகளை வெட்டி விடுகிறார்கள், உடலுறவு காட்சிகளை வெட்டி விடுகிறார்கள், அரை குறை ஆடையில் வந்தால் வெட்டி விடுகிறார்கள், அல்லது மறைத்து விடுகிறார்கள்.

ஆனால் பிரா விளம்பரத்தை அரை மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள். 
இந்த பிரா விளம்பரங்கள் மாதர் சங்கங்களின் கண்களுக்கு தெரியவே இல்லையா?

"இந்த பிராவை பாருங்கள், எவ்வளவு அழகாக இவரின் மார்பழகை தூக்கி காட்டுகிறது என்று."
"வாவ்! இந்த பிரா போட்டிருக்கிற feeling கே எனக்கு இல்லை. இது நான் ஏற்கெனவே போட்டிருந்த பிராவை விட ரொம்ப நல்ல இருக்கு."(feeling இல்லேனா அவுத்து போட்டுட்டு போடி.)

புரிஞ்சிக்கோங்கடா! டிவி மச்சான்களா! ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு feeling.

ஒரு பிராவை அரைமணி நேரத்துக்கு உத்து பார்த்துக்கிட்டே இருக்க முடியலைடா.

வேற ஏதாவது பிட்டு இருந்தா ஒட்டுங்கடா! உக்காந்து பார்க்கிறோம்.

No comments:

Post a Comment