Wednesday 21 August 2013

எலுமிச்சம்பழம்.

தெய்வங்களுக்கு எலுமிச்சையை துளையிட்டு மாலையாக அணிவிப்பதும், திரிசூலம் மற்றும் அருவாளில் சொருகுவதும் தவறு.

எலுமிச்சம்பழத்தை அப்படியே கடவுள் சிலைகளுக்கு முன் வைத்து தான் வழிபட வேண்டும்.

எதிரிகள் தொல்லை நீங்க தெய்வங்களுக்கு எலுமிச்சையை வைத்து வணங்குவது நல்லது.

கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சையை (அது துளையிடாததாகவும், திரிசூலம் அல்லது அரிவாளில் சொருகப்படாததாகவும் இருக்க வேண்டும்.) வீட்டிற்கு வந்து தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது. பல தீய சக்திகளில் இருந்து உங்களை காக்கும்.

கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சை கீழே விழுந்து விட்டால், அதை மீண்டும் எடுக்க கூடாது. அப்படியே விட்டு விட வேண்டும். மீண்டும் எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தால் எதிர்பாராத விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

1 comment:

  1. எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்சைதான் கரெக்ட் ... ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete