Sunday 25 August 2013

கேரளா.

gods own country என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் கேரளா மாநிலத்தினர்.

காரணம் இயற்கை அழகு. இயற்கையை பாதுகாக்கிறார்கள். தங்கள் வீட்டை சுற்றி மரம் அதிகம் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் நாம் வீட்டில் தொட்டியில் செடி வளர்த்துக்கொண்டு இயற்கையை பாதுகாப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அங்கே இருக்கும் அரசியல்வாதிகள் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள்.

கேரளாவில் படித்தவர்கள் அதிகம்.

மூலிகை வைத்தியங்கள் ஏராளம் கேரளாவில் இருக்கிறது.

கேரளத்து பெண்கள் தமிழ்நாட்டு பெண்களை விட அழகாக இருக்கிறார்கள். (ஹி...ஹி...ஹி...) நானும் தமிழன் தானே. கொஞ்சம் சபலம் இருக்கத்தானே செய்யும்.

ஆனால் கேரளாவில் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள்.

ஒன்று,அவர்கள் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையில் கொண்டு வந்து கொட்டுவது.

இரண்டாவது, நம் தமிழ்நாட்டில் முன்பின் தெரியாதவரை கூப்பிட வேண்டுமானால் அண்ணே, தம்பி, அக்கா, சார், ஹலோ, இப்படி பல வார்த்தைகளை உபயோகிப்போம். ஆனால் கேரளாவில் எல்லோரும் ஒரே ஒரு சப்தத்தை எழுப்புகிறார்கள். அது சூ...சூ... என்பது. இது ஏதோ நாயை கூப்பிடுவது போல் இருக்கிறது.

No comments:

Post a Comment