Sunday 25 August 2013

கடவுள் சிலைகள்.

கோவில்களில் இருக்கும் தெய்வ சிலைகளுக்கு கண்மலர், முகம், கவசம் எந்த உலோகத்திலும் (செம்பு,பித்தளை,வெண்கலம்,வெள்ளி,தங்கம்) அணிவிக்க கூடாது.

எல்லா கற்களுக்கும் ஆகர்ஷண சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் உண்டு. இது தெய்வ சிலைகளுக்கும் பொருந்தும். கண்மலர், முகம், கவசம் அணிவிக்கும் போது அந்த தெய்வ சிலைகளின் ஆகர்ஷண சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் தடுக்கப்படும். இவ்வாறு அணிவித்து வழிபட்டால் தெய்வத்தை வணங்கிய பலன் முழுவதும் கிடைக்காது, மேலும் கெடு பலன்கள் ஏற்படலாம்.

அதாவது பக்தர்களின் எண்ண அலைகள் மற்றும் அவர்களின் உடலில் உள்ள தீய சக்திகள் கடவுள் சிலைகளால் உட்கிரகிக்கப்பட்டு, தெய்வ சிலைகளின் நேர் எதிர் பகுதி வழியாக வெளியேற்றப்படும்.

இதனால் தான் கடவுள் சிலைகளுக்கு நேர் எதிரில் நின்று வழிபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. கடவுள் சிலைகளுக்கு பக்கவாட்டில் இருந்து தான் வழிபட வேண்டும்.

மேலும் கோவில்களில் இருக்கும் கருவறை, சந்நிதி, தூண்கள் முதலியவற்றிற்கும் மேற்சொன்ன உலோகங்களால் கவசம் அணிவிக்க கூடாது. 

மேலும் கோவில்களில் எந்த ஒரு இடத்திலும் tiles, marble, granite பதிக்க கூடாது. அது அந்த கோவிலின் ஆயுளை குறைக்கும். அதாவது முன்னோர்கள் கல்லினால் கட்டிய கோவில்களின் ஆகர்ஷண மற்றும் பிரதிபலிக்கும் சக்தியை தடுக்கும். இதனால் கோவில்களின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்படும்.கோவில்களின் பல பகுதிகள் இடிந்து விழும் நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment