Friday 23 August 2013

காமம்.

 கணவன், மனைவி இடையேயான தாம்பத்யம் என்பது புனிதமானது. இதை பற்றி யாரிடமும் பேசக்கூடாது. ஏனென்றால் கணவனையும், மனைவியையும் பிரிக்கும் கொடூர மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். கணவனும், மனைவியும் சேரக்கூடாது என்று சொல்பவர்களின் உறவை வெட்டி விடுவது அந்தந்த கணவனுக்கும்,மனைவிக்கும் நல்லது.

 காமத்தை ஒதுக்கினால் தான் இறைவனை அடைய முடியும் என்று பலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இந்த தகவல் மிகவும் தவறானது. தன்னால் காமசுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற பொறாமையில் சில போலி சாமியார்கள் பரப்பி விட்ட புரளி தான் இது.

காமத்தை ஒதுக்க வேண்டும் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அவர் கடவுளே இல்லை.

காமம் என்பது குற்றம் என்றால், எதற்க்காக காம உணர்வோடு மனிதனை படைக்க வேண்டும், அந்த கடவுள்? காமம் என்பது குற்றம் என்றால், மனிதனை காம உணர்வோடு படைத்த அந்த கடவுள் தான் குற்றவாளி.

கணவனும், மனைவியும் விரதம் இருக்கும் காலம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் தாம்பத்தியத்தை ஒதுக்க கூடாது. அவ்வாறு ஒதுக்கினால் அது பேராபத்தில் தான் முடியும்.

இறைவனை அடைவது என்பது உங்களிடம் இல்லை, அது இறைவனிடம் தான் இருக்கிறது.

பிரம்மச்சரியம் என்பது சிலருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. அது தானாக அமைய வேண்டும்.

குடும்ப பிரச்சனை காரணமாகவும், பண பிரச்சனை காரணமாகவும், மனைவியோடு பிரச்சனை காரணமாகவும் இல்லறத்தை விட்டு ஓடுவதற்கு பிரம்மச்சரியம் என்று பெயராகாது.

திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலை எத்தனை  பேர் படித்திருக்கிறீர்கள்?

காமத்திற்கு கோவில் கட்டிய நாடு நம் நாடு.


No comments:

Post a Comment