Monday 19 August 2013

பசு.

பசுக்களுக்கு பேசும் சக்தி இருந்ததாகவும், அவைகளுக்கு எமன் வருவதை  முன்னமே அறியும் சக்தி இருந்ததாகவும், அதனால் ஒருவருக்கு மரணம் ஏற்படப்போகிறது என்றால் அவரை முன்னமே எச்சரித்து மரணத்தில் இருந்து காப்பாற்றியதாகவும், அந்த சம்பந்தப்பட்ட மனிதர்கள் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள தேவையான பரிகாரங்கள் செய்து தப்பித்து விட்டதாகவும், இதனால் கோபமடைந்த எமன், சிவனிடம் முறையிட்டதாகவும், இதனால் சிவன் பசுக்களின் பேசும் சக்தியை எடுத்து விட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் நான் வசித்த பகுதியில் ஒரு பசு அதிகாலை வித்தியாசமான குரலில் கத்திக்கொண்டே இருந்தது. அது ஒரு அலறல் போல இருந்தது. அப்போது மணி கிட்டத்தட்ட அதிகாலை 5-30 இருக்கும். அடுத்த ஒரு வாரத்தில் அந்த தெருவில் இருந்த என்னோடு படித்த ஒருவன் குற்றாலம் சென்று குளிக்கும் போது பாறைக்குள் சிக்கி இறந்து விட்டான்.

2009ஆம் ஆண்டு மீண்டும் அதே போன்ற சப்தத்தில் ஒரு பசு கத்திக்கொண்டே இருந்தது. அப்போதும் மணி கிட்டத்தட்ட காலை 5-30 இருக்கும். சில தினங்களில் என் தந்தை மரணம் அடைந்தார். அப்போது எனக்கு தெரியாது, அந்த பசு எழுப்பிய சப்தம் என் தந்தையின் மரணத்திற்கான எச்சரிக்கை மணி என்பது.

அதற்குப்பிறகு பல முறை அதே போன்ற சப்தத்தை நான் பல முறை கேட்டிருக்கிறேன். அது எந்த பகுதியில் கத்துகிறதோ அந்த பகுதியில் இருக்கும் ஒருவர் இறந்து போயிருக்கிறார்கள். அனால் அதெல்லாம் பகல் பொழுதில் எழுப்பிய சப்தங்கள்.

தற்போது வீட்டில் பலரும் மேல் நாட்டு நாகரீகத்தின் படி நாய், பூனை வளர்க்கிறார்கள். அது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் பசு வளர்ப்பதை விட்டு விட்டார்கள்.

தற்போது பசு என்பது பால் கொடுக்கும் ஒரு இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment