Saturday 15 March 2014

விளக்கு.

பிரபலமான கோவில்களில் விளக்கு விற்பதை contract எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் தினமும் சொல்லுவதை கேட்டால் அதாவது நீங்கள் தினமும் கோவிலுக்கு சென்றால் இவர்கள் சொல்வதை கேட்கலாம்.

"இன்னைக்கு திங்கள் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு செவ்வாய் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு புதன் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு வியாழக்கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு வெள்ளி கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு சனி கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு ஞாயிற்று கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு அஷ்டமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு நவமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு ஏகாதசி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு அமாவாசை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு பௌர்ணமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு கார்த்திகை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு பிரதோஷம், சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

இப்படி ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு எனக்கு சாமிக்கு விளக்கு ஏற்றவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய் விட்டது. விளக்கேற்றி, விளக்கேற்றி இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனக்கு எந்த வருமானமும் இல்லையே என்ற கோபம் தான் வருகிறது கடவுளின் மீது.

No comments:

Post a Comment