Saturday 15 March 2014

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.

சிவராத்திரி அன்று எதற்காக கடவுளை வணங்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

ஒருவன் பயத்தில் இரவு பொழுதை கழிக்க வில்வ மரத்தில் இருந்து வில்வ இலைகளை பறித்து போட்டுக்கொண்டே இருக்கிறான். காலையில் தான் அவனுக்கு தெரியும் கீழே சிவலிங்கம் இருக்கிறது என்று. இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. பயத்தின் காரணமாக இலையை பறித்து போட்ட நாளை கண்டிப்பாக கொண்டாட வேண்டுமா?

வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலில் சொர்க்க வாசல் திறப்பதை பார்த்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடவுள் என்ன சொர்க்கத்திற்கு நுழைவாயிலை கோவிலில் வைத்து இருக்கிறாரா? கோவிலில் கட்டப்பட்ட ஒரு கதவை திறப்பதை பார்த்தால் எப்படி சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இவை எல்லாம் கோவிலை கட்டியவர்கள் பரப்பிய புரளி என்பது என் கருத்து.

இதற்க்கு மிக சிறந்த உதாரணம் திருமலை நாயக்க மன்னர்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டியதில் திருமலை நாயக்கருக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது போல் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதத்தில் நடக்கவில்லை. வேறொரு மாதத்தில் நடந்து வந்திருக்கிறது. ஆனால் மக்கள் விவசாயத்தை கவனிக்க வேண்டி கோவிலுக்கு வராமல், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வராமல் இருந்திருக்கிறார்கள். இதனால் மக்களை வர வைக்க எண்ணிய திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மீனாட்சி திருக்கல்யாணத்தை மாற்றி இருக்கிறார். இங்கே நான் மன்னனை மற்றும் குற்றம் சாட்டவில்லை அவனை சுற்றி இருக்கும் அனைவருமே சேர்ந்து சொல்லி இதை செய்ய வைத்து இருக்கலாம். கடவுளின் திருமணத்தை மாற்ற மன்னனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதே போல் எத்தனை சாஸ்திரங்கள, சம்பிரதாயங்கள் காலம் காலமாக மாற்றப்பட்டுக்கொண்டே வந்திருக்கும்? அல்லது சேர்க்கப்பட்டு வந்திருக்கும்?

இது தவறுதானே???????

No comments:

Post a Comment