Monday 10 March 2014

கோடி கோடியாய் லாபம் குவிக்கும் தங்கநகை வியாபாரம்.

அன்பான பெண்ணினமே! தினமும் காய்கறி கடையில் ஏழை வியாபாரிகளிடம் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் பேரம் பேசும் நீங்கள் நகை வாங்கும் போது ஆயிரக்கணக்கில் ஏமாறுவது உங்களுக்கு தெரியுமா? சில சமயம் லட்சகணக்கில் கூட ஏமாறுகிறீர்கள்.

hallmark, bis, rate card, என் தங்கம் என் உரிமை, 916, kdm, செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, குறைந்த சேதாரம், fixed price, lowest price இப்படி பல வார்த்தைகள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

தங்கம் 1கிராம் 2900 என்று வைத்து கொள்வோம்.

தங்கத்தோடு செம்பு சேர்த்தால் தான் ஆபரணம் செய்ய முடியும். 

செம்பு 1கிராம் 5 ரூபாய்க்கும் குறைவு.

ஆனால் நீங்கள் தங்கத்திற்கு பணம் கொடுக்கிறீர்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் செம்பின் நிலை என்ன?

அவர்கள் செம்பையும் சேர்த்து தங்கத்தின் விலைக்கு விற்கிறார்கள். அதாவது நீங்கள் வாங்கும் நகையில் இருக்கும் செம்பு 1கிராம் 2900 என்று. நீங்களும் 5ரூபாய் செம்பை 2900 கொடுத்து வாங்குகிறீர்கள். செம்பு எந்த அளவு அதிகமாக சேர்க்கப்படுகிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு லாபம். அந்த அளவிற்கு நீங்கள் ஏமாறுகிறீர்கள்.

இதனால் அவர்கள் லட்சலட்சமாய், பலர் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

நீங்கள் ஏமாந்துகொண்டே இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment