Sunday 10 November 2013

புத்திசாலிகள், முட்டாள்கள்.

முட்டாள்களை புத்திசாலிகளாக்குவது எப்படி என்று புத்திசாலிகளுக்கே தெரியாத விஷயம்.

முட்டாள்கள் புத்திசாலிகளின் வழியில் செல்வதே இல்லை. ஆனால் புத்திசாலிகளை முட்டாள்களாக்குவது எப்படி என்று முட்டாள்களுக்கு தெரியும். அதுவே முட்டாள்களின் புத்திசாலித்தனம்.

தமிழன் வேப்பங்குச்சியில் பல் துலக்கி தன் பற்களை ஆரோக்கியமாக வைத்து இருந்தான். ஆனால் தற்போது தமிழனால் tooth paste, brush இல்லாமல் பல் துலக்க தெரியாது.

தமிழன் குளிப்பதற்கு பாசி பயறு மாவும், கடலை மாவும், மற்ற பல பொருட்களையும் பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் soap, shampoo இல்லாமல் குளிக்க தெரியாது. இங்கே சுத்தம் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வரலாம். soap, shampoo உபயோகித்தால் தான் சுத்தம் வரும் என்றால் soap, shampoo கண்டுபிடிப்பதற்கு முன்பு வாழ்ந்த தமிழன் வரையில் யாருமே சுத்தமாக இல்லை என்று அர்த்தமாகிவிடும். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் துணிகளை சுத்தப்படுத்த என்ன பயன்படுத்தினான் என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய தமிழனால் detergent powder, detergent cake இல்லாமல் துணிகளை சுத்தம் செய்ய தெரியாது.

தமிழன் பாத்திரங்களை சுத்தப்படுத்த சாம்பல், புளி போன்ற பொருட்களை பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் dish wash bar இல்லாமல் பாத்திரங்களை சுத்தம் செய்ய தெரியாது.

soap, shampoo, detergent powder, dish wash bar இந்த எல்லா பொருட்களும் ரசாயன பொருட்களால் தான் தயாரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சோப்பிலும், விளம்பரங்களில் வருவது போல் பழசாறுகள் சேர்க்கப்படுவது இல்லை. பாத்திரம் தேய்க்கும் சோப்பில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுவது இல்லை. எல்லாமே ரசாயனம். அதாவது natural identical synthetic flavours. இயற்கையான பொருட்கள் போன்று நறுமணம் தரக்கூடிய செயற்கையான ரசாயன பொருட்கள்.

இவை அனைத்துமே நீரை மாசுபடுத்துகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குளிக்க சோப்பு பயன்படுத்துவதால் ஒரு லிட்டர் தண்ணீரை மாசுபடுத்துகின்றான் என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு சோப்பு பயன்படுத்துவதால் எவ்வளவு லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் துணி துவைக்கவும், பாத்திரம் கழுவவும், சோப்பு பயன்படுத்துவதால் 2 லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment