Sunday 10 November 2013

ஏழைகள்.

Tanya Desigan என்பவர் g+ இல் கேட்ட கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறேன்.

ஏழைகள் அதிகம் கஷ்டப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறேன்.

1)ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரித்தான தெய்வங்கள் உள்ளன. அவை தவிர வேறு தெய்வங்களை வணங்கினால் துன்பங்களே வரும். ஏழை மக்கள் இது தெரியாமல், பக்கத்து வீட்டு அக்கா சொன்னார், எதிர் வீட்டு அக்கா சொன்னார் என்று பல கோவில்களுக்கு சென்று பல தெய்வங்களை வணங்குகிறார்கள்.

2)கோவில்களில் எதையுமே தொட்டு வணங்க கூடாது. மீறி தொட்டு வணங்கினால் கஷ்டம் தான் வரும். இது தெரியாத ஏழை மக்கள் கோவில்களில் கருவறையில் இருக்கும் தெய்வம் தவிர, எல்லா சிலைகள், கொடி மரம், பலி பீடம், தேர், நந்தி, கடவுளுக்கே உரித்தான வாகனங்கள்(எலி, சிங்கம், மயில்), இவற்றை தொட்டு வணங்குகிறார்கள்.


தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது. தெற்கு நோக்கி விளக்கேற்றுகிறார்கள்.

விளக்கேற்றும் போது எண்ணெய் கையில் பட்டுவிட்டால், கை கழுவிவிட்டு பிறகு தான் விளக்கு ஏற்றவேண்டும். ஆனால் அந்த எண்ணையை தலையில் தடவிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்தால் கஷ்டம் வரும்.

3)கட்டை விரலால் தலை சொரிவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. ஏராளமான பெண்கள் கட்டை விரலால் தான் தலையை சொரிகிறார்கள்.

4)சாப்பிடும் சமயத்தில் புறங்கையை நக்குவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. பலர் புறங்கையை நக்கி சாப்பிடுகிறார்கள்.

5)தீய சக்திகளை ஏவுவது ஏழைகளில் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதற்க்கு ஒரு சிறு உதாரணம், மதுரை அருகே இருக்கும் மடப்புரம் கோவிலில் காசு வெட்டி போடுவது. மற்றும் மந்திர வேலைகள் பார்ப்பது.

6)பகை என்று வந்துவிட்டால், சாபம் கொடுப்பதும், மண்ணை அள்ளி தூற்றுவதும் ஏழைகளில் அதிகம்.

7)பெண்கள் வெறும் தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுப்பது தவறாகும். பெண்களின் ஸ்தனங்கள் தரையில் படும்படி படுத்தால் அவர்களுக்கு அதிக துன்பங்களை தான் தருவேன் என்று பூமா தேவி சொல்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.( இந்த தகவல் சேங்காலிபுரம் ப்ரம்ஹஸ்ரீ அனந்த ராம தீட்சிதர் எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் இருக்கிறது. இந்த புத்தகம் ஆன்மீக புத்தகங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இந்த புத்தகம் சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் அருகே இருக்கும் ஆன்மீக பொருட்கள் விற்கும் கடையில் இருக்கிறது.)
பல பெண்கள் வீட்டின் வெளியே தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுக்கிறார்கள்.

8)ஏழைகளின் வருமானத்தின் பெரும் பகுதி அவர்கள் கட்டும் வட்டிக்கே சென்று விடுகிறது.

9)ஏழைகளின் வருமானத்தின் பெரும்பகுதி மதுபானங்கள் குடிப்பதற்கு செலவிடப்படுகிறது. நடுத்தர வர்க்கமும், பணக்கார வர்க்கமும் தங்கள் வருமானத்தின் சிறு பகுதியை தான் மதுபானம் குடிக்க செலவழிக்கிறார்கள்.

10)ஏழைகளை மேலும் ஏழைகளாக்க, அவர்களை குறி வைத்து செய்யப்படும் சதி செயல்கள் ஏராளம். இது உலக அளவில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

தவறு என்பது ஒரு குடும்பத்தில் ஆண் செய்தாலும் சரி, பெண் செய்தாலும் சரி அது அந்த குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கும்.

ஏழைகள் வசிக்கும் பகுதியில் நீங்கள் வசித்தால் மேற்சொன்ன எல்லா விசயங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சரி செய்துவிட்டால் இந்தியாவில் 99.99% ஏழைகள் இருக்க மாட்டார்கள். இது உலக அளவிலும் சாத்தியமே.


No comments:

Post a Comment