Saturday 30 November 2013

தேயிலை தோட்டம்.

இந்தியாவின் பல பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளது எல்லோருக்குமே தெரியும். இவை வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவற்றை உருவாக்க அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டன என்று இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது.

சரி விடுப்பா! தேயிலை மூலமாக வருமானம் வருதுல்ல! என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் இயற்கை ரீதியாக சற்று யோசித்து பாருங்கள். 

ஒரு மரம் இருக்க வேண்டிய இடத்தில் சில செடிகள் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

ஒரு காடு இருக்க வேண்டிய இடத்தில், தோட்டம் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

No comments:

Post a Comment