Thursday 21 November 2013

ஐம்பொன்.

தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம்,   இந்த உலோகங்களால் ஆன ஆபரணங்களை அணிவதும், வீட்டிலும், கோவில்களிலும் பூஜை பொருட்களாக பயன்படுத்துவதும் எதிர்மறை சக்தியையே தரும் என்பது என் கருத்து.


 மண், மரம், கண்ணாடி, பீங்கான், செம்பு, stainless steel   இவற்றால் ஆன  பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்துவதே நேர்மறை சக்தி தரும் என்பது என் கருத்து.

இதற்கு மிக சிறந்த உதாரணம் கண்ணகி.

கண்ணகி வாழ்ந்த காலத்திலேயே தங்கத்தை அணியலாமா? அணியகூடாதா? என்று தெரியாமலேயே தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தங்கத்தை அணிந்திருக்கிறார்கள்.

கண்ணகி அணிந்த சிலம்பு தங்கத்தால் ஆனது. தங்கத்தை காலில் அணிந்தால் அவர்கள் அழிவு நிலைக்கு செல்வார்கள். இதில் இன்னொரு துன்பம் தரும் விஷயம் அதில் மாணிக்க கற்கள் இருந்தது. தங்கத்தோடு மாணிக்க கற்களும் இருந்தது மாபெரும் அழிவு நிலைக்கே கொண்டு செல்லும். 

இதில் இன்னொரு தகவல் என்ன என்றால், மன்னனின் மனைவியின் காலில் முத்துக்களால் ஆன சிலம்பு. இதுவும் அழிவு நிலைக்கே செல்லும். 

முத்தை விட மாணிக்கம் விலை உயர்ந்தது. மன்னர்களை விட வணிகர்கள் மாபெரும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

No comments:

Post a Comment