Friday 7 February 2014

ராமர் கோவில்.

ராமருக்கு கோவில் கட்ட போகிறேன், மசூதியை இடிக்க போகிறேன் என்று பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் ராமரை அதிகம் வழிபடவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இதற்க்கு மிக சிறந்த உதாரணம், தமிழகம் எங்கும் ராமருக்கு என்று தனிப்பட்ட கோவில்கள் இல்லை. காளி, கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், கருமாரி அம்மன், நாக தெய்வங்கள், மற்றும் பல தெய்வங்களே தமிழர்களால் அதிகம் வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. அது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெருமாள் கோவிலில் ராமர் தனியாக தான் இருக்கிறாரே தவிர அவருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
பெருமாளுக்கு தான் அங்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

நம் முன்னோர்கள் ராமரை வணங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவருக்கு தமிழகம் எங்கும் பல கோவில்களை கட்டி இருப்பார்கள். ஆனால் அவர்கள் எந்த கோவிலும் கட்டவில்லையே. அப்படியே ராமருக்கு கோவில் கட்டி இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும்.

ராமருக்கு கோவில் கட்டுவேன் என்று சொல்பவர்கள் எல்லாம் அரசியல் சூழ்ச்சியோடு தான் செயல்படுகிறார்களே தவிர உண்மையான பக்தி என்பது அவர்களிடம் இல்லை.

உண்மையிலேயே ஒருவன் ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கோவில் கட்டுவானேயானால் அவன் கோவில் கட்டுவதை மட்டுமே சிந்திப்பானே தவிர மத வெறியை மக்களிடம் தூண்டமாட்டான். மசூதியை இடித்து தான் ராமருக்கு கோவில் கட்டுவேன் என்று சொல்லமாட்டான்.

No comments:

Post a Comment