Sunday 16 February 2014

பெண்கள் ஏன் மந்திரம் சொல்லக்கூடாது?


பெண்கள் மந்திரம் சொல்லகூடாது என்று என்னுடைய முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன். அது ஏன் என்று இப்போது சொல்கிறேன்.

உலகத்தில் பிறக்கும் ஆண்கள் அனைவரும் சிவனின் அம்சம்.
உலகத்தில் பிறக்கும் பெண்கள் அனைவரும் சக்தியின் அம்சம்.

ஆணுக்கு தான் சக்தி தேவையே தவிர, பெண்களுக்கு இயற்கையிலேயே சக்தி இருக்கிறது. பெண்கள் மந்திரம் சொல்ல சொல்ல அவர்கள் வயிறு பெருக்கும்.

ஆண்களுக்கு சக்தி கிடையாது. இதனால் சாதாரண நிலையில் ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் பெண்கள் மந்திரம் சொல்வார்களேயானால் அவர்களின் உடலில் இன்னும் அதிக சக்தி ஏறும். இந்த நிலையில் ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது பெண்ணின் உடலில் இருக்கும் அதிகமான சக்தி ஆணின் உடலில் மிக வேகமாக சில நொடிகளில் கலக்கும். இதை தாங்கும் சக்தி இந்த உலகத்தில் உள்ள எந்த ஆணுக்கும் கிடையாது. இதனால் ஆணின் ஆயுள் மிக வேகமாக குறையும்.

அப்படியானால் ஆண்கள் மட்டும் மந்திரம் சொல்லலாமா? என்ற கேள்வி வரும்.

ஆண் மந்திரம் சொல்லும்போது அவன் உடலில் ஏறும் சக்தியானது பெண்ணோடு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏறும் சக்தியை விட பல நூறு மடங்கு குறைவு. அது அவனுக்கு பாதிப்பை தராது.

அப்படியானால் மந்திரம் சொல்லும் ஆணோடு தாம்பத்திய உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்வி வரும். பெண்ணுக்கு  எந்த பாதிப்பும் வராது. ஆணின் உடலில் இருந்து பெண்ணின் உடலில் கலக்கும் சக்தி என்பது பெண்ணிடம் இருக்கும் சக்தியில் சிறு பகுதி.

என்னுடைய முந்தைய பதிவில் பெண்களுக்கு வைக்க கூடாத பெயர்கள் என்று சில சொல்லி இருந்தேன். அதிலும் இதே போன்ற நிலை தான் ஏற்படும். அந்த பெயர் கொண்ட பெண்களின் உடலில் தினமும் சக்தி ஏறிக்கொண்டே இருக்கும். இதனால் அந்த பெண்ணின்  கணவனுக்கு ஆயுள் வேகமாக குறையும்.

பெண்கள் வெறுமனே மந்திரம் சொல்லாமல் கடவுளை வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment