Wednesday 19 February 2014

கண்ணகி தெய்வமா?


கண்ணகி பட்ட கஷ்டங்களுக்கு காரணம் அவள் தங்கத்தை சிலம்பாக காலில் அணிந்தது தான் என்று என் முந்தைய பதிவுகளிலேயே சொல்லி இருக்கிறேன்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணமான போது, கோவலனுக்கு 16 வயது என்றும் கண்ணகிக்கு 12-14 வயது என்றும் கோனார் (கோனார் தானா அல்லது வேறா என்று ஞாபகம் இல்லை.) தமிழ் உரையில் படித்து இருக்கிறேன். அந்த வயதில் எப்படி பக்குவம் இருக்கும்?

உண்மையான தவறு செய்த பொற்கொல்லன் என்ன ஆனான் என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படவே இல்லை. உங்களில் யாருக்காவது அவன் என்ன ஆனான் என்று தெரியுமா?

கண்ணகி மதுரையை எரிக்கிறாள். இதை பலரும் நியாயப்படுத்துகிறார்கள். அரசன் செய்த தவறுக்கு மக்களும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லத்தான் அவள் அப்படி செய்கிறாள் என்று சொல்கிறார்கள்.

இந்த லாஜிக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காரணம், தற்போது எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் தவறு செய்கிறார்கள். அதற்காக எல்லா நாட்டு மக்களையும் கொன்றுவிடலாமா?

என்னால் கண்ணகியை தெய்வமாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

என் ஊரை எரித்தவளை எப்படி நான் தெய்வமாக நினைக்க முடியும்?

No comments:

Post a Comment