Sunday 16 February 2014

கடவுளிடமே பிரமச்சரியம் கிடையாது.

கடவுளிடமே பிரமச்சரியம் கிடையாது. மனிதன் ஏன் அதை பின்பற்ற வேண்டும்?

சிவனுக்கு 2 மனைவிகள்.

பெருமாளுக்கு 2 மனைவிகள்.

முருகனுக்கு 2 மனைவிகள்.

தென்னிந்தியாவில் விநாயகரை பிரம்மச்சாரியாக வழிபட்டாலும், வடஇந்தியாவில் சித்தி, புத்தி என்று 2 மனைவிகள் இருப்பதாகவே வழிபடுகிறார்கள்.

தமிழர்கள் பலரும் குலதெய்வமாக வழிபாடும் அய்யனாருக்கு 2 மனைவிகள்.(பூரணம், பொற்கலை)

ஒரு முறை சிவனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற, பெருமாள் பெண்ணுருவில் வந்து காப்பாற்றுகிறார். அப்போது பெண்ணுருவில் வந்த பெருமாள் மீது சிவன் மோகம் கொண்டு அவர் கையை பிடிக்க ஐயப்பன் பிறப்பதாக புராணம் சொல்கிறது. (கடவுளான சிவனுக்கு, பெண்ணுருவில் வந்திருப்பது பெருமாள் என்று எப்படி தெரியாமல் போனது?)

கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் பெண்களோடு கொஞ்சி விளையாடுகிறான். பெண்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை எடுத்து வைத்து கொள்கிறான். கிருஷ்ண பக்தர்கள் இதை வேறு விதமாக பூசி மெழுகுகிறார்கள். ஆடை என்பது, உலக பற்றாகவும், தான் என்ற அகங்காரமாகவும், அதை விட்டால் தான் தன்னை அடைய முடியும் என்று கிருஷ்ணன் மறைமுகமாக சொல்வதாக சொல்கிறார்கள்.

அப்படி என்றால் ஆண்கள் குளிக்கும் போது அவர்கள் உடையை எடுத்து ஒழித்து வைத்துக்கொள்ளலாமே. எதற்காக பெண்கள் குளிக்கும் போது, பெண்களின் ஆடையை எடுக்கவேண்டும்??????????(please note this point your honour)

No comments:

Post a Comment