Sunday 26 January 2014

இவர் ஏன் இந்தியாவின் நிரந்தர பிரதமர் ஆகக்கூடாது?


Dr.A.P.J.அப்துல் கலாம்.

1)இவர் எந்த ஒரு குடியரசு தலைவரும் செய்யாத ஒரு செயலை செய்தார். அது இந்திய மக்களை குறிப்பாக இளைஞர்களை சென்று சந்தித்தது.

2)பல அரசியல்வாதிகள் வருடம் ஒருமுறை மரம் நடு விழாவில் ஒரு மரத்தை நடுவார்கள். இவர் எல்லா இந்தியர்களின் மனதிலும் தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்தார்.

3)இவர் இந்தியாவின் பிரதமர் ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது அரசியல்வாதியின் கைப்பாவையாகவும் செயல்பட மாட்டார்.

4)இந்தியாவில் இருக்கும் சில அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என்னென்ன அரசியல் பதவி வகிக்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அவர்கள் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்றே இந்தியாவில் இருக்கும் 99.99% பேருக்கு தெரியாது.

5)தன்னுடைய குடும்பத்திற்காக மக்களை ஏமாற்றும் எண்ணம் இவருக்கு கிடையாது. நாட்டின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே இவருக்கு எண்ணம் இருக்கும்.

6)எங்கள் ஆட்சியின் சாதனை பாரீர் என்று பிற அரசியல்வாதிகள் போல் இவர் தற்பெருமை பேசியதில்லை. இவர் செய்த செயல்களை தான் செய்யவேண்டிய கடமையாக மட்டுமே நினைத்தவர்.

7)நிரந்தர முதல்வர் என்று பலர் தங்களை விளம்பரபடுத்திக் கொள்கிறார்கள். இவர் ஏன் இந்தியாவின் நிரந்தர பிரதமராக கூடாது?

அரசியல் கட்சி சார்ந்த நபர் மட்டுமே இந்தியாவின் பிரதமராக முடியுமா? இந்தியாவின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு நபர் இந்தியாவின் பிரதமராக முடியாதா?

எனக்கு இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தெரியாது. இவர் பிரதமராக வேண்டுமானால் ஏதாவது கட்சியில் இருக்க வேண்டியது கட்டாயமா? அப்படி கட்டாயம் என்றால் இவரே கட்சி ஆரம்பித்தால் நல்லது.

SHARE THIS MESSAGE IF YOU ARE A TRUE INDIAN.


No comments:

Post a Comment