Monday 6 January 2014

இன்றைய ஆராய்ச்சிகள்.

ஒரு முட்டாள் விஞ்ஞானி ஆராய்ச்சி செய்ய நினைத்தான். தன்னுடைய ஆராய்ச்சியை தவளையை வைத்து செய்ய ஆரம்பித்தான்.

தவளையின் ஒரு காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க தாவி சென்றது.

தான் சொன்னதை கேட்டு அது தாவி செல்கிறது என்று நினைத்துக்கொண்டு, இரண்டாவது காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க மீண்டும் தாவி சென்றது.முன்பைவிட குறைவான தூரத்தை அடைந்தது.

தான் சொன்னதை கேட்டு அது தாவி செல்கிறது என்று நினைத்துக்கொண்டு, மூன்றாவது  காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க மீண்டும் தாவியது.முன்பைவிட குறைவான தூரத்தை அடைந்தது.

தான் சொன்னதை கேட்டு அது தாவுகிறது என்று நினைத்துக்கொண்டு, நான்காவது  காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளையால் தாவ முடியவில்லை.

தன்  ஆராய்ச்சியின் report எழுதினான்.

"நான்கு காலையும் வெட்டி விட்டால் தவளைக்கு காது கேட்காது."

இதே போல் தான் இன்று உலகம் எங்கும் பலர் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் report ஐ மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.




No comments:

Post a Comment