Friday 10 January 2014

தந்தை எனும் தெய்வம்.

திதி கொடுப்பது, பிண்டம் வைப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு வகையான ஏமாற்று வேலையாகத்தான் நான் பார்க்கிறேன்.

இறந்த ஒருவருக்கு திதி கொடுப்பது அவரை சென்றடையும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வாழும் மனிதர்கள் வரை பல கோடி தலைமுறைகள் கடந்து வந்துவிட்டோம். பல கோடி தலைமுறையாக வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் திதி கொடுப்பது என்பது யாருக்குமே சாத்தியம் இல்லாத ஒன்று.

என் தந்தைக்கு வருடம் ஒரு முறை சாமி கும்பிடுவதை கூட நிறுத்திவிட்டேன். அது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.வருடா வருடம் அவருக்கு சாமி கும்பிடுவது, அவர் மீண்டும் மீண்டும் இறப்பது போன்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது.

அதற்காக என் தந்தை மீது பாசம் இல்லாமல் இல்லை.
என் தந்தை என் மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்பதை அவர் இறப்பதற்கு முந்தைய நாளில் தான் அவர் சொல்லி நான் தெரிந்துகொண்டேன்.

எல்லா ஆண்களும் தாயின் மீது தான் பாசமாக இருப்பார்கள். தந்தை சற்று தூரம் தான். பல ஆண்கள் தங்கள் தந்தை மீதான பாசத்தை அவர் மரணத்தின் தருவாயில் தான் புரிந்து கொள்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

"தந்தை நம் உடன் வாழும் தெய்வம்."

No comments:

Post a Comment