Tuesday 21 January 2014

தீபாவளி.(diwali)

சென்ற ஆண்டு 2013 முதல் தீபாவளியின் முக்கிய நிகழ்வான பட்டாசுகள் வாங்குவதை நான் நிறுத்திவிட்டேன்.

காரணம், vijay டிவியில் நீயா நானாவில் அவ்வப்போது கலந்துகொள்ளும் ஒருவர் (அவர் பெயர் தெரியவில்லை) கூறும் தகவல். இரண்டாம் உலக போருக்கு பின்னால் வெடி மருந்து தயாரிப்பவர்கள் தங்கள் பணபெட்டியை  நிரப்புவதற்காக வெடிமருந்தை உரம் என்ற பெயரில் இந்தியாவில் விற்கிறார்கள் என்று அவர் கூறுவார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் தந்தி டிவியில் பட்டாசுகள் தயாரிக்கும் ஒருவரின் பேட்டி. அப்போது andrews செய்தி வாசித்தார். பேட்டி அளித்தவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "உரம் என்ற பெயரில் மானிய விலையில் விற்கப்படும் பொருளை வாங்கி தான் நாங்கள் பட்டாசுகள் தயாரிக்கிறோம். அதன் விலை உயர்ந்துவிட்டதால் பட்டாசுகளும் விலை கூடும்" என்று சொன்னார்.


இந்த பட்டாசுகள் வெடிப்பது அதிக சப்தம் எழுப்புவதால் பலருக்கும் தொந்தரவாக இருக்கிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும். மேலும் பட்டாசுகள் வெடிப்பதனால் வரும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.

நரகாசூரன் கொல்லப்பட்ட காலத்தில் பட்டாசுகள் கிடையாது. இந்த பட்டாசுகள் வெடிக்கும் சம்பிரதாயம் தேவையா?

No comments:

Post a Comment