Sunday 22 September 2013

பிரமிட்.(pyramid)

பிரமிட் நேர்மறை சக்தியை தரும் என்று நம்பி பலரும் வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் பிரமிட் உண்மையிலேயே நேர்மறை சக்தியை தருவதில்லை. எதிர்மறை சக்தியை தான் 100% தரும். காரணம் பிரமிடின் தட்டையான பகுதியை பூமியை நோக்கியும், கூர்மையான பகுதியை வானத்தை நோக்கியும் வைக்கிறார்கள்.

தட்டையான பகுதி பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உள்ளிழுத்து கூர்மையான பகுதி வழியாக வானத்திற்கு கடத்துகிறது. இதனால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக துன்பங்கள் ஏற்படும். விரைவான மரணம் நிகழும்.

மேலும் இவ்வாறு வைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். உச்சகட்ட பிரச்சனையாக பாலைவனம் உருவாகும்.

எகிப்தில் இருக்கும் பிரமிட் நிறுவப்பட்ட பின்புதான் அங்கு பாலைவனம் உருவானது என்பது எனது கருத்து. எகிப்தின் பிரமிடு அங்கே நிறுவப்படுவதற்கு முன் அங்கே கண்டிப்பாக செழிப்பான நிலம் இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

பிரமிடின் கீழ் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடின் மேல் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடிற்கு உள்ளே அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று ஏதாவது செய்தால், அது உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் மரணத்தை நீங்கள் வெகு விரைவில் சந்திக்க நேரிடும்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில் தொடர்கிறது.
http://thilai.blogspot.in/2013/10/the-sculpture-of-evil.html

No comments:

Post a Comment