Saturday 21 September 2013

தெய்வ சக்தி.

என்னை பொறுத்த வரை, மரங்களின் கீழ், மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் மட்டுமே 100% நேர்மறை சக்தியை கொண்டிருக்கும்.

. நேர் மறை சக்தி கிழக்கில் இருந்தும், வடக்கில் இருந்தும் மட்டுமே வருகிறது. மேற்கிலும், தெற்கிலும் எதிர்மறை சக்தி தான் இருக்கிறது. 
மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி, சுற்று சுவர் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் பிரபஞ்ச சக்திகளுடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பில் இருக்கும்.

1)நிலம். (தெய்வ சிலைகள் தரையில் வைக்க கூடாது. எனவே பீடத்தின் மீது வைக்கப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அவை நிலத்தோடு தொடர்பில் இருக்கும்.)
2)நீர். (மழை)
3)காற்று.
4)நெருப்பு. (சூரியன்). வெளிச்சம் (சந்திரன்).
5)ஆகாயம்.

என்னை பொருத்தவரை தெய்வ சிலைகளின் மீது கட்டப்படும் கோபுரங்கள் நேர்மறை சக்தியை பூமியில் இருந்து உறிஞ்சி வானத்திற்கு கடத்துகிறது.

அனால் மரங்கள் வானத்தில் இருக்கும் நேர்மறை சக்தியை பூமிக்கு இழுக்கிறது.

இரவில் கருவறை கதவை பூட்டி கடவுள் தூங்க போகிறார் என்கிறார்கள்.
அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி என்று பாட்டு பாடி, தூங்கும் கடவுள் எழும் சமயத்தில் பாட்டு பாடுகிறோம் என்கிறார்கள்.

கடவுள் தூங்குவாரா?

கடவுளுக்கு இமைகள் இல்லையே அவர் எப்படி தூங்குவார்?

தமயந்தி சுயம்வரம் படித்து இருக்கிறீர்களா? தமயந்திக்கு சுயம் வரம் நடக்கும்போது தேவர்கள் அனைவரும் நளனின் உருவத்தில் கலந்து கொள்கிறார்கள். குழப்பமடைந்த தமயந்தி அவர்கள் அனைவரின் கண்களையும் பார்க்கிறாள். அவர்கள் அனைவரும் விழித்த நிலையிலேயே இருக்கிறார்கள். காரணம் தேவர்களுக்கு இமை கிடையாது.

சிவராத்திரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

ஒருவன் இரவில் வில்வமரத்தின் மீது இரவு பொழுதை கழிக்கும் நிலை ஏற்படுகிறது.. இரவில் தூக்கம் வராமல், இரவு பொழுதை கழிக்க வில்வ மரத்தின் ஒவ்வொரு இலையாக பிய்த்து கீழே போடுகிறான். அதிகாலையில் தான் அவனுக்கு தெரிகிறது மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது அவன் இலைகளை எல்லாம் போட்டு இருக்கிறான் என்பது.

இன்றும் நாம் எல்லா சிவன் கோவில்களிலும் சிவராத்திரி கொண்டாடுகிறோம். ஆனால் வில்வ மரங்கள் தான் இல்லை. வெறுமனே வில்வ இலைகளை தூவி வணங்குகிறோம்.

என்னை பொறுத்த வரை கோவில்களில் நிலத்தில் மட்டுமே நேர்மறை சக்தி இருக்கிறது. எல்லா கோவில்களிலும் கோபுரங்கள் பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உறிஞ்சி வானுக்கு கடத்திக்கொண்டே இருக்கின்றன. 


No comments:

Post a Comment