Monday 22 September 2014

எப்படி சைவமாகும்?

புலியின் தோலை ஆடையாகவும், புலியின் தோல் மீது அமர்ந்து கொண்டும் இருக்கும் சிவன் எப்படி சைவமாவார்? 
அப்படியானால் தோலினால் உருவாக்கப்பட்ட செருப்பு,  பர்ஸ்,  பெல்ட் மற்றும் பட்டு புழுக்களை கொன்று எடுக்கப்படும் பட்டு நூலால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியும் எல்லோரும் சைவம் தான்.
ஒரு திரைப்படத்தில் s.s.r,  m.r.ராதாவிடம் சொல்வார் "நாங்கள் ஜீவகாருண்ய இயக்கத்தை சேர்ந்தவர்கள். உயிரினங்களை கொல்ல மாட்டோம்" என்று.
அதற்கு  m.r.ராதா கேட்பார் "அப்படின்னா மூட்டை பூச்சி கடிச்சா என்ன செய்வீங்க?"  அப்படின்னு.
உண்மையில் சைவம் என்று யாருமே கிடையாது. உணவு, உடை, இருப்பிடம், கௌரவம், அந்தஸ்து, அதிகாரம் மற்றும் பல காரணங்களுக்காக பல உயிரினங்கள் எல்லா மனிதர்களாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் யாருமே சைவம் கிடையாது.

No comments:

Post a Comment