Friday 26 September 2014

புரளி

புரளியின் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று சிலர் நிரூபித்திருக்கிறார்கள்.
1) சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை பேசியதாகவும், பெண் பிள்ளைகளுக்கு தேங்காயை தலையை சுற்றி போட வேண்டும் என்றதாகவும் தேங்காய் உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. பிறந்த குழந்தை எப்படிடா பேசும் என்று சுய சிந்தனை இல்லாத தமிழர்களால் அன்று ஒரு நாள் மட்டும் தேங்காய் விற்பனை வரலாறு காணாத அளவு எகிறியது. மதுரையில் எல்லா தெருக்களிலும் தேங்காய்கள் குவிந்து கிடந்தன.
2) 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை சேலை உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. ஆண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு மஞ்சள் வர்ண சேலை கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் ஆண்களுக்கு துன்பம் வரும் என்பது தான் அது. இரண்டாவது முறையாக பச்சை வர்ண சேலை என்று நிறத்தை மாற்றி விற்றார்கள்.
இது சில நாட்களுக்கு நீடித்த விற்பனை.
மூன்றாவதாக நான் சொல்ல இருப்பது உலக அளவில், வரும் எல்லா ஆண்டுகளிலும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பரப்பி விடப்பட்டது.
3) shaving blade, shaving products தயாரிப்பவர்களால் பரப்பி விடப்பட்ட புரளி தான் அது. தாடி வைத்திருப்பவர்கள் அசிங்கமானவர்கள். தாடி இல்லாதவர்களே அழகானவர்கள். Marketing & sales  துறையில் பணிபுரிபவர்கள் தாடி வைத்திருக்க கூடாது. மீறி தாடி வைத்திருந்தால் அவரிடம் யாருமே பொருட்களை வாங்க மாட்டார்கள். விற்பனை குறையும். ஷேவிங் செய்து தாடி இல்லாதவர்களிடம் தான் எல்லோரும் பொருட்களை வாங்குவார்கள். விற்பனை அதிகரிக்கும். இது தான் அந்த புரளி.
சுய சிந்தனை இல்லாத எல்லா நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தினமும் ஷேவிங் செய்ய பணிக்கின்றன. இதன் சங்கிலி தொடராக இந்த நிறுவனங்களில் பணி செய்து விட்டு சுய தொழிலில் ஈடுபடுவோரும் இவர்களிடம் வேலை பார்ப்பவர்களை பணிக்கிறார்கள்.
சீக்கியர்கள் இந்த புரளியை 100% ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த புரளியை நம்பாமல் இருந்தால் உலக அளவில் shaving products விற்பனை மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது தான் உண்மை.
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் என்ன மசுருக்குடா ஏசுநாதரை கும்பிடுறீங்க வெண்ணைகளா?
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் எதுக்குடா ஜேசுதாஸின் பாடல்களை கேட்டு ரசிக்கிறீங்க?
தாடி அழகில்லை என்றால் பெரியாரின் கருத்துக்களை எதுக்குடா கேக்குறீங்க?
இந்தியாவின் தேசிய கீதத்தை தந்த தாகூர் தாடியுடன் தான்டா இருக்காரு வெண்டர்களா!
முப்பாலும் தந்த திருவள்ளுவர் தாடியுடன்தான்டா இருக்காரு பக்கிகளா!
என் தாடி என் உரிமையடா!

No comments:

Post a Comment