Wednesday 16 October 2013

பெயர்கள்.

முன்பெல்லாம் ஆண்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி பெயர் சேர்த்து இருப்பார்கள். தற்போது சில பெண்கள் தங்களின் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து இருக்கிறார்கள். ஜாதி வெறி ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு shift ஆகி விட்டதா என்று தெரியவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம்.

என்னை பொறுத்த வரை கடவுளின் பெயரை மனிதர்களுக்கு (ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) வைப்பது சரியல்ல என்று கருதுகிறேன்.

காரணம் அந்த கடவுளின் சக்தி அந்த மனிதர்களின் உடலில் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் கடவுளின் சக்தியை தாங்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை. மனிதர்களுக்கு என்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சக்தி தான் இருக்கிறது.

என்னை பொறுத்த வரை, கடவுளின் பெயர் வைத்துக்கொண்ட 95% பேர் போராட்டமான வாழ்க்கையை தான் அனுபவிக்கிறார்கள்.

இதை வேறு விதமாக சொன்னால், சாமி அருள் வந்து சாமி ஆடுபவர்களை பார்த்து இருப்பீர்கள்.(பொய்யாக சாமி வந்து ஆடுபவர்களை பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை.) அவர்கள் எல்லாம் போராட்டமான வாழ்க்கையை தான் வாழ்வார்கள். அவர்களால், மற்றவர்களுக்கு நல்லது நடக்குமே தவிர, யாராலும் அவர்களுக்கு நல்லது நடக்காது.

(ஒரு முறை நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது, அம்மன் சன்னதியில், கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு பெண்மணி சாமி வந்து ஆடினார். அங்கே இருந்த பெண்கள் எல்லாம் சாமி வந்துவிட்டது என்று அந்த பெண்ணுக்கு உள்ளே செல்ல வழி விட்டார்கள். அந்த பெண்ணும் உள்ளே நுழைந்த உடன், சாதாரண நிலைக்கு வந்து முதலாவதாக சாமி கும்பிட்டு விட்டு சென்று விட்டார். சாமி கும்பிட எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே இருந்த ஒரு பெண் காவலாளி சொன்னார்,"ஏய்! சாமி ஆடுறது எல்லாம், மடப்புரம் கோவிலுக்கு போய் ஆடணும். இங்கே வந்து ஏமாற்றக்கூடாது.")

No comments:

Post a Comment