Wednesday 23 July 2014

மூளை.(brain)

மனிதனின் மூளை மனிதனின் கட்டுப்பாட்டிலும் (manual), தன்னிச்சையாகவும் (automatic) செயல்படும் தன்மை பெற்றது. ஒரு சில சமயங்களில் இரண்டும் கலந்து செயல்படும் தன்மையும் பெற்றிருக்கிறது.

மனிதனின் கட்டுப்பாட்டில் மூளை செயல்படும் போது மனிதனின் ஆழ்மன மற்றும் புற மன எண்ணங்களுக்கு ஏற்பவும், மனிதனின் பய உணர்வுக்கு ஏற்பவும் கனவுகளை கொடுக்கிறது.

மூளை தன்னிச்சையாக செயல்படும் போது எதிர்காலத்தில் (சில நாட்களில், சில வாரங்களில், சில மாதங்களில்) நடக்க இருக்கும் விசயங்களை ஈர்த்து மனிதனுக்கு கனவாக கொடுத்து மனிதனை அதற்க்கு ஏற்ப தயார் படுத்தவும், எச்சரிக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும்  செய்கிறது. இதன் மூலம் தன்னையும், தன்னை சுமந்திருக்கும் மனிதனையும் பாதுகாக்கிறது. 

மூளை தன்னிச்சையாக செயல்படும் தருணத்தில் அது பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பில் செயல்படுகிறது. அதனால் தான் இது போன்ற எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விசயங்களை அதனால் மனிதனுக்கு கனவின் மூலம் காட்டுகிறது.

 இந்த தன்னிச்சையாக செயல்படும் திறனை தூண்டும் போது (தியானம், மந்திரம், நெற்றிக்கண்ணை திறத்தல் மற்றும் பல) அது இன்னும் அதிகமாக செயல்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை ஒரு படம் போல தத்ரூபமாக கனவின் மூலம் காட்டுகிறது.

இந்த தன்னிச்சையாக செயல்படும் திறனை சற்று வேறு விதமாக தூண்டும் போது, குறி சொல்லும் திறன் போன்றவை ஏற்படுகிறது. தன்னை நாடி வருபவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? போன்றவற்றை அறியும் தன்மை உண்டாகிறது. இந்த தன்னிச்சையாக செயல்படும் திறன் சிலருக்கு எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் இயற்கையிலேயே அமையலாம்.

தீய சக்திகளினால் பாதிக்கப்பட்டவரின் மூளை தீய சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது, அந்த தீய சக்திகளை அவர் உடலில் இருந்து வெளியேற்றும் வரை.தீய சக்திகளின் அளவையும், சக்தியையும் பொறுத்து இது மாறுபடும்.

No comments:

Post a Comment