Wednesday 23 July 2014

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகள் ஊனம் ஆவார்களா?

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகள் ஊனம் ஆவார்கள் என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆனால் இது உண்மையா?

இதை 100% உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

100% பொய் என்று ஒதுக்கி விடவும் முடியாது.

சரியான மருத்துவ statistical report எனக்கு தெரியாததால் 5% இதை ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

அப்படியானால் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் வெளி உறவுகளில் திருமணம் செய்பவர்களுக்கு ஊனம் உள்ள குழந்தைகள் பிறப்பதே இல்லையா?

அவர்களுக்கும் ஊனமான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.

நம் முன்னோர்கள் 90%க்கும் அதிகமானவர்கள்  கடந்த 2 தலைமுறைக்கு முன்பு வரை பல கோடி ஆண்டுகளாக சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்பவர்களாக இருந்தார்கள். அப்படியானால் நம் முன்னோர்களில் 90%க்கும் அதிகமானவர்கள் ஊனம் உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டுமே? ஆனால் அப்படி ஏதும் இல்லையே.

ஊனம் பற்றி ஔவையார் மட்டுமே பாடி இருப்பதை படித்து இருக்கிறேன். "கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது " என்று சொல்கிறார்.

நம் சங்க இலக்கிய பாடல்களில் வேறு யாரும் உடல் ஊனம் பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

என் அப்பா தவிர என் தாத்தா வரை என் முன்னோர்கள் எல்லோரும்  சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் தான். ஆனால் என் குடும்பத்தில் யாரும் ஊனமாக பிறந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. 

No comments:

Post a Comment