Thursday, 31 July 2014

தாலி

தாலியில் பவளம் கோர்க்க வேண்டும் என்று சிலர் டிவி நிகழ்ச்சிகளில் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். டிவி சேனல்களில் பேச சான்ஸ் கிடைச்சா என்னவேண்டுமானாலும் பேசலாம்னு நினைப்பானுங்க போல. விட்டா தாலில காபி கொட்டை, புளியங்கொட்டையையெல்லாம் கோர்க்க சொல்லுவானுங்க போல.
இவனுங்க பேச்சை நம்பி பல பெண்கள் தங்கள் தாலியில் பவளத்தை கோர்த்திருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் மஞ்சள் கயிறை
மட்டுமே பல கோடி ஆண்டுகளாக தாலியாக கட்டினார்கள்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளில் வணிக நோக்கத்திற்காக பலர் அதை தங்கமாக மாற்றினார்கள். அதுவே தவறான ஒரு செயல்.
தற்போது அதில் மீண்டும் வணிக நோக்கத்திற்காக பவளத்தை கோர்க்க சொல்கிறார்கள்.
இது எந்தவிதமான துன்பத்தை தரும் என்று எனக்கு தெரியவில்லை.

Wednesday, 30 July 2014

வாஸ்து

படுக்கை அறையில் இரண்டு திசைகளும் சந்திக்கும் இடத்தில் (வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு) தலை வைத்தோ அல்லது கால் வைத்தோ தூங்குவது துன்பத்தை தரும்.

சாமி

தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்திடும்னா! தமிழர்களை கொன்ற ராஜபக்சேவும், திட்டம் போட்டு கொடுத்த சோனியாவும் குருடனுங்களா ஆகியிருக்கணுமே?

இன்னாங்கடா உங்க சாமிக்கு கண்ணை குத்த கூட தைரியம் இல்லையா?

பிள்ளையார்.

சில சிலைகளில் பிள்ளையார் எதற்காக தன் அத்தை லட்சுமியை தன் மடியில் உட்கார வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

யத்தங்களை நிறுத்த

திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை எதையாவது பாடி உலகத்தில் நடக்கும் யுத்தங்களையும்,  மனிதர்கள் கொல்லப்படுவதையும் நிறுத்த முடியுமா?

#அவனவன் கம்யூட்டர்ல பல் விளக்குறான். இவனுங்க இன்னமும் திருப்புகழை பாடிக்கிட்டு இருக்கானுங்க.

ஆண்டாள்.

அமெரிக்க மாப்பிள்ளை அல்லது சாப்ட்வேர் இன்ஜினியரைத் தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லும் இன்றைய பெண்களுக்கும், கண்ணனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொன்ன ஆண்டாளுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்.

ஆண்டாள் கொஞ்சம் மறை கழண்ட முத்திய கேஸ்.

Tuesday, 29 July 2014

கடவுளுக்கு கொள்ளி

சிவன் இறந்து பிள்ளையாரோ, முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரிந்திருக்கும் தந்தையின் மரணம் எவ்வளவு வலியை தரும் என்று, கணவனின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று பார்வதிக்கு.

பார்வதி இறந்து பிள்ளையாரோ முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரியும் தாயின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று, மனைவியின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று சிவனுக்கு.

பிள்ளையாரோ, முருகனோ இறந்து சிவன் கொள்ளி வைத்திருந்தால் தெரியும் பிள்ளையின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று.

ஆனால் அவனுங்க பல கோடி ஆண்டுகளாக சாகாமல் இருப்பதால் தான் மனிதர்களின் வலி அந்த பரதேசிகளுக்கு புரிவதே இல்லை.

கடவுளுக்கு கொள்ளி வைக்கும் காலமும் வாராதோ?

Monday, 28 July 2014

எச்சரிக்கை

என்னை uncle  என்று அழைத்து என்னை வெறுப்பேற்றும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை. 

15 வருடங்களுக்கு பிறகு நீங்கள்
aunty என்று அழைக்கப்படுவீர்கள்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

பாக்யராஜ்

நடிகர் பாக்யராஜ் அவர்களுக்கு நடனம் ஆட தெரியாது என்று பலரும் கேலி செய்கிறார்கள்.

இன்றைய நடிகர்கள் பாக்யராஜ் அவர்களின் நடனத்தை தான் 2x  வேகத்தில் ஆடுகிறார்கள் என்பது தான் உண்மை.

பாக்யராஜ் அவர்களின் நடனத்தை 2x  வேகத்தில் பாருங்கள் தெரியும்.

Saturday, 26 July 2014

நாடார்.

ஜாதியை பற்றி எழுதவே கூடாது என்று தான் நினைத்து இருந்தேன்.

ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் நாடார் ஜாதியை பற்றி பெருமையாக எழுதியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபம் அளவுக்கு அதிகமாக வந்ததை 2 நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.

1947 க்கு முன்பு வரை வேண்டுமானால் நாடார் ஜாதியை சேர்ந்த எல்லோருமே நல்லவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை என்பது தான் உண்மை. தற்போது நாடார் ஜாதியில் ஏராளமான கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பல கோடி மதிப்புள்ள எங்கள் குடும்ப சொத்துக்களை எல்லாம் ஆட்டையபோட்ட எல்லா பக்கி, பன்னாட, பரதேசி, பன்னிகளும் நாடா பசங்க தான்.

தன் சக குடும்ப உறவுகள் மீதே தீய சக்திகளை ஏவும் குணம் இன்று பல நாடார் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.

நானும் என் குடும்பமும் முன்னேறக்கூடாது என்று நினைக்கும் என் சொந்தக்கார பரதேசிகள் பலரும்  நாடாப் பரதேசிங்க தான்.


நாடார் சமுதாயத்தில் இருப்பவர்கள் நன்கு படித்து முன்னேறவேண்டும் என்ற நோக்கத்திற்காக கட்டப்பட்ட நாடார் கல்லூரியில் donation கொடுக்கவில்லை என்றால் நாடார் ஜாதியை சேர்ந்த எந்த ஒரு இளைஞனுக்கும் இடம் கிடைக்காது.

நாடார் உறவின்முறையில் பொது சொத்தை ஏமாற்றி தின்னும் நாடார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ங்கொய்யால நானும் இதே காட்டுமிராண்டிப்பய கூட்டத்தில் இருந்து வந்தவன்தாண்டா!

எனக்கு தெரியாதா என்னென்ன அயோக்கியத்தனம் பண்ணுறீங்கன்னு?

Thursday, 24 July 2014

பெண்ஈயவாதிகள்.

பெண்ஈயவாதிகளில்,
1) பிட் படம் பார்ப்பவர்கள் ஏராளம்.
2) தங்கள் மனைவியின் விருப்பபடி அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்காதவர்கள் ஏராளம்.
3) தங்கள் மனைவியின் தனித்திறமையை வெளிஉலகத்திற்கு தெரியாமல் மறைத்தவர்கள் ஏராளம்.
(கல்வி, பாடும் திறமை மற்றும் ஏராளம்)
4) தங்கள் மனைவியை அடிமையாக நடத்துபவர்கள் ஏராளம்.
5) மாற்றான் மனைவியை ரசிப்பவர்கள் ஏராளம்.

இது தெரியாம நெறைய பொட்டச்சிக இருக்காளுக.

காகம்.

காகங்கள் எல்லாம் முன்னோர்கள், பித்ருக்கள் என்று சொல்பவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி ஒன்று தான்.
"உங்க கொள்ளு தாத்தா செத்த எலியை விரும்பி சாப்பிடுவாரோ?"

Wednesday, 23 July 2014

மூளை.(brain)

மனிதனின் மூளை மனிதனின் கட்டுப்பாட்டிலும் (manual), தன்னிச்சையாகவும் (automatic) செயல்படும் தன்மை பெற்றது. ஒரு சில சமயங்களில் இரண்டும் கலந்து செயல்படும் தன்மையும் பெற்றிருக்கிறது.

மனிதனின் கட்டுப்பாட்டில் மூளை செயல்படும் போது மனிதனின் ஆழ்மன மற்றும் புற மன எண்ணங்களுக்கு ஏற்பவும், மனிதனின் பய உணர்வுக்கு ஏற்பவும் கனவுகளை கொடுக்கிறது.

மூளை தன்னிச்சையாக செயல்படும் போது எதிர்காலத்தில் (சில நாட்களில், சில வாரங்களில், சில மாதங்களில்) நடக்க இருக்கும் விசயங்களை ஈர்த்து மனிதனுக்கு கனவாக கொடுத்து மனிதனை அதற்க்கு ஏற்ப தயார் படுத்தவும், எச்சரிக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும்  செய்கிறது. இதன் மூலம் தன்னையும், தன்னை சுமந்திருக்கும் மனிதனையும் பாதுகாக்கிறது. 

மூளை தன்னிச்சையாக செயல்படும் தருணத்தில் அது பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பில் செயல்படுகிறது. அதனால் தான் இது போன்ற எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விசயங்களை அதனால் மனிதனுக்கு கனவின் மூலம் காட்டுகிறது.

 இந்த தன்னிச்சையாக செயல்படும் திறனை தூண்டும் போது (தியானம், மந்திரம், நெற்றிக்கண்ணை திறத்தல் மற்றும் பல) அது இன்னும் அதிகமாக செயல்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை ஒரு படம் போல தத்ரூபமாக கனவின் மூலம் காட்டுகிறது.

இந்த தன்னிச்சையாக செயல்படும் திறனை சற்று வேறு விதமாக தூண்டும் போது, குறி சொல்லும் திறன் போன்றவை ஏற்படுகிறது. தன்னை நாடி வருபவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? போன்றவற்றை அறியும் தன்மை உண்டாகிறது. இந்த தன்னிச்சையாக செயல்படும் திறன் சிலருக்கு எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் இயற்கையிலேயே அமையலாம்.

தீய சக்திகளினால் பாதிக்கப்பட்டவரின் மூளை தீய சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது, அந்த தீய சக்திகளை அவர் உடலில் இருந்து வெளியேற்றும் வரை.தீய சக்திகளின் அளவையும், சக்தியையும் பொறுத்து இது மாறுபடும்.

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகள் ஊனம் ஆவார்களா?

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகள் ஊனம் ஆவார்கள் என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆனால் இது உண்மையா?

இதை 100% உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

100% பொய் என்று ஒதுக்கி விடவும் முடியாது.

சரியான மருத்துவ statistical report எனக்கு தெரியாததால் 5% இதை ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

அப்படியானால் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் வெளி உறவுகளில் திருமணம் செய்பவர்களுக்கு ஊனம் உள்ள குழந்தைகள் பிறப்பதே இல்லையா?

அவர்களுக்கும் ஊனமான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.

நம் முன்னோர்கள் 90%க்கும் அதிகமானவர்கள்  கடந்த 2 தலைமுறைக்கு முன்பு வரை பல கோடி ஆண்டுகளாக சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்பவர்களாக இருந்தார்கள். அப்படியானால் நம் முன்னோர்களில் 90%க்கும் அதிகமானவர்கள் ஊனம் உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டுமே? ஆனால் அப்படி ஏதும் இல்லையே.

ஊனம் பற்றி ஔவையார் மட்டுமே பாடி இருப்பதை படித்து இருக்கிறேன். "கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது " என்று சொல்கிறார்.

நம் சங்க இலக்கிய பாடல்களில் வேறு யாரும் உடல் ஊனம் பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

என் அப்பா தவிர என் தாத்தா வரை என் முன்னோர்கள் எல்லோரும்  சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் தான். ஆனால் என் குடும்பத்தில் யாரும் ஊனமாக பிறந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. 

Monday, 21 July 2014

To decrease Accident.

தனிநபர் வாகன போக்குவரத்திற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டால் வாகன விபத்துக்கள் 70% க்கும் மேல் குறையும்.
நம் முன்னோர்களின் வாகனமாக முக்கிய இடம் பிடித்தவை குதிரைகள்.
இயந்திர வாகனங்கள் இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கும்.

Sunday, 20 July 2014

Nac jewellers advertisement.

நகைக்கடை சேல்ஸ்மேனை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கிறார்கள் என்று விளம்பரம் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

உலகின் 8 வது அதிசயம் இதுவாகத்தான் இருக்கும்.

விளையாட்டு.

விளையாடாதே! படி படி என்று திட்டியே பல லட்சம் பெற்றோர்கள் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அழித்து விட்டார்கள்.
ஆனால் கணினி உலகம் தினம் தினம் புது புது விளையாட்டுகளை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மனிதனை  தனிமைப்படுத்தி, ஒருவித அடிமைத்தனத்தை மறைமுகமாக உருவாக்குகிறது.

Friday, 18 July 2014

தலைவிரி கோலம்.

தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு திரியுறாளுக. ஏன்னு கேட்டா fashion ன்னு சொல்றாளுக.

ஜகன் மோகினில வர்ற பேய் மாதிரி இருக்குன்னு உண்மைய  சொன்னா நம்பவே மாட்றாளுக.

உண்மைய சொன்னா என்னைக்கு நம்பிருக்காளுக.

Wednesday, 16 July 2014

ariel soap advertisement

அன்று tea விளம்பரம்.
காடு, மலை எல்லாம் தேடி அலைஞ்சேன் ஒரு தங்கமான tea  ருசிக்காக.

இன்று ariel soap விளம்பரம்.
துணியை அழுக்காக்க ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் சென்றோம்.

ங்கொய்யால எங்க வீட்டுக்கு எதிரில் இருக்கும் சாக்கடைல முக்கி எடுத்தா 5 நொடில அழுக்காகிடும்டா. உங்களை எவண்டா எல்லா மாநிலமும் ஊர் சுற்ற சொன்னது.

வெல்லம், கருப்பட்டி.

தமிழனின் பாரம்பரிய இனிப்பு சுவையில் முக்கிய இடம் பிடித்தவை வெல்லமும், கருப்பட்டியும் தான்.

தற்போது விற்கப்படும் சீனியில் ரசாயனம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.

பெற்றோர்கள்.

விளையாட வேண்டிய பிள்ளைகளை விளையாட விடாமல் தடுத்து படி படி என்று துன்புறுத்தும் பெற்றோர்கள் அனைவருமே சர்வாதிகாரிகள் தான்.

20 வயதிற்குள் விளையாடாமல் 60 வயசுக்கு மேலேயா விளையாட முடியும்?

Tuesday, 15 July 2014

Walking stick

டேய் கடவுள்களா! உங்க கைல வேல், திரிசூலம் எதுக்குடா வச்சிக்கிட்டு இருக்கீங்க?

உங்களுக்கெல்லாம் பல கோடி வயசுக்கு மேல் ஆகிட்டதுனால ஊன்றுகோலா பயன்படுத்துறீங்களாடா?

Monday, 14 July 2014

எதிரி

நான் பெண்களின் சில பல  கருத்துக்களுக்கு தான் எதிரியே தவிர பெண்களுக்கு எதிரி அல்ல.

மீன்.

மீனை பதப்படுத்த அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது.
மீன் ஆரோக்கியமான உணவு தான். ஆனால் அமோனியா வாயுவினால் பதப்படுத்தப்பட்ட மீனை சாப்பிடுவது ஆரோக்கிய குறைவையும், ஆயுள் குறைவையும் ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்படாத, உயிருள்ள மீனை வாங்கி சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது.

Sunday, 13 July 2014

நதி நீர் இணைப்பு

நதி நீர் இணைப்பு பெரிய விசயமல்ல.

அதில் தொழிற்சாலை கழிவுகளையும், ரசாயனங்களையும் கலக்காமல் இருக்க வேண்டும்.

Friday, 11 July 2014

கருப்பு பணம்.

இந்திய பணக்கார முதலைகள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டால் எந்த சட்ட, அரசியல் சிக்கலும் வராது.

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் இல்லை என்று அரசாங்கமே அறிவித்து விடும்.

எதிர் காலத்தில் நானும் பணக்கார முதலையாகும் பட்சத்தில் ஸ்விஸ் வங்கியில் பணம் போடலாம்னு திட்டம் தீட்டி இருக்கிறேன்.

மக்கள் என்ற மந்தை ஆடுகளுக்கு தெரியவா போகிறது?

Thursday, 10 July 2014

காதல்.

உன்னை யாராவது காதலிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதே.  அது உன் வருங்கால கணவனின் பிரார்த்தனையாகக் கூட இருக்கலாம்.  (நாங்களும் சொல்லுவோம்ல)

வரலாற்றில் இன்று.

பெண்களோடு சகஜமாக பேச வேண்டும் என்பதற்காக ஆண்களும்,  ஆண்களோடு சகஜமாக பேச வேண்டும் என்பதற்காக பெண்களும் fake id  கண்டுபிடித்த தினம் இன்று.

வாசனை திரவியங்கள்.


இன்று உலக அளவில் நாம் ரசாயன வாசனை பொருட்களை தான் 100 % பயன்படுத்துகிறோம். இதனால் ஏற்பட போகும் பாதிப்பையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும். பத்தி,  Perfume,  body spray,  room spray,  room freshner etc.
நம் முன்னோர்கள் இயற்கை வாசனை திரவியங்களை தயாரித்து பல நாடுகளுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்.

Wednesday, 9 July 2014

போலி.

மாக்கல்லில் செயற்கையாக அழகுபடுத்தி அதை சாளக்கிராம கல் என்று போலிகள் விற்கப்படுகின்றன.

Tuesday, 8 July 2014

உணவு.

வெப்பமான சீதோஷ்ண நிலையில் வசிப்பவர்கள் நீர்த்தன்மை அற்ற உணவுகளை முழு நேர உணவாக உண்டால் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.

உதாரணம்,  பீச்சா, பொர்கர்ர்ர்ர்ர்.

குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் நீர்த்தன்மை கொண்ட உணவுகளை முழுநேர உணவாக உண்டால் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.

உதாரணம்,  மோர், இளநீர்,  ரசம் மற்றும் பல.

Sunday, 6 July 2014

இறை தரிசனம்.

அளவுக்கு அதிகமாக சாமி கும்பிடுவது கூட துன்பத்தையே தரும். 
இறைவனின் அருளை வேண்டுவது மட்டுமே சரியானது.
இறை தரிசனம் வேண்டுவது சரியல்ல.
இறை தரிசனம் பெற்ற யாரும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ முடியாது. போராட்டமான வாழ்க்கையை தான் வாழும் நிலை ஏற்படும். சராசரி மனிதர்களுக்கு கிடைக்கும் எல்லா சந்தோஷங்களும் இறை தரிசனம் பெற்றவர்களுக்கு கிடைக்காது.
இறை தரிசனம் பெற்றவர்களால் பிறருக்கு நன்மை ஏற்படும். ஆனால் யாராலும் இவர்களுக்கு சந்தோசம் கிடைக்காது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சாமி வந்து ஆடுபவர்கள்,  குறி சொல்பவர்கள் மற்றும் இவர்களை போன்ற பலர்.

Saturday, 5 July 2014

புற்றுநோய்.

அலோபதி மருந்துகளை, தொடர்ந்து அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறார்கள்.
காரணம், அலோபதி மருந்துகள் அனைத்துமே 100% ரசாயன பொருட்களால் ஆனவை.

Friday, 4 July 2014

குறவர்கள்.

முருகனுக்கு மாமனார் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

சிவனுக்கு சம்பந்தி வம்சத்தை சேர்நதவர்கள்.

இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கையை இன்றும் பின்பற்றுபவர்கள்.

தங்கள் பிள்ளைகளை டாக்டர்,  இன்ஜினியர், சாப்ட்வேர் இஞ்ஜீனியர் ஆக்கி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில்லை.

பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை.

ஜலதோஷம்

5 மிளகு, 5 தேக்கரண்டி பனங்கல்கண்டு சேர்த்து 1 வேளை முதல் 3 வேளை வரை சாப்பிட்டால் எவ்வளவு ஜலதோஷம் இருந்தாலும் ஒரே நாளில் சரியாகி விடும்.

Pyramid

பிரமிட் நேர்மறை சக்தி தரும் என்றால் எகிப்தில் பிரமிடை சுற்றி ஏன் பாலைவனம் இருக்கிறது? இயற்கை வளங்கள் அல்லவா இருக்க வேண்டும்.

ஆன்மீகம்.

மக்களை கோவில்களுக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகவும், கோவில்களில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பரப்பிவிடப்பட்ட பல பொய்கள் தான், இன்று ஆன்மீகம் என்ற வேடமிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறது.

நான்.

நான் வாழ வேண்டிய என் வாழ்க்கையை என் எதிரிகளும், துரோகிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

இருள்.

இருள் என்பது அமங்கலம் அல்ல. அது இயற்கையின் ஒரு அங்கம். 24 மணி நேரமும் பகலாக இருந்தால்
உயிரினங்களின் வாழ்க்கை இருண்டு விடலாம்.

Thursday, 3 July 2014

Doctor

டாக்டர்கள் எல்லாம் soap, shampoo, paste, brush, water purifier, napkin, hand wash, floor cleaner, toilet cleaner, health drinks, சமையல் எண்ணெய் விற்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா விளம்பரத்திலும் வாராங்க.

மரம்.

வீட்டில் அரசமரம்,  ஆலமரம்,  மூங்கில்,  எருக்கு, பவளமல்லி, வில்வம்  போன்றவை இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம், அந்தஸ்து, ஆயுள்,  சொத்து அனைத்தும் குறையும்.
ஆனால் இவை வீட்டோடு இணைந்திருக்காத கடை, அலுவலகம், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இவற்றில் இருந்தால் மேற்சொன்ன அனைத்தும் கூடும்.

மூங்கில் செடி.

சீன வாஸ்து என்ற பெயரில் சிறிய அளவிளான மூங்கில் செடி வளர்க்கிறார்கள்.

மூங்கில் செடி கடை, அலுவலகம், தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மட்டுமே வளர்க்கலாம்.

வீட்டில் வளர்த்தால் துன்பமே நேரும்.

வீட்டில் அரசமரம் வளர்ந்தால் என்ன துன்பம் நேருமோ அதே போன்ற துன்பம் நேரும்.

இதற்கு மிக சிறந்த உதாரணம் மதுரையில் குலமங்கலம் மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பெரிய மூங்கில் மரம் இருக்கிறது. அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இன்றி இருண்ட நிலையில் இருக்கிறது.

Online play rummy

Online play rummy and win 3,00,000  அப்படின்னு விளம்பரம் பண்றானுங்க.
ங்கொய்யால கஷ்டப்பட்டு உழைச்சு மாசம் 5000 சம்பாதிக்கவே கஷ்டமா இருக்கு. கெட்ட வார்த்தைல திட்டிருவேன்டா போய் தொலைங்கடா.