Wednesday 21 January 2015

Pattikaattaan Jey

Pattikaattaan Jey

Shared publicly  -
 
 
 
பாப்பா : அப்பா ஸ்கூல்ல இ வேஸ்ட் கலெக்ட் பண்ணுறாங்கப்பா, நிறைய இ வேஸ்ட் கொண்டுவரவங்களுக்கு கேஷ் அவார்டெல்லாம் குடுப்பாங்கப்பா.

கிஷோர் : ஆமாப்பா, எங்க மிஸ் கூட சொன்னாங்கப்பா

பாப்பா : ரெண்டு டிவி இருக்கில்லப்பா, அதுல ஒன்னு ஓடல இல்ல, அத எனக்கு குடுத்து விடுங்கப்பா.

கிஷோர் : எனக்கு உங்க மொபைல் குடுத்திருங்கப்பா

பாப்பா : எனக்கு பழய ரிப்பேரான வீடியோ கேமரா இருக்கில்ல அதுப்பா.

கிஷோர் : அப்பா உங்களுக்கு ஆபீஸ் லேப்டாப் இருக்கில்ல, வீட்ல இருக்க ஒரு கம்பூட்டர் எனக்குப்பா...

பாப்பா : அந்த பிரிண்டர் நாம யூஸ் பண்ணுறதே இல்லைலைப்பா...

நான் : அடேய் பசங்களா, கொஞ்சம் நிறுத்துங்கடா... அப்பா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடுறேன்.

மைண்ட் வாய்ஸ் : விட்டா வீட்ல இருக்க எல்லாத்தையும் ஸ்கூல்ல குடுத்து 100 ரூவாய் கேஷ் அவார்ட் வாங்கிட்டு வந்துடுவாய்ங்க போலயே. ரெண்டு நாளைக்கி தங்க்ஸ உஷாரா இருக்கச் சொல்லனும், ஸ்கூல் போகும் போது பேக் எல்லாம் செக் பண்ணி அனுப்பச் சொல்லணும் போலயே.

வூட்ல எல்லாருமா சேர்ந்து பஞ்சாயத்து கூட்டினதுல, நான் பேச்சிலரா இருக்கச்ச யூஸ் பண்ண, இப்பம் பரண்ல இருக்க பழைய ஐவா டிவி, பரண்ல இருக்க சிஆர்டி மானிட்டர், ரிப்பேர்ல இருக்க எச்பி லேசர் பிரிண்டர், ஒர்க் ஆகாத பழைய சாம்சங்க் மொபைல், பரண்ல இருந்த பழைய கம்பூட்டர் மதர் போர்டு, ஒர்க் ஆகாத பழைய கால்குலேட்டர் லிஸ்ட் போட்டு குடுக்கிறதா முடிவாயிருக்குது.

சாயந்திரம் வந்து இன்னும் பரண்ல என்ன இருக்குதுனு காமிக்கணும்னு சொல்லிருக்காய்ங்கே.

நல்ல வேளை வீட்ல இருக்க அப்பா , அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தரை ஸ்கூலுக்கு இனாமா குடுத்திடுங்கண்னு பசங்க கிட்ட சொல்லி அனுப்பிருந்தா என்ன ஆகிருக்கும்?!


#kids_updates
#e_waste
#home_updates  

me:- நம்ம கிட்ட பழைய சாமான்களை வாங்கி school காரனுங்க நல்ல rateக்கு வெளிய விற்று லட்ச லட்சமா சம்பாதிச்சிருவானுங்களே????????? 
இது புது வகையான business மாதிரி இருக்கே?
room போட்டு யோசிச்சிருப்பாய்ங்க போல?

No comments:

Post a Comment