Monday 5 January 2015

திதி கொடுப்பது

திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எள்ளையும், தண்ணியையும் முன்னோர்கள் சாப்பிடுவாய்ங்களாம். என்னாங்கடா டேய்?

உடல் என்ற ஒன்றை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு எப்படி பசி இருக்கும்?
உடலுக்கு தான் பசி இருக்கும்.

சரி உங்க வழிக்கே வர்றேன்.
எள்ளையும், தண்ணியையும் குடுத்தால் போதுமா?
ஏண்டா! உசுரோட இருந்தப்ப வகை வகையாய் சாப்பிட்டுட்டு இறந்த பிறகு எள்ளையாடா தின்பாய்ங்க?

என் அம்மா வெறும் பழைய சோறு, ஊறுகாய் இருந்தால் போதும் என்று அவர் இளமை காலம் முதல், முதுமை காலம் வரை சாப்பிட்டவர்.

ஆனால் என் அப்பாவோ அவருடைய இளமை காலத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் ஆட்டுகறி ருசித்து சாப்பிட்டவர். என் பாட்டியும் அப்படித்தான். அவுங்களுக்கு  எள்ளை சாப்பிட கொடுத்தால் என்னை பற்றி அவுங்க  என்னடா நினைப்பாங்க?

பூமி தோன்றியது முதல் என் அம்மா அப்பா வரை பல கோடி தலைமுறைகள் உள்ளனர். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கணும்னா! டன் கணக்குல சாப்பாடு வேணும்டா!

No comments:

Post a Comment