Saturday 3 January 2015

மந்திரங்கள் ஆபத்தானவை

மந்திரங்கள் சக்தி படைத்தவை.
அளவுக்கு அதிகமான நன்மையை தருபவை.
ஆனால் அதன் பிரயோக முறை 100% தெரிந்தால் மட்டுமே.
தற்போது இருக்கும் ஒருவருக்கு கூட பிரயோக முறை 100% தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
சித்தர்கள் காலத்தில் இருந்த எழுத்துருவம் வேறானது. தற்போது இருக்கும் எழுத்துருவம் வேறானது.
சித்தர்கள் தங்களுக்கு தெரிந்ததில் சிறு பகுதியை தான் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். மீதியை நமக்கு தெரியக்கூடாது என்று மறைத்தே விட்டார்கள். மந்திரங்கள் மட்டுமல்ல, பிரயோகத்தின் போது செய்ய வேண்டிய செயல்களையும் தான்.
அவற்றிலும் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில் அழிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை நமக்கு கிடைக்காமலேயே அழிந்து போயிருக்கின்றன.
சித்தர்கள் தந்த மந்திரங்களில் மொழிபெயர்ப்புகளில் தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்பிருக்கிறது.
ஒரு எழுத்து தவறாக உச்சரித்தாலோ அல்லது மந்திர பிரயோகத்தின் போது செய்ய வேண்டிய விசயங்களை 100% செய்யாமல் விட்டாலோ ஆபத்தான நிகழ்வுகளே உண்டாகும்.
இது தெரியாமல் நம்மில் பலரும் புத்தகத்தில் இருக்கும் மந்திரங்களை சர்வ சாதாரணமாக சொல்கிறோம்.
மேலும் உதாரணமாக நாம் பூக்கள் அல்லது தேங்காய் வாங்காமல் விட்டு விட்டாலோ வேறொருவர் வாங்கி கொடுத்த பொருட்களில் நம்மை தொட சொல்லி இது போன்ற மற்றும் பல ஏராளமான சமாளிப்பு வேலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இது போல பல தவறுகள் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன.
மேலும் மந்திரங்களை அழிவிற்கு பயன்படுத்தினால் பிரயோகித்தவர்களுக்கும் எதிர்மறை அழிவை தரும்.
எகிப்து சாம்ராஜ்ய அழிவிற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதுகிறேன்.
அரைகுறையான மந்திர பிரயோகத்தினால்தான் சமஸ்கிருத மொழியும் அழிந்ததாக கருதுகிறேன்.
சித்தர்கள் காலத்தில் இருந்த எழுத்துருக்களை நாம் பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து.

No comments:

Post a Comment