Saturday, 31 January 2015

திருமண தடை

திருமண தடை நீக்கும் காளமேக பெருமாள் என்றொரு பதிவு மூஞ்சிபுக்ல இருந்துச்சு.
பெருமாள் மாதிரியே எனக்கும் 2 பொண்டாட்டி கிடைக்குமா?
டேய் தில்லை புறப்படுடா!
காளமேக பெருமாள பார்க்க.
2 பொண்டாட்டி கிடைச்சா வேண்டாம்னா சொல்லப்போற?

Monday, 26 January 2015

opening - finishing

opening எல்லாம் ஒங்க எல்லார்ட்டயும் நல்லாத்தாண்டா இருக்கு. ஆனா ஒருத்தன்ட்டயும் finishing சரியில்லையேடா!




காமராஜருக்கு பிறகு யார்?

காமராஜர் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று king kong monkey போல மார்தட்டிக் கொள்ளும் நாடா பசங்களா!
ஏண்டா உங்க ஜாதில காமராஜருக்கு பிறகு நல்லவர்கள் யாருமே பிறக்கலையாடா?
ஏண்டா பிறக்கல?
வ.உ.சிதம்பரம் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் பிள்ளைமார் ஜாதியினருக்கும், முத்துராமலிங்கம் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் தேவர் ஜாதியினருக்கும், பாரதியார் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் பிராமணர்களுக்கும்
இதே கேள்வி தான்.
அவனவன் ஜாதி பெருமை பேசுறவன் எல்லாம் இப்ப பதில் சொல்லுங்கடா! பார்ப்போம்!
நான் பதில் சொல்கிறேன்.
இவர்களில் ஒருவர் கூட தன் ஜாதி நன்றாக இருக்க வேண்டும் என்று இம்மியளவும் நினைத்தது கிடையாது. தன் நாடும், தன் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று பொதுநல சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட தலைவர்களை ஜாதீ பெயரை சொல்லி பிரிக்கிறீங்களேடா! உங்களுக்கே நியாயமா இருக்காடா?

Sunday, 25 January 2015

தரமான தேன்

தேனை கண்ணாடி பாட்டில்களில் தான் வைத்திருக்க வேண்டும். Pet அல்லது plastic பாட்டல்களில் வைத்திருக்க கூடாது.
காரணம் தேனுக்கு இளக்கும் சக்தி(melting power) அதிகம். பெட் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்தால் அதிலிருக்கும் ரசாயனத்தை இளக்கி தன்னோடு இணைத்துக் கொள்ளும். இதனால் தேன் நச்சுத்தன்மை பெறும்.

இது எப்படி இருக்கு?

பலரும் கூடி கும்மி அடிக்கும் சந்தோசமான நிகழ்ச்சிகளில் சில பொட்டச்சிக, குழந்தை பேறு அடையாத பெண்களை ஆட்டத்தில் சேத்துக்க மாட்டாளுக.

கேட்டா, அவ மலடி அப்படின்னு சொல்லுவாளுக.

நீங்க வீட்டுக்குள்ள தினமும் அலங்கரிச்சு, ஆராதனை பண்ணி, மாலை போட்டு, சூடம் காட்டி, பூஜை பண்ணுற லட்சுமியே மலடி தானே?

இது எப்படி இருக்கு?
பரட்ட பத்தவச்சிட்டியே பரட்ட!


பெருமாள்

பிள்ளை வரம் கேட்டு ஒருத்தி பெருமாளை கும்பிட்டாளாம்.
அந்த ஆளே தனக்கு பிள்ளை இல்லைன்னு எந்த கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணுனா தனக்கு பிள்ளை பிறக்கும்னு google ல search பண்றதா நாசா வெஞ்ஞானிகள் கண்டு புடிச்சிருக்காய்ங்கே!

மாமா! காய்ஞ்சு போன ஏரியெல்லாம் வத்தாத நதிய பாத்து ஆறுதலடையும். அந்த நதியே காய்ஞ்சு போய்ட்டா??????


Saturday, 24 January 2015

குற்றம்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

குற்றம் மட்டுமே செய்யும் சுற்றம் என்ன மசுருக்கு வேண்டும்?

Friday, 23 January 2015

சுபாஷ் சந்திர போஸ்

இந்திய ரூபாய் நோட்டுகளில் சுபாஷ் சந்திர போஸின்  படம் இடம் பெற வேண்டும்.

Wednesday, 21 January 2015

நாடார் ஜாதீ


Pattikaattaan Jey

Pattikaattaan Jey

Shared publicly  -
 
 
 
பாப்பா : அப்பா ஸ்கூல்ல இ வேஸ்ட் கலெக்ட் பண்ணுறாங்கப்பா, நிறைய இ வேஸ்ட் கொண்டுவரவங்களுக்கு கேஷ் அவார்டெல்லாம் குடுப்பாங்கப்பா.

கிஷோர் : ஆமாப்பா, எங்க மிஸ் கூட சொன்னாங்கப்பா

பாப்பா : ரெண்டு டிவி இருக்கில்லப்பா, அதுல ஒன்னு ஓடல இல்ல, அத எனக்கு குடுத்து விடுங்கப்பா.

கிஷோர் : எனக்கு உங்க மொபைல் குடுத்திருங்கப்பா

பாப்பா : எனக்கு பழய ரிப்பேரான வீடியோ கேமரா இருக்கில்ல அதுப்பா.

கிஷோர் : அப்பா உங்களுக்கு ஆபீஸ் லேப்டாப் இருக்கில்ல, வீட்ல இருக்க ஒரு கம்பூட்டர் எனக்குப்பா...

பாப்பா : அந்த பிரிண்டர் நாம யூஸ் பண்ணுறதே இல்லைலைப்பா...

நான் : அடேய் பசங்களா, கொஞ்சம் நிறுத்துங்கடா... அப்பா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடுறேன்.

மைண்ட் வாய்ஸ் : விட்டா வீட்ல இருக்க எல்லாத்தையும் ஸ்கூல்ல குடுத்து 100 ரூவாய் கேஷ் அவார்ட் வாங்கிட்டு வந்துடுவாய்ங்க போலயே. ரெண்டு நாளைக்கி தங்க்ஸ உஷாரா இருக்கச் சொல்லனும், ஸ்கூல் போகும் போது பேக் எல்லாம் செக் பண்ணி அனுப்பச் சொல்லணும் போலயே.

வூட்ல எல்லாருமா சேர்ந்து பஞ்சாயத்து கூட்டினதுல, நான் பேச்சிலரா இருக்கச்ச யூஸ் பண்ண, இப்பம் பரண்ல இருக்க பழைய ஐவா டிவி, பரண்ல இருக்க சிஆர்டி மானிட்டர், ரிப்பேர்ல இருக்க எச்பி லேசர் பிரிண்டர், ஒர்க் ஆகாத பழைய சாம்சங்க் மொபைல், பரண்ல இருந்த பழைய கம்பூட்டர் மதர் போர்டு, ஒர்க் ஆகாத பழைய கால்குலேட்டர் லிஸ்ட் போட்டு குடுக்கிறதா முடிவாயிருக்குது.

சாயந்திரம் வந்து இன்னும் பரண்ல என்ன இருக்குதுனு காமிக்கணும்னு சொல்லிருக்காய்ங்கே.

நல்ல வேளை வீட்ல இருக்க அப்பா , அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தரை ஸ்கூலுக்கு இனாமா குடுத்திடுங்கண்னு பசங்க கிட்ட சொல்லி அனுப்பிருந்தா என்ன ஆகிருக்கும்?!


#kids_updates
#e_waste
#home_updates  

me:- நம்ம கிட்ட பழைய சாமான்களை வாங்கி school காரனுங்க நல்ல rateக்கு வெளிய விற்று லட்ச லட்சமா சம்பாதிச்சிருவானுங்களே????????? 
இது புது வகையான business மாதிரி இருக்கே?
room போட்டு யோசிச்சிருப்பாய்ங்க போல?

Madras Tamil

தமிழகத்தில் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன்.
ஆனால் மெட்ராஸில் மட்டும் தான் தமிழர்கள் சக தமிழர்களோடு ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.
சென்னைன்னு பேர் மாத்தினா மட்டும் போதுமாடா?
தமிழ்ல பேசுங்கடா!

Tuesday, 20 January 2015

மொட்டை

கோவிலுக்கு சென்று தலைமுடியை மழித்து மொட்டை போடும் செயலை எந்த பரதேசி ஆரம்பிச்சான் என்று தெரியவில்லை.
கோவிலுக்கு மொட்டை அடிச்சு, மொட்டை அடிச்சு என் வாழ்க்கையே மொட்டையா இருக்கு.

Monday, 19 January 2015

Fidel castro

பிடல் கேஸ்ட்ரோவை 600 தடவைக்கும் மேல் கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்ததாம் அமெரிக்கா.

Saturday, 17 January 2015

குற்றவாளி

கொடுமைகள் செய்பவன் புத்திசாலி.
அதை பொறுத்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி.

Thursday, 15 January 2015

அண்டங்காக்கை

செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் ஸ்ரீராமபுரத்திற்கு சற்று முன்பாக அண்டங்காக்கைகள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.
என்ன காரணம் என்று தெரியவில்லை.

பொங்கல்

Tweet from TweetCaster - @Anandraaj04: RT @kryes இயற்கை வழிபாட்டைத் தொலைச்ச நாம், "மதத்திடம்" மாட்டிக் கொண்டோம்.
எஞ்சியுள்ள ஒரே "தமிழ்" அடையாளம் = பொங்கல்! தை வாழ்க! #HappyPONGAL
Shared via TweetCaster

Monday, 12 January 2015

வசிய மருந்தை வெளியேற்ற

சங்கிலை பொடி சாப்பிடலாம்.
மதுரையில் திலகர் திடல் சந்தையில் கிடைக்கிறது.

Saturday, 10 January 2015

பணம், உப்பு

உப்பில்லாமல் சமைத்த உணவை சாப்பிட முடியாது.
பணமில்லாமல் வாழும் வாழ்க்கை கொடூரமானது.

உப்பை மட்டுமே உணவாக உண்ண முடியாது.
அன்பான உறவுகள் இன்றி வெறும் பணத்தை வைத்துக் கொண்டு மட்டுமே சந்தோசமாக வாழ முடியாது.

நக்கீரன் பத்திரிகை

கலைஞருக்கு மட்டுமே ஜால்ரா வாசிச்சிக்கிட்டு இருந்தா பத்திரிகை போணி ஆகாதுன்னு
ஒழிந்தான் கொடுங்கோலன்னு ராஜபக்சேவை சொல்றீங்களாடா?

அவ்வளவு நல்லவனுங்களாடா நீங்க?

ராஜபக்சே

என்னாங்க ராஜபக்சே சார் எல்லாருமா சேர்ந்து உங்களை இப்படி தோற்கடிச்சுட்டாங்களே!

இனிமேல் சோனியா காந்திக்கு கால் அமுக்கி விட்டு சம்பாதிக்க போறீங்களா?

இல்ல ராகுல் காந்திக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற புரோக்கர் வேலை பார்க்க போறீங்களா?

மானாட மயிலாட நிகழ்ச்சில உக்காந்து மார்க் போட போறீங்களா?
ஆனா பொண்ணுங்கள மட்டும் தான் கலைஞர் அந்த வேலைக்கு எடுத்துப்பார். நீங்க ஆம்பளையா பொறந்து தொலச்சுட்டீங்களே!

நான் வேணும்னா முனிசிபாலிடில கொசு மருந்து அடிக்கிற வேலைக்கு உங்களுக்கு recommendation letter தரட்டுமா?

ஐயையோ அதுக்கெல்லாம் முன்அனுபவம் வேணுமே!

நோகாம நோம்பி கும்பிடுற வேலை இருக்கு பாக்குறீங்களா?

கம்பி எண்ணுடா த்தா பரதேசி

Friday, 9 January 2015

ராஜபக்சே

ராஜபக்சே தான் தோத்துட்டான்ல. அவனை புடுச்சி ஜெயில்ல போடுங்கய்யா!

Thursday, 8 January 2015

இந்திய துணை கண்டம்

இந்திய துணை கண்டத்திலேயே  முதல் முறையாக எங்கள் ஆட்சியில் தான் பக்கத்து மாநிலங்களை விட பேருந்து கட்டணம் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது.

இந்திய துணை கண்டத்திலேயே முதல் முறையாக எங்கள் ஆட்சியில் தான் பக்கத்து மாநிலங்களை விட கற்பழிப்புகள் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது.

என்பது போன்ற அறிக்கைகளை அரசியல்வியாதிகள் சாரி, அரசியல்வாதிகள் kingkong monkey போல மார்தட்டி சொல்றாங்களே!

இந்த இந்திய துணை கண்டம் அப்படினா என்ன?
அதில் என்னென்ன நாடுகள் உள்ளன?
அதில் என்னென்ன ஊர்கள் உள்ளன?

இந்த விவரம் அறிந்த புவியியலாளர்கள், அறிஞர்கள் யாராவது சொன்னால் தெரிந்து கொள்வேன்.

சத்தியமாக இந்திய துணை கண்டம் அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியவில்லை.

பதிமுகம்

பதிமுகம் தமிழ்நாட்டில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் மருந்து கடைகளில் கிடைக்கிறது.

மதுரை முகவரி
11,மீனாட்சி காம்ப்ளக்ஸ்,
(IBACO அருகில், ஹோட்டல் கௌரி கிருஷ்ணா எதிரில்,)
பை பாஸ் ரோடு,
மதுரை-625016.

திருநெல்வேலி முகவரி
87,கீழ ரத வீதி,
ஸ்ரீ கேரளா ஆயுர்வேத வைத்தியசாலை எதிரில்,
திருநெல்வேலி டவுண்-627006.

Wednesday, 7 January 2015

கருப்பு பணம்

ரமேஷ். .....சுரேஷ். .....
ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டுட்டு வாங்க.
ம்..ம்...ம்....ம்.....ம்.......ம்.........
2050
மக்களுக்காக கருப்பு பணத்தை சட்டுன்னு கொண்டுட்டு வந்துட்டோஓஓஓம்.
அரசியல் வியாதிகளை நம்புவதற்கு பதிலாக ரமேஷ். ...சுரேஷ். ...ஐ நம்பலாம்.

திராவிட இயக்கத்தின் தவறுகள்

மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி அல்லது நினைத்துக்கொண்டு திராவிட இயக்கங்கள் சில தவறுகளும் செய்திருக்கின்றன.

அதில் முக்கியமானது எல்லோருமே எல்லா கோவில்களுக்குள்ளும் நுழையலாம் என்பது. 

மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று கூறினாலும், மூட பழக்க வழக்கங்கள் அதிகரிக்கவே இது உதவி இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் உருவாவதற்கு முந்தைய காலத்தை விட அளவுக்கு அதிகமான கடவுள் அடிமைகளும், சாஸ்திர சம்பிரதாய அடிமைகளும் உருவாகி விட்டார்கள்.



Tuesday, 6 January 2015

கண்திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் நீங்க (to destroy evil eye and black magic)

எந்த ஒரு பொருளையும் கட்டி தொங்க விட்டாலும் அது ஆயுளை குறைக்கும் என்பது என் கருத்து.

தலையை சுற்றி போட்டு தோஷம் கழித்தாலும், அது முழுமையான பலனை தருவதில்லை.

கண்திருஷ்டி என்ற எதிர்மறை சக்தியும், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளும் உடலுக்குள் நுழைந்து, உடலுக்குள் உள்ளிருந்தபடியே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்க்கு 100% சரியான தீர்வு ஆரோக்கியமான உணவு முறை தான். ஆரோக்கியமான உணவு முறையால் மட்டுமே இதை உடலை விட்டு முழுமையாக, நிரந்தரமாக வெளியேற்ற முடியும். 

இஞ்சி, தயிர், நெல்லிக்காய் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சீரகத்தை தினமும் மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சமைக்காமல் சாப்பிடலாம். சீரக தண்ணீர் குடிக்கலாம்.

பதிமுகம் (pathimugam) கலந்த நீர் குடிக்கலாம்.கேரளா மாநிலத்தில் எல்லோருமே பதிமுகம் கலந்த நீரை குடிக்கிறார்கள். பதிமுகம் கேரளா முழுவதும் கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா எல்லை பகுதியில் இருக்கும் ஊர்களில் கிடைக்கிறது. பதிமுகம் என்பது ஒரு வகை மரம். இந்த மரத்தின் சிறு சிறு துண்டுகளை நீரில் போட்டு வைத்தால் நீர் சற்றே சிவந்த நிறத்தில் மாறி விடும். இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது. குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் பதிமுகத்தை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். வெப்பமான நிலப்பரப்பில் இருப்பவர்கள் குடி தண்ணீர் இருக்கும் பானையில் போட்டு வைத்து பின்னர் குடிக்கலாம். சில மணி நேரங்களிலேயே தண்ணீர் சற்றே சிவந்த நிறத்திற்கு மாறி விடும். ஒரு பானை தண்ணீருக்கு ஒரு சிட்டிகை பதிமுகம் போதுமானது. 

பதிமுகம் பல ஆயுர்வேத மருந்துகளில் முக்கியமான ஒன்றாக கலக்கப்படுகிறது.

இனி எண்ட state கேரளா 
எண்ட transport kerala state road transport corporation 
எண்ட பிகர் மலபார் பிகர் 
எண்ட நடனம் கதகளீஈஈஈ 
தகிட தக திமி மலையாள பகவதி 

Monday, 5 January 2015

என் உயிர்

அம்மாவின் மறைவிற்கு பிறகு வீட்டில் வைத்திருந்த திருநீறு, குங்குமம் எல்லாத்தையும் குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன்.
உசுரே போனதுக்கப்புறம் மசுரெல்லாம் எதுக்கு?

ஜாதகம்

உங்க பையன் ஜாதகம் அமோகமா இருக்கு.

கம்ப்யூட்டர் துறைல உங்க பையன் நுழைஞ்சான்னா அடுத்த bill gates உங்க பையன் தான்.
electical, electronics துறைல நுழைஞ்சான்னா இந்தியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் ஆகிடுவான்.
சினிமா துறைல நுழைஞ்சான்னா அடுத்த super star உங்க பையன் தான்.

டேய் ங்கொய்யால! ஜாதகம் கண்டுபுடிச்ச காலத்துல கம்ப்யூட்டர் கிடையாது, electrical கிடையாது, electronics கிடையாது. இதையெல்லாம் எப்படிடா கண்டுபுடுச்சு சொல்றீங்க?
சினிமா கண்டுபுடிச்சே 100 வருஷம் தாண்டா ஆகுது. 
சினிமா கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாடி வாழ்ந்த மேடை நாடக நடிகர்கள் எல்லோருமே பல ஆயிரம் வருசமா சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டவைங்கதாண்டா! 

எப்படிடா சொல்றீங்க? எதை வச்சுடா சொல்றீங்க?

திதி கொடுப்பது

திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எள்ளையும், தண்ணியையும் முன்னோர்கள் சாப்பிடுவாய்ங்களாம். என்னாங்கடா டேய்?

உடல் என்ற ஒன்றை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு எப்படி பசி இருக்கும்?
உடலுக்கு தான் பசி இருக்கும்.

சரி உங்க வழிக்கே வர்றேன்.
எள்ளையும், தண்ணியையும் குடுத்தால் போதுமா?
ஏண்டா! உசுரோட இருந்தப்ப வகை வகையாய் சாப்பிட்டுட்டு இறந்த பிறகு எள்ளையாடா தின்பாய்ங்க?

என் அம்மா வெறும் பழைய சோறு, ஊறுகாய் இருந்தால் போதும் என்று அவர் இளமை காலம் முதல், முதுமை காலம் வரை சாப்பிட்டவர்.

ஆனால் என் அப்பாவோ அவருடைய இளமை காலத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் ஆட்டுகறி ருசித்து சாப்பிட்டவர். என் பாட்டியும் அப்படித்தான். அவுங்களுக்கு  எள்ளை சாப்பிட கொடுத்தால் என்னை பற்றி அவுங்க  என்னடா நினைப்பாங்க?

பூமி தோன்றியது முதல் என் அம்மா அப்பா வரை பல கோடி தலைமுறைகள் உள்ளனர். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கணும்னா! டன் கணக்குல சாப்பாடு வேணும்டா!

கோவில் வேலை

கோவில் வேலை பார்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்று இந்த உலகத்தில் முதல் முதலில் சொன்னவனை மட்டும் நான் பார்த்தால் அவனை கெட்ட வார்த்தையால் திட்டுவேன்.

என்னை என்ன கோவிலுக்கா என்னை பெத்தவைங்க நேர்ந்து விட்டிருக்கானுங்க?

கோவில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒரு பிகருக்கு நூல் விட்டா கூட அது ஒர்க் அவுட் ஆகும். அடுத்த சந்ததியை உருவாக்கும் வேலையில் ஈடுபடலாம்.

கோவில் வேலை பார்த்தால் மசுருக்கு கூட பிரயோஜனம் இருக்காது.

கவுண்டமணி

பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராம நவமி கொண்டாடப்படும் போதெல்லாம் என் மனதில் கவுண்டமணியின் கரகாட்டக்காரன் வசனம் தான் வருகிறது.
"இவனுங்க மட்டும் தான் இந்தியாவுல பொறந்தானுங்களா?
நாமெல்லாம் wasteஆ  பொறந்தோமா?"

பிரபஞ்ச சக்தி

பிரபஞ்ச சக்தியின் கட்டுப்பாட்டில் தான் தெய்வ சக்திகளும் செயல்படுகின்றன. எனவே பிரபஞ்ச சக்தியோடு இணைந்து வாழும் வித்தை கற்றால் தான் மனிதர்களால் முழுமையான வாழ்க்கையை வாழ முடியும். பிரபஞ்ச சக்திக்கு எதிராக செயல்பட்டால் தெய்வசக்தி செயல்பட முடியாமல் போகும். இதனால் எதிர்மறை சக்தியே செயல்படும். மனிதர்களுக்கு துன்பமே ஏற்படும். 

Saturday, 3 January 2015

வரலாறு முக்கியம் அமைச்சரே

மன்னர்கள் தங்கள் தற்பெருமையை பறைசாற்ற தான் பல கோயில்களை கட்டினார்கள். பல புதிய சம்பிரதாயங்களையும் உருவாக்கினார்கள்.
ராஜராஜ சோழனின் பெரிய கோவிலும் இதில் அடங்கும்.
திருமலை நாயக்க மன்னன் மீனாட்சி திருக்கல்யாண தேதியை மாற்றியதும் இதில் அடங்கும்.

மந்திரங்கள் ஆபத்தானவை

மந்திரங்கள் சக்தி படைத்தவை.
அளவுக்கு அதிகமான நன்மையை தருபவை.
ஆனால் அதன் பிரயோக முறை 100% தெரிந்தால் மட்டுமே.
தற்போது இருக்கும் ஒருவருக்கு கூட பிரயோக முறை 100% தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
சித்தர்கள் காலத்தில் இருந்த எழுத்துருவம் வேறானது. தற்போது இருக்கும் எழுத்துருவம் வேறானது.
சித்தர்கள் தங்களுக்கு தெரிந்ததில் சிறு பகுதியை தான் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். மீதியை நமக்கு தெரியக்கூடாது என்று மறைத்தே விட்டார்கள். மந்திரங்கள் மட்டுமல்ல, பிரயோகத்தின் போது செய்ய வேண்டிய செயல்களையும் தான்.
அவற்றிலும் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில் அழிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை நமக்கு கிடைக்காமலேயே அழிந்து போயிருக்கின்றன.
சித்தர்கள் தந்த மந்திரங்களில் மொழிபெயர்ப்புகளில் தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்பிருக்கிறது.
ஒரு எழுத்து தவறாக உச்சரித்தாலோ அல்லது மந்திர பிரயோகத்தின் போது செய்ய வேண்டிய விசயங்களை 100% செய்யாமல் விட்டாலோ ஆபத்தான நிகழ்வுகளே உண்டாகும்.
இது தெரியாமல் நம்மில் பலரும் புத்தகத்தில் இருக்கும் மந்திரங்களை சர்வ சாதாரணமாக சொல்கிறோம்.
மேலும் உதாரணமாக நாம் பூக்கள் அல்லது தேங்காய் வாங்காமல் விட்டு விட்டாலோ வேறொருவர் வாங்கி கொடுத்த பொருட்களில் நம்மை தொட சொல்லி இது போன்ற மற்றும் பல ஏராளமான சமாளிப்பு வேலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இது போல பல தவறுகள் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன.
மேலும் மந்திரங்களை அழிவிற்கு பயன்படுத்தினால் பிரயோகித்தவர்களுக்கும் எதிர்மறை அழிவை தரும்.
எகிப்து சாம்ராஜ்ய அழிவிற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதுகிறேன்.
அரைகுறையான மந்திர பிரயோகத்தினால்தான் சமஸ்கிருத மொழியும் அழிந்ததாக கருதுகிறேன்.
சித்தர்கள் காலத்தில் இருந்த எழுத்துருக்களை நாம் பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து.

சொர்க்கம் செல்லும் வாய்ப்பு

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பதை பார்த்து எந்த ஒரு கவர்ச்சி நடிகை தேர்ந்தெடுக்கும் குலுக்க்க்க்கல் போட்டியிலும் பங்கேற்காமலேயே சொர்க்கம் செல்லும் நேரடி வாய்ப்பை பெற்ற உலக மகா அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நல்லபடியாக சொர்க்கத்துக்கு போங்க.
டா டா.....  பை பை.......

கோவில் Vs குடும்பம்

எப்படி கோவிலில் குடும்பம் நடத்த கூடாதோ, அப்படியே குடும்பம் நடத்தும் இடத்திற்கு அதாவது வீட்டிற்கு கோவிலை கொண்டு வரவும் கூடாது.
நம்மில் பலரும், கோவிலில் இருப்பது போலவே சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டிலும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது தான் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது ஆயுளை குறைக்கவே செய்யும்.

Friday, 2 January 2015

பெண்கள்

பெண்கள் போக பொருளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று பல பெண்கள் கோபப்படுகிறார்கள்.
பல கோவில் கோபுரங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது போன்ற சிலைகள் இருக்கின்றன. மேலும் பல கோபுரங்களில் உடலுறவு காட்சிகள் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கின்றன.
மேற்படி கோபப்படும் பெண்கள் ஒன்று சேர்ந்து இது போன்ற கோபுரங்களை எல்லாம் உடைத்து தகர்த்தெறிந்து விடலாமே?
இது போல் கோபப்படும் பெண்களிடம் மட்டுமே ஒரு கேள்வி கேட்கிறேன்.
பெண்களை போக பொருளாக நினைத்து பல பெண்களோடு கில்மா மேட்டரில் ஈடுபட்ட கிருஷ்ணனை என்ன மசுருக்குடி கும்பிடுறீங்க?

Thursday, 1 January 2015

தனிமை

தனிமை கொடூரமானது.

நித்யானந்தா cd

சுவாமிஜி உங்க சிடியை நக்கீரன் பத்திரிகைகாரனுங்க மட்டும் முழுசா எல்லாத்தையும் பார்த்துட்டு எங்ககிட்ட ஒண்ணுமே காட்டல. வெறும் போஸ்டரைக் காட்டி ஏமாத்திட்டானுங்க.
உங்களை பிளாக் மெயில் பண்றதுக்காக உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பிருப்பானுவளே! அதை குடுத்தீங்கன்னா நானும் முழுசா பார்த்துக்குவேன். உங்களுக்கு வேண்டாம்னா ரஞ்சி ஞாபகமா நானே வச்சுக்குவேன்.