Tuesday, 30 December 2014

முஸ்லீம்கள் கெட்டவர்களா?

கொலைகாரர்கள் எல்லா மதத்திலுமே இருக்கிறார்கள். ஏன் இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக காட்டுகிறீர்கள்?
ராஜபக்சே முஸ்லீமா?
அவனுக்கு திட்டம் போட்டு கொடுத்த சோனியா காந்தி முஸ்லீமா?
நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் முஸ்லீமா?
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்ட ஜெனரல் டயர் முஸ்லீமா?
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போட்டவனும், அதற்கு உத்தரவு போட்டவனும் முஸ்லீமா?
ஹிட்லர் முஸ்லீமா?
இப்படி பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் கொலைகாரர்கள் எல்லா மதத்திலுமே இருக்கிறார்கள்.
முஸ்லீம்கள் மட்டுமே கெட்டவர்கள் என்று சொல்லாதீர்கள்.

தவறு என்பது தனிமனிதனின் மனதில் தான் இருக்கிறது. மதத்தோடு அதை தொடர்பு படுத்தாதீர்கள்.

கற்கள்

பட்டை தீட்டப்பட்ட கற்களை (ராசிக்கல்லாக இருந்தாலும் சரி அல்லது A.D. கல்லாக இருந்தாலும் சரி) ஆபரணமாக அணிந்திருந்தாலும் அல்லது வெறுமனே பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.  இதனால் ஆரோக்கிய குறைவும்,  ஆயுள் குறைவும் ஏற்படும்.

Monday, 29 December 2014

ஜாதக கட்டம்

சூரிய குடும்பத்தில் இல்லாத ராகு, கேதுவை சேர்த்திருக்கீங்களே! சூரிய குடும்பத்தில் இருக்கும் பூமியை ஏண்டா சேர்க்காம விட்டீங்க? அது என்னடா பாவம் பண்ணுச்சு?

சாத்தான்

சாத்தான் வேதம் ஓதுவதை நேற்று தந்தி டிவியில் காட்டினானுங்க.
"ராஜபக்சேவின் தேர்தல் பிரச்சாரம்."

இன்று ராஜபக்சேவின் பேட்டியாம்.
ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடிக்குறானுங்களா தந்தி டிவிகாரனுங்க???????

Sunday, 28 December 2014

மலட்டு தெய்வங்கள்

குழந்தை பேறு அடையாத வள்ளி, தெய்வானை, லெட்சுமி போன்றவர்களை கடவுளாக நினைத்து அவர்களுக்கு வீட்டின் பூஜை அறைக்குள் முக்கிய இடம் கொடுக்கும் இந்த சமூகம்,  குழந்தை பேறு அடையாத பெண்களை மலடி என்று சொல்லி சுபநிகழ்ச்சிகளில் ஒதுக்குகிறது.
என்னாங்கடி உங்க லாஜிக்கு?
இவர்கள் மலடி என்றால் வள்ளி, தெய்வானை, லெட்சுமியும் மலடிகள் தான்.

Saturday, 27 December 2014

சொர்க்கம்

தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்குவது சொர்க்கம்.

அருவி & ஷாம்பூ

1996 முதல் 2014 வரை ராமேசுவரம் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். திருச்செந்தூர் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். 2003ல் ஒரு ஜோசியர் மூலமாக பரிகாரம் செய்வதற்காக நவகிரக கோயில்கள் மற்றும் அதை சுற்றி இருக்கும் பல கோயில்களுக்கு சென்ற போது அங்கிருந்த பல கோயில் குளங்களில் (திருநள்ளாறு சனி தீர்த்தம் உட்பட) குளித்திருக்கிறேன்.  தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குளித்தது என் வாழ்வில் மரண போராட்டங்களையே தந்திருக்கின்றன.
எனவே இந்த பிரச்சினை நீங்க இப்போது குற்றாலம், குட்லாடம்பட்டி, சுருளி போன்ற அருவிகளில் குளித்தேன்.
என்னை தவிர எல்லோருமே ஷாம்பூ தேய்த்து தான் குளித்தார்கள். நீரை மாசுபடுத்தும் இந்த ரசாயனம் கலந்த ஷாம்பூவை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ஷாம்பூ தேய்த்து குளிப்பது என்ன பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கு அந்நியன் பாணியில் தான் நான் கேள்வி கேட்க முடியும்.
5 பைசா திருடினா தப்பா? இல்லையா?

Friday, 26 December 2014

தூக்கமின்மை

தேவைக்கு அதிகமான அல்லது அளவுக்கதிகமான சக்தி வாய்ந்த பொருட்களை தவறான இடத்தில்  வைத்திருந்தாலும் இரவில் நன்றாக தூங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
இது ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.  உச்ச கட்ட பிரச்சினையாக ஆயுள் குறைவை ஏற்படுத்தும்.
அப்படிப்பட்ட பொருட்களை சரியான இடத்தில் தான் வைக்க வேண்டும் அலல்து  வீட்டில் வைத்திருக்காமல் இருப்பதே நல்லது.

Thursday, 25 December 2014

திருப்பதி

இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலத்தில் இருக்கும் பெண்களையும் ஒரே இடத்தில் கூடி சைட் அடிக்கும் வாய்ப்பு திருப்பதியில் மட்டுமே கிடைக்கும்.
டேய் வெங்கடாஜலபதி உனக்கு முக்கியமான இடத்தில் மச்சம் நிறைய இருக்காடா?

Sunday, 21 December 2014

சிவலோக பதவி

மனிதனின் மரணம் தரும் வலியிலும் கூட சிலர் சிவலோக பதவி அடைந்தார் என்று போஸ்டர் அடிக்கிறார்கள்.
சிவலோக பதவி என்ன கவர்னர் பதவியா? பிரதமர் பதவியா? முதல்வர் பதவியா? எல்லோருக்கும் என்ன பதவியா அந்த சிவன் கொடுக்கிறான்?

வலியை தானே கொடுக்கிறான்.

மரணத்தின் வலியும் கொடியது. மரணத்தின் மூலம் ஏற்படும் உறவின் இழப்பிலும் வலி கொடியது.

இந்த வலியிலும் கூட கடவுளை நட்டமாக தூக்கி நிப்பாட்ட முயற்ச்சிக்கிறார்கள் சிலர்.

Thursday, 18 December 2014

microwave oven

microwave oven இல் சமைத்து உண்டால் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். காரணம் அதில் கதிரியக்கத்தின் மூலம் உணவு சூடாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

Wednesday, 17 December 2014

தீவிரவாதம்

வெடி மருந்து, ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டி தங்கள் பணப்பெட்டியை நிரப்பிக்கொள்கிறார்கள். அவர்களை அழித்து விட்டால் தீவிரவாதத்தையும் அழித்து விட முடியும்.

கடல், குளம் Vs ஆறு, அருவி

தேங்கிய நிலையில் இருக்கும் நீர் நிலைகளான கடல்(திருச்செந்தூர்,  ராமேசுவரம் உட்பட),  குளம் (கோவில் குளம் உட்பட) போன்றவற்றில் குளிப்பது தேக்கமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்துகிறது.
கடல் உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக விளங்குகிறது.
ஓரிடத்தில் உருவாகி வேறோர் இடத்தை நோக்கி பயணம் செய்யும் ஆறு, அருவி போன்றவற்றில் குளிப்பது வாழ்வை வளப்படுத்தும்.

Sunday, 14 December 2014

விதி மதி

விதியை மதியால் வென்று விட முடியுமென்றால் கடவுள் என்ற வார்த்தை கூட மனிதனுக்கு தேவைப்படாது.

Saturday, 13 December 2014

சொர்க வாசல்

பெருமாள் கோயில்களில் சொர்க வாசலில் கடவுள் சொர்க்கத்திற்கு மனிதர்களை அழைத்து செல்ல பிளாக்கில் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கிறார்.
500 ரூபாய் டிக்கெட் 1000 ரூபாய்.
1000 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய்.
5000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.
ஓடியா!  ஓடியா!  ஓடியா! 

எதற்கு?

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விதியின் படியே மனித வாழ்க்கை பயணப்படுகிறது என்றால்,  அதை மீறி எதுவும் நடக்காது என்றால் பின் எதற்காக கடவுளை வணங்க வேண்டும்?

வேப்ப மரத்து ஆத்தாக்கள்

வேப்ப மரத்தில் ஜிகு ஜிகு பாவாடை துணியை கட்டி அம்மனாக நினைத்து வழிபடுவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த வேப்பமரம் இருக்கும் பாதை வழியாக இறந்த என் அம்மாவின் உடலை கொண்டு போகக்கூடாதுன்னு சொல்றீங்களேடா!

அந்த பாதை வழியாக என் அம்மாவின் உடலை கொண்டு சென்றால் அந்த மரத்தில் இருக்கும் காளியாத்தா, மாரியாத்தா, முப்பாத்தா எல்லா ஆத்தாக்களுக்கும் மாரடைப்பு வந்து செத்து போயிருவாய்ங்களாடா??????????????????????

போங்கடா நீங்களும் உங்க ஆத்தாவும்

நவகிரக கோயில்கள்

நவகிரக கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் பரதேசிகளை எல்லாம் பார்த்து விட்டு வந்த பிறகு எனக்கு எந்த நன்மையும் நடந்து விடவில்லை.
மரண போராட்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.

Friday, 12 December 2014

திருநள்ளாறு

திருநள்ளாறு சென்று விட்டு வந்தால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று சொன்னதை நம்பி இரண்டு முறை அந்த பரதேசியை சென்று பார்த்திருக்கிறேன்.
ஆனால் இரண்டு உயிர்களை இழந்திருக்கிறேன்.
2009 ல் என் அப்பா.
இப்போது என் அம்மா.
இரண்டு முறை - இரண்டு உயிர்.

Sunday, 7 December 2014

பணம்

பணத்தை உருவாக்கியது மனிதன் தான். கடவுள் அல்ல.
எனவே பணம் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். கடவுளின் கட்டுப்பாட்டில் அல்ல.
Tanya desigan அவர்கள் பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்விக்கு என்னுடைய முழுமையான பதில் இதுதான்.

சரியான முறை

வீட்டில் சாமி படம், யந்திரங்களை வைக்கும் போது ஏதாவது ஒரு திசை நோக்கி மட்டுமே வைக்க வேண்டும். இரு வேறு திசை நோக்கி வைப்பது சரியல்ல.

அவ்வாறு வைப்பது இரு வேறு மாறுபட்ட சூழ்நிலைகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தி குழப்பமான மன நிலையை அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதே போல் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறையில் மட்டுமே சாமி படங்களை வைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளிலோ அல்லது ஒவ்வொரு அறையிலுமோ சாமி படம், யந்திரங்களை வைக்க கூடாது.

Saturday, 6 December 2014

ராஜபக்சே

திருப்பதி கோயிலுக்கு வருகை தரும் ராஜபக்சேவிற்கு ஒரு டாக்டர் பட்டத்தையும், சர் பட்டத்தையும் கொடுத்தால், அடிமாடுகளாகவும், இந்தியனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் எல்லோரும் அந்த மகானை சர் டாக்டர் ராஜபக்சே என்று சொல்லுவோம்.  விழாவிற்கு கருணாநிதி தான் தலைமை தாங்க வேண்டும். (நான் ஏட்டையா கூட தான் கோர்ட்டுக்கு போவேன்)

வரலாறு முக்கியம் அமைச்சரே!

இப்போது இருக்கும் ஐ.நா சபைக்கே ராஜபக்சேவை தண்டிக்க வக்கில்லை. அப்புறம் என்ன மசுருக்கு ஐ.நா சபை இருக்குன்னு எனக்கு தெரியவில்லை.

ராஜபக்சே ஒருவேளை அமெரிக்காவோடு யுத்தம் நடத்தி இருந்தால் உடனே உலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி கொன்றிருப்பார்கள்.
ஆனால் ராஜபக்சே கொன்றது அடிமாடுகளான தமிழர்களை தானே.

ராஜபக்சே ஒருவேளை மலையாளிகளை கொன்றிருந்தால் எங்கள் மன்மோகன்சிங் மைக்கை புடுச்சு ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு மணி நேரம் வீரவசனம் பேசி இருப்பார். அடிமாடுகளான தமிழர்களை கொன்றதால் தான் center fresh சாப்பிட்டு வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு பொத்திக்கொண்டு இருந்துட்டார்.

இந்தியாவிலேயே தமிழனை தமிழனாக வாழாதே இந்தியனாக வாழு என்று மத்திய அரசு சொல்கிறது.
சிலோனில் மட்டும் தமிழன் தமிழனாக வாழ்ந்து விட முடியுமா என்ன?

Thursday, 4 December 2014

குஷ்பூ

கல்லூரி காலத்தில் (93-96) குஷ்பூவின் ரசிகனாக இருந்தேன். புத்தகம், நோட்டு, பர்ஸ், கால்குலேட்டர் உள்பட  எல்லாவற்றிலும் குஷ்பூவின் படங்கள் வைத்திருப்பேன். அதுபோக பத்திரிகைகளில் வரும் குஷ்பூவின் படங்களை வெட்டி சேகரித்து வைத்திருப்பேன்.
அதற்கு பிறகு ஸ்னேகாவின் ரசிகனானேன்.
தமிழர்களை கொல்ல திட்டம் போட்டு கொடுத்து அதற்கு உதவியும் செய்த காங்கிரஸில் குஷ்பூ சேர்ந்திருப்பது பிடிக்கவில்லை.
நாட்டில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது குஷ்பூ காங்கிரஸில் சேர்ந்ததை ஒரு முக்கியமான விசயம் என்று பேட்டி எடுக்க பத்திரிகைகாரனுங்களும்,  டீவிகாரனுங்களும் பின்னாடியே அலையிறானுங்க. 
நேருவும், காமராஜரும் இப்போது உயிரோடு இருந்தால் குஷ்பூவை வைத்து ஓட்டு கேட்கும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டதை நினைத்து கதறி அழுவார்கள்.

Wednesday, 3 December 2014

பருத்தி வீரன் டக்ளஸும் நானும்

ஏன்டா இன்னைக்கு மாடு வாங்குவ, நாளைக்கு வயலை வாங்கி, வீட்டைக் கட்டி பிரசிடெண்ட் ஆகிருவ, அப்புறம் எலெக்சன் வரும்,  எம்எல்ஏ ஆகி, மந்திரி ஆகி, சிஎம் ஆகிருவ, நீ கார்ல டாட்டா காட்டிகிட்டு போவ, நாங்க உனக்கு போஸ்டர் ஒட்டணும்.

நான் உங்கிட்ட மாடு தானய்யா வாங்கப் போறேன்னு சொன்னேன். அதுக்கு என்னைய போஸ்ட்டர் லெவலுக்கு கொண்டு வந்துட்ட. இப்ப உனக்கு என்ன வேணும்?

தினம் தினம் பல செவ்வாழைகளை நிஜ வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதாயிருக்கு.