Sunday, 30 November 2014

பட்டுபுடவை

நாங்கள் பட்டுபுடவை கட்டும் போது பட்டு பூச்சிகள் யாவும் மோட்சம் பெறும் என்று பெண்கள் பாடுகிறார்கள் மதுரையில் பிரபலமான ரா என்று ஆரம்பிக்கும் பட்டு ஜவுளி கடை விளம்பரத்தில்.

அப்படி என்றால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் எல்லா வீட்டிலும் கோழிக்கறி, ஆட்டுக் கறி, மீன் என்று வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்களே! அந்த கோழிகள், ஆடுகள்,  மீன்கள் எல்லாம் மோட்சம் பெறுமா?
பட்டு புழுக்களை கொன்று பட்டுபுடவை தயாரித்து விட்டு, பட்டு பூச்சி மோட்சம் பெறுதாம்ல.

சோதித்தல்

வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது,  கடவுள் நம் நல்ல எண்ணங்களையும்,  நல்ல செயல்களையும் பின்பற்றுகிறோமா? என்று சோதிப்பதாக சொல்றாய்ங்க.
ங்கொய்யால சோதிச்சி பார்க்க நாங்க என்ன சோதனைச்சாலையில் இருக்கும் எலியா? குரங்கா? என்ன மசுருக்குடா சோதிக்கிற?

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

யாரைத் தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்ற வரத்தை சிவன் அளிக்க, வரம் பெற்றவன் சிவனையே தொட நினைக்க, சிவனோ அலறி ஓட, பெருமாள் பெண்ணுருவில் வந்து சிவனை காப்பாற்றுகிறான்.
(பெண்ணுருவில் வந்திருப்பது பெருமாள் என்று கடவுளான சிவனுக்கு தெரியவேயில்லை. அப்புறம் எப்படி நம் கஷ்டங்கள் சிவனுக்கு தெரியும்? நம் கஷ்டங்களை அவன் தீர்த்து வைப்பான்)
அந்த பெண்ணின் முன்னழகு, பின்னழகு, மார்பழகு, இடுப்பழகு மற்றும் எல்லா அழகையும் பார்த்த சிவனுக்கு பயங்கரமாக மூடாகி விட்டது. அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்டு ஐயப்பன் பிறக்கிறார்.
ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்ட சிவன் வியப்பின் சரித்திர குறியீடு.

Saturday, 29 November 2014

Low Bp, high Bp

Low Bp, high Bp இந்த இரண்டையும் சின் முத்திரையின் மூலம் சரி செய்ய முடியும்.

காகம்

உடலில் எதிர்மறை சக்தி ஓட்டம் குறிப்பிட்ட அளவை தாண்டும் போது கனவில் காகம் வரும்.
கனவில் காகம் வந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும்.
உடலில் எதிர்மறை சக்தி ஓட்டத்தை தடுத்து நேர்மறை சக்தி ஓட்டமாக மாற்றினால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும். நேர்மறை சக்தி ஓட்டம் ஏற்பட்ட பிறகு கனவில் காகம் வராது.
சின்முத்திரையின் மூலம் இது சாத்தியமாகும்.

கோபுரம்

எதிர்மறை சக்தி இருக்கும் இடத்தில் புறாக்கள் இருக்கும்.
எதிர்மறை சக்தி குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதிகரிக்கும் போது வௌவால்கள் அங்கு வரும்.
கோபுரம் இருக்கும் இடங்களில் எல்லாம் புறாக்கள் இருக்கும்.
கோபுரம் எதிர்மறை சக்தி தரும் தன்மை கொண்டது.

Friday, 28 November 2014

சொர்க வாசல்

பெருமாள் கோவில்களில் சொர்க வாசல் திறப்பதை பார்த்தால் directஆ சொர்க்கத்துக்கு போயிடலாம்னு சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்கே.
ராஜபக்சேவை கூட்டிட்டு வந்து சொர்க வாசல் திறப்பதை பார்க்க வைத்தால் அவனையும் சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போயிடுவாரா உங்க கடவுள்?
கோயிலுக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகவும், உண்டியலில் பணம் அதிகரிக்கவும் புரளிய பரப்பாதீங்கடா!

கிருஷ்ணன்

பல பெண்களோடு கில்மா மேட்டரில் ஈடுபட்டிருந்தாலும் அப்பா என்றழைக்க ஒரு பிள்ளை கூட கிருஷ்ணனுக்கு இல்லை.
கிருஷ்ணன் condom use  பண்ணி இருந்திருப்பான் போலிருக்கு.

Tuesday, 25 November 2014

கோபுர தரிசனம்


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஒரு தவறான கருத்து என்பது என் கருத்து.

1000, 2000, 3000, 4000, 5000 என்று காலங்கள் பின்னோக்கி செல்ல செல்ல கோவில்களில் கோபுரங்களே இல்லை என்பது என் கருத்து. எல்லா தெய்வ சிலைகளும் மரத்தின் அடியிலேயே இருந்தன என்பது என் கருத்து.


Wednesday, 19 November 2014

from facebook

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true so Can we avoid
நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

நண்பர்களே (முக்கியம்)
படித்துவிட்டு பகிருங்கள் (via Balaji Palani)

Tuesday, 18 November 2014

வைகை ஆறு

மீனாட்சியின் திருமண விருந்தை உண்ட குண்டோதரன் தாகம் தீர கை வை என்று சிவன் கூற வைகை உண்டானதாக கதை கூறுகிறது.
ஆனால் வைகை ஆறு மதுரையில் ஊற்றெடுக்கவில்லை. மதுரையை கடந்து தான் செல்கிறது.
மதுரைக்கு வெகுதொலைவில் தான் ஊற்றெடுக்கிறது.
அப்படியென்றால் மீனாட்சியின் திருமண விருந்து மதுரையில் நடக்கவில்லை என்று தானே அர்த்தம்.
தற்போது வைகை எங்கே ஊற்றெடுக்கிறதோ அங்கே தானே விருந்து நடைபெற்றதாக அர்த்தம்.

Saturday, 15 November 2014

1 யூனிட்க்கு 5 ரூபாய்

சென்ற மாதம் வாடகை வீடு தேடி அலைந்தேன்.
செல்லூர் முல்லை நகரில் ஒரு வீட்டில் 1 யூனிட்டுக்கு 5 ரூபாய் தரவேண்டும் என்றார்கள்.
அரசாங்கம் வசூலிக்கும் கட்டணத்தை விட அதிகமாக பல வீட்டுக்காரர்கள் தனியாக வசூலிக்கிறார்கள்.
இதை தடுக்க யாருமே இல்லையா?

Tiles, marble, granite

டைல்ஸ், மார்பிள், கிரானைட் எதிர்மறை சக்தி தரும்.

Wednesday, 5 November 2014

என் பதிவுகள்

என் பதிவுகளில் 95% என் அனுபவத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன்(மரண போராட்டம் உட்பட).
5% கருத்துகள் பிறர் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்து நம்பகதன்மையின் அடிப்படையில் எழுதுகிறன்.
எனவே என் பதிவுகளில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் சில கருத்துக்களை திருத்தி மாற்றி எழுதுவேன். நண்பர்கள் இதை புரிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் முன்னோர்கள் சொன்ன பல கருத்துக்களும், காட்டிய பல வழிகளும் தவறானதாக இருப்பதால் தான் இந்த சிக்கல் எனக்கு ஏற்படுகிறது.
என் வலைப்பதிவின் நோக்கம் தீயசக்திகளும்,  அதை ஏவுபவர்களும் அழிய வேண்டும் என்பது தான்.
நான் பட்ட கஷ்டங்களை நல்வர்கள் யாருமே கஷ்டப்படக்கூடாது என்பது தான்.
என் தனிப்படட வாழ்க்கையில் சாரசரி மனிதர்களுக்கே உரிய அனைத்து சராசரி உணர்ச்சிகளும் கொண்ட சராசரி மனிதன் நான்.

சரியான வழிகாட்டுதலை நம் முன்னோர்களுக்கு கடவுள் தராததால் தான் கடவுள் மீது அதிகமாக கோபத்தை என் பதிவுகளில் காட்டுகிறேன்.

Monday, 3 November 2014

கை தவறி

கோவிலில் வாங்கிய திருநீறோ அல்லது குங்குமமோ அல்லது வேறு ஏதாவது பொருளோ கை தவறி கீழே சிந்திவிட்டால் அதை மீண்டும் எடுத்து பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் ஆயுள் குறையும் அல்லது விபத்து ஏற்படலாம்.
கை தவறி கீழே விழுந்ததை அபசகுனம் என்று கருதாமல் வேறு திருநீறு, குங்குமம் வாங்கி பயன்படுத்தலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது.

Sunday, 2 November 2014

மனோதத்துவம்

சமூக வலைதளங்களில் பலர் நடிகர்களை ஓட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வேறு ஓரு நடிகரின் ரசிகர்களாக இருப்பது தான்.
ஆனால் மனோதத்துவ காரணம் இன்னொன்றும் இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு அவள் காதலனோ அல்லது கணவனோ வேறு ஒரு பெண்ணை ரசிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் எந்த ஒரு ஆணாலும் அவன் காதலியோ அல்லது மனைவியோ வேறு ஒரு ஆணை ரசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

Saturday, 1 November 2014

Tv பொட்டியில் கடவுள்

தொலைக்காட்சியில் கோயில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அல்லது வேறு நிகழ்ச்சியில் சாமி படத்தை காட்டி விட்டால் பலர் தங்கள் கன்னத்தில் போட்டு, கையை தூக்கி வணங்கி, தலையில் குட்டி, உக்கி போட்டு, டிவி பொட்டியை சுற்றி அங்கபிரதட்சனம் செய்து வணங்குகிறார்கள்.
உங்க பக்தி உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
புள்ளையாரப்பா! புள்ளையாரப்பா! எனக்கு ஒரு பிகரை செட் பண்ணிவுடு புள்ளையாரப்பா!
என்னது! புள்ளையாரை கும்பிட்டுக்கிட்டு இருக்கும் போது பொண்ணுங்க டூபீஸ்ல வாராங்க?
சேனலை பேஷன் டிவிக்கு மாத்திட்டீங்களாடா?