Monday 9 June 2014

சைவம் >அசைவம்.

உலகில் உள்ள அசையும் உயிரினங்களுக்கெல்லாம் எதிரிகளால் தமக்கு ஆபத்து ஏற்படுமோ, அதை எப்படி எதிர்கொள்வது என்ற மரண பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 

இந்த உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கும் இதே மனநிலை இந்த உயிரினங்களை உட்கொள்வதன் மூலம் அதிகம் பரவுகிறது. அதனால் தான் மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளவும், பிறரை அழிக்கவும் பல வழிகளை கையாள்கிறான்.

உலகில் அதிக அளவில் மாமிச உணவு  உண்பவர்களுக்கு இந்த பய உணர்வு அதிகம். அதனால் தான் அமெரிக்கா எல்லா நாடுகளையும் வேவு பார்க்கிறது. உலகை ஆள நினைக்கிறது. சீனா உலக நாடுகளை அடக்க நினைக்கிறது. பல நாடுகளில் தீவிரவாதம் பரவி இருக்கிறது. 

ஆனால் தாவரங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றிற்கு இந்த எண்ணங்கள் இல்லை. அல்லது ஒருவேளை மரங்களுக்கும், தாவரங்களுக்கும்  எண்ணங்கள் இருந்தால் அவை விலங்குகளை விட பல ஆயிரம் மடங்கு குறைவாகவே மரண பயம் இருக்கும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த  பய உணர்வு குறைவு என்பது என் கருத்து. பய உணர்வு இருக்காது என்று சொல்ல முடியாது. அசைவம் சாப்பிடுவோர்களோடு ஒப்பிடும் போது அது மிக குறைவாக இருக்கும்.

மனிதர்களின் வாழ்வியல் சூழ்நிலை மற்றும் பல காரணிகளை பொறுத்து இதில் வேறுபாடு இருக்கும்.


No comments:

Post a Comment