Monday 9 June 2014

பழனி.

கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றும் திருடர்கள் அளவுக்கு அதிகமாக  இருப்பது பழனி மட்டுமே.

அங்கே கோவிலை சுற்றி இருக்கும் சில கடைகளில் தெரியாமல் பூஜைக்கு சாமான் வாங்கினால், 
பூ 5ரூபாய்,
புஸ்பம் 5 ரூபாய்,
சூடம் 10 ரூபாய்,
கற்பூரம் 10 ரூபாய், 
திருநீறு 10 ரூபாய்,
விபூதி 10 ரூபாய் என்று ஏமாற்றி விடுவார்கள்.

இதை விட கொடுமை மலையில் கோவில் சந்நிதானத்தை சுற்றி பூசாரி போல் வேடமிட்டு திரியும் திருடர்கள்.
10 வருடங்களுக்கு முன் என் தந்தைக்கு வேண்டுதல் நிறைவேற்ற பழனி முருகனுக்கு பால் அபிசேகம் செய்ய சென்றிருந்தோம். அங்கே கோவில் சன்னிதானத்திற்கு உள்ளே நுழையும் முன் ஒருவன் வந்து அபிஷேக சாமான் வைத்திருப்பவர்கள் அந்தந்த பொருளை கொடுங்கள், உள்ளே வந்து அபிஷேகம் செய்ததை பிரசாதமாக வாங்கி கொள்ளுங்கள் என்றான். அங்கே இருந்த பலரும் அவரவரர் கொண்டு வந்தததை கொடுத்தார்கள். நாங்களும் பாலை கொடுத்தோம். பணமும் வாங்கி கொண்டான்.

உள்ளே சன்னிதானத்திற்கு அருகில் சென்றவுடன் அங்கே இருந்தவர்களிடம் பால் அபிஷேகம் செய்ய கொடுத்தோமே என்றோம். அவர்கள் சொன்னது "திருடனை நம்பி ஏன் கொடுக்கிறீர்கள்" என்று.

வெளியே வந்த போது அந்த திருடன் பாலுடன் நின்றுகொண்டு இருந்தான், அபிஷேகம் செய்த பால்  என்று கூறி அந்த பாலில் திருநீறையும், அரளி பூவையும் போட்டு கொடுத்தான். அவனை திட்டி விட்டு வந்தேன்.

தற்போதும்  இது போன்ற திருடர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment