Monday, 30 June 2014

குடும்ப அரசியல், வாரிசு அரசியல்.

குடும்ப அரசியல்,  வாரிசு அரசியல் என்பதெல்லாம் கடவுள்களிடமிருந்து வந்தவை தான்.

சிவன், அவன் பொண்டாட்டி பார்வதி, அவன் மகன்கள் பிள்ளையார், முருகன்,  சிவனின் மச்சினன் பெருமாள்,  இவன் பொண்டாட்டி லட்சுமி இவனுங்களை தவிர வேறு யாரும் பெரிய கடவுளாக முடியாது. மற்ற எல்லா கடவுள்களும் இவனுங்களுக்கு கீழ் தான்.

வேறு யாராவது கடவுளாக வேண்டும் என்று முயற்ச்சித்தால், அவர்களை அரக்கர்கள் என்று முத்திரை குத்தி கொன்று விடுவது இவனுங்க வழக்கம்.

இதே போன்ற முறையை தான் வல்லரசு நாடுகளும், பல நாட்டு அரசியல்வாதிகளும் பின்பற்றுகிறார்கள்.

விதி.

அவனவன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் அப்புறம் என்ன மசுருக்குடா சாமிய கும்பிடணும்?

கல்யாணம்.

சொக்கனும், மீனாட்சியும் புருஷன் பொண்டாட்டி என்பது உலகத்துக்கே தெரிந்த விசயம். அப்புறம் என்ன மசுருக்குடா நீங்க ரெண்டு பேரும் வருசா வருசம் கல்யாணம் பண்ணிக்கிறீங்க?

Sunday, 29 June 2014

ஆண்டவா

ஆண்டவனை பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்பறம் கேள்வி கேட்கணும்
ங்கொய்யால
என்ன மசுருக்குடா என்னை
இந்த உலகத்துல படைச்ச?

ஆபாசம்.

ஆபாசம் என்பது அணியும் ஆடையில் இல்லை. பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது. ஆம் பெண்ணிணமே இது 100% உண்மை. உங்களுக்காகவே ஆபாசம் இல்லாத பிரத்யேகமான உடையை தருகிறோம்.

அதுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக நாங்கள் அறிமுகப்படுத்தும் கழுதை பிராண்ட் பிக்னி உடை.

கழுதை பிராண்ட் பிக்னி உடையில் ஆபாசம் கொஞ்சமும் கிடையாது. 

மென்மையானது, மிருதுவானது கழுதை பிராண்ட் பிக்னி உடை.

கழுதை பிராண்ட் பிக்னி உடை ஆபாசம் அற்றது, கவர்ச்சி அற்றது என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சான்றிதழ் அளித்துள்ளது. இந்தியாவின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை பிக்னி உடை தான் என்பதையும் அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

பிக்னி உடை அணியும் போது நீங்கள் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். பிக்னி உடை அணியும் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

பிக்னி உடை அணிந்து கொண்டு உங்கள் வழங்கமான எல்லா வேலைகளையும் நீங்கள் செய்யலாம்.

பிக்னி உடை அணிந்து நீங்கள் வெளியே செல்லும்போது உங்களை ஆண்கள் யாராவது கேலி செய்தால் அவர்கள் மீது ஈவ் டீசிங் கேஸ் போடப்பட்டு கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். பெண்ணிணத்திற்கு பாதுகாப்பு வழங்கும்.

இந்த பிக்னி உடை அணிந்து நீங்கள் வெளியே செல்லும்போது உங்களை யாராவது கற்பழிக்க முயற்ச்சித்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தும்.

ஆபாசம் இல்லாத, கவர்ச்சி இல்லாத கழுதை பிராண்ட் பிக்னி உடையை இன்றே வாங்கி அணியுங்கள்.

குறிப்பு-ஒழுக்கமாக, கண்ணியமாக உடை அணியும் எந்த ஒரு பெண்ணையும் நான் இங்கு குறிப்பிடவில்லை.

ஆபாசம் என்பது அணியும் ஆடையில் இல்லை,  பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது என்று கூறிக்கொண்டு, இலவசமாக திவ்ய தரிசனம் தரும் அழகு தேவதைகளைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

Wednesday, 25 June 2014

ரத்தம்.

இயசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.
அவர் இரத்தத்தை 2014 வருசமாவாடா வச்சுக்கிட்டு இருக்கீங்க?
சரி சரி எனக்கு ஒரு கால் லிட்டர் இயேசுவோட ரத்தம் குடுங்கடா! என்னோட பாவத்தை நீக்கி சுத்திகரிச்சுக்கிறேன்.

Tuesday, 24 June 2014

மதமாற்றம்

கிறிஸ்தவனாக மதம் மாறினால் பணம் தருவார்கள் என்று சொல்கிறார்கள். 10லட்சம் கொடுத்தால் மதம் மாறலாம். கடன் பிரச்சனை தான்.
இயேசுவை பற்றி பேசி மதமாற்றம் செய்ய வைப்பவர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வருவதாக சொல்கிறார்கள்.
சிலுவையில் அறையப்பட்ட போது தன்னையே காப்பாற்றிக் கொள்ள தெரியாத இயசுவா மக்களை எல்லாம் காப்பாற்ற போகிறார்?

2000 த்தில் வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு 2014 ஆகியும் வரவேயில்லை.

Monday, 23 June 2014

தூசி.

கண்ணில் தூசி விழுந்து விட்டால் பஞ்சை நீரில் நனைத்து, ஈரமான பஞ்சை வைத்து தூசியை எடுக்கலாம்.

விருது.

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்களுக்கு துரோணாச்சாரியா விருது கொடுக்கப்படுகிறது.  ஆனால் இந்த பெயரை அந்த விருதுக்கு வைக்கும் அளவுக்கு துரோணாச்சாரியார் தகுதி பெற்றவனா?  இல்லையே.  ஏகலைவன் கீழ் ஜாதியை சேர்ந்தவன் என்ற காரணத்தால் அவன் வித்தை கற்றுக் கொள்ள கூடாது என்று திட்டமிட்டே அவன் கட்டை விரலை குரு தட்சிணையாக கேட்கிறான்.

அரக்கன், அரக்கி.

நாடகங்களிலும், சினிமாவிலும் அரக்கன், அரக்கி போன்றோருக்கு சுருள் பம்பை தலை, உதட்டின் இரு புறமும் பல், தலையில் கொம்பு என்று காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அழகாகவே இருந்திருப்பார்கள். குறிப்பிட்ட சிலருக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாலேயே இவர்கள் இவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கலாம்.

Plywood

வெப்பமான சீதோஷ்ண நிலையில் வசிப்பவர்கள் பிளைவுட்டால் ஆன இருக்கையில் அமர்வதும், கட்டிலில் படுப்பதும் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.

Sunday, 22 June 2014

மாலை.

கடவுளுக்கு அணிவித்த மாலையை மனிதர்களுக்கு அணிவிப்பதை கௌரவமானதாகவும், தங்களுக்கு கிடைத்த மரியாதையாகவும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் கடவுளுக்கு அணிவித்த மாலையை யாருக்கு அணிவிக்கிறார்களோ, அவருக்கு துன்பமே நிகழும் என்பது என் கருத்து.

சுயம்வரம்.

சுயம்வரம் இப்போதும் பின்பற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் பல லட்சம் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் தான் மாலையிடுவார்கள். இந்தியாவில் இருக்கும் பல லட்சம் ஆண்களுக்கு திருமணமே நடக்காது.

Monday, 9 June 2014

பழனி.

கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றும் திருடர்கள் அளவுக்கு அதிகமாக  இருப்பது பழனி மட்டுமே.

அங்கே கோவிலை சுற்றி இருக்கும் சில கடைகளில் தெரியாமல் பூஜைக்கு சாமான் வாங்கினால், 
பூ 5ரூபாய்,
புஸ்பம் 5 ரூபாய்,
சூடம் 10 ரூபாய்,
கற்பூரம் 10 ரூபாய், 
திருநீறு 10 ரூபாய்,
விபூதி 10 ரூபாய் என்று ஏமாற்றி விடுவார்கள்.

இதை விட கொடுமை மலையில் கோவில் சந்நிதானத்தை சுற்றி பூசாரி போல் வேடமிட்டு திரியும் திருடர்கள்.
10 வருடங்களுக்கு முன் என் தந்தைக்கு வேண்டுதல் நிறைவேற்ற பழனி முருகனுக்கு பால் அபிசேகம் செய்ய சென்றிருந்தோம். அங்கே கோவில் சன்னிதானத்திற்கு உள்ளே நுழையும் முன் ஒருவன் வந்து அபிஷேக சாமான் வைத்திருப்பவர்கள் அந்தந்த பொருளை கொடுங்கள், உள்ளே வந்து அபிஷேகம் செய்ததை பிரசாதமாக வாங்கி கொள்ளுங்கள் என்றான். அங்கே இருந்த பலரும் அவரவரர் கொண்டு வந்தததை கொடுத்தார்கள். நாங்களும் பாலை கொடுத்தோம். பணமும் வாங்கி கொண்டான்.

உள்ளே சன்னிதானத்திற்கு அருகில் சென்றவுடன் அங்கே இருந்தவர்களிடம் பால் அபிஷேகம் செய்ய கொடுத்தோமே என்றோம். அவர்கள் சொன்னது "திருடனை நம்பி ஏன் கொடுக்கிறீர்கள்" என்று.

வெளியே வந்த போது அந்த திருடன் பாலுடன் நின்றுகொண்டு இருந்தான், அபிஷேகம் செய்த பால்  என்று கூறி அந்த பாலில் திருநீறையும், அரளி பூவையும் போட்டு கொடுத்தான். அவனை திட்டி விட்டு வந்தேன்.

தற்போதும்  இது போன்ற திருடர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

சைவம் >அசைவம்.

உலகில் உள்ள அசையும் உயிரினங்களுக்கெல்லாம் எதிரிகளால் தமக்கு ஆபத்து ஏற்படுமோ, அதை எப்படி எதிர்கொள்வது என்ற மரண பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 

இந்த உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கும் இதே மனநிலை இந்த உயிரினங்களை உட்கொள்வதன் மூலம் அதிகம் பரவுகிறது. அதனால் தான் மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளவும், பிறரை அழிக்கவும் பல வழிகளை கையாள்கிறான்.

உலகில் அதிக அளவில் மாமிச உணவு  உண்பவர்களுக்கு இந்த பய உணர்வு அதிகம். அதனால் தான் அமெரிக்கா எல்லா நாடுகளையும் வேவு பார்க்கிறது. உலகை ஆள நினைக்கிறது. சீனா உலக நாடுகளை அடக்க நினைக்கிறது. பல நாடுகளில் தீவிரவாதம் பரவி இருக்கிறது. 

ஆனால் தாவரங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றிற்கு இந்த எண்ணங்கள் இல்லை. அல்லது ஒருவேளை மரங்களுக்கும், தாவரங்களுக்கும்  எண்ணங்கள் இருந்தால் அவை விலங்குகளை விட பல ஆயிரம் மடங்கு குறைவாகவே மரண பயம் இருக்கும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த  பய உணர்வு குறைவு என்பது என் கருத்து. பய உணர்வு இருக்காது என்று சொல்ல முடியாது. அசைவம் சாப்பிடுவோர்களோடு ஒப்பிடும் போது அது மிக குறைவாக இருக்கும்.

மனிதர்களின் வாழ்வியல் சூழ்நிலை மற்றும் பல காரணிகளை பொறுத்து இதில் வேறுபாடு இருக்கும்.


Thursday, 5 June 2014

பள்ளி கூடம்.

 பள்ளிக்கூடங்களுக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் என்றும்  பெயர் வைக்கலாம்.

கருவறை முதல் கல்லறை வரை எதற்கும் பயன்படாத (a+b)2 formulaவை என்ன மசுருக்கு சொல்லி கொடுக்குரானுங்கன்னே தெரியல.