Wednesday 8 October 2014

ஜாதீ

நேற்று நான் விற்கும் தேன் விற்பனைக்காக வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் போட சென்றேன்.
ஒரு வயதான மனிதர் தேனை பற்றி விசாரித்தார். அப்படியே என் ஜாதீ என்னவென்றார்?
பிச்சை எடுக்கும் நான் என்ன ஜாதீயா இருந்தா உனக்கென்ன? பிச்சை போடும் நீ என்ன ஜாதீயா இருந்தா எனக்கென்ன?
சென்னையில் வசித்த போது அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உணவளித்த பலர் என்ன ஜாதீ என்று எனக்கு தெரியாது.
என் ஜாதீக்காரனால் விவசாயம் செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால்
வாகனத்தில் என் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, என் ஜாதீக்காரனால் packing  செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால் விற்கப்பட்டு, என் வீட்டில் சமைத்தால் தான் அல்லது என் ஜாதீக்காரனின் ஹோட்டலில் தான் நான் சாப்பிடுவேன் என்று நினைத்தால் நான் எந்த உணவையும் சாப்பிட முடியாது.
என் ஜாதீக்காரனால் விளைவிக்கப்பட்ட பருத்தியை கொண்டு, என் ஜாதீக்காரனால் துணியாக உருவாக்கப்பட்டு, என் ஜாதீக்காரனால் தைக்கப்பட்டு, என் ஜாதீக்காரன் கடையில் வாங்கி
அணிய வேண்டும் என்று நான் நினைத்தால் என் ஆயுள் முழுவதும் நிர்வாணமாகத் தான் நான் இருக்க வேண்டும்.
என் ஜாதீக்காரனால் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு, என் ஜாதீக்காரனால் கட்டப்பட்ட வீட்டில் தான் நான் குடியிருப்பேன் என்று நினைத்தால் தெருவில் தான் குடும்பம் நடத்த முடியும்.

No comments:

Post a Comment